சோதனைகளை சாதனைகளாக மாற்ற "வெற்றிதரும் நட்சத்திர குறியீடுகள்".
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்"-கவிஞர் கண்ணதாசன் கவி வரிகள் ஆகும்.
வேதனைகளும், சோதனைகளும் இல்லாத மனித வாழ்வு ஏது.?
இந்த வேதனைகளையும், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் எனில்
" மனிதன் தன்னைச் சுற்றி வெற்றிதரும் நட்சத்திர குறியீடுகளை பயன்படுத்தி வாழ்வின் உயர்நிலையை எட்ட முடியும் என்பதே இப்பதிவின் நோக்கமாகும்."
பகவான்
ஸ்ரீ கிருஷ்ணர் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆவார்.
அவர் ரோகிணி நட்சத்திர குறியீடான தேர் வாகனத்தினை எப்பொழுதுமே பயன்படுத்துவார்.
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருச்ஷோத்திரப் போரில் கூட பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பாண்டவர்கள் பக்கம் தேரோட்டியாக கலந்து கொண்டதால் தான் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைத்தது.
அவதார கண்ணன் நட்சத்திர சின்னமான தேர் எப்பொழுதும் அவர் கூடவே இருந்ததால்
"அதர்மம் அழிந்து தர்மம் தலைதூக்கியது."
ராமாயணத்தில்
பகவான் ஸ்ரீ ராமர் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் .
இவர் எப்பொழுதும் தன் கையில் புனர்பூசம் நட்சத்திரத்திற்கு உரிய "வில்' ஐ கையேந்தி சென்றதால் தான் " வில்லை உடைத்து சீதையை திருமணம் செய்துகொள்ள முடிந்தது."இலங்கையில் ராவண வதம் வெற்றிகரமாக நிகழ்ந்தது.
ஸ்ரீவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஐந்தாவது அவதாரமாக கருதப்படும் மிக முக்கியமான அவதாரம் வாமன அவதாரம் ஆகும்.
உலகையே மூன்று அடியால் அளந்த வாமனர் பிறந்தது திருவோணம் நட்சத்திரம் ஆகும்.
அவரது நட்சத்திரம் சின்னம் மூன்று பாதச்சுவடு ஆகும். இதனால்தான் என்னவோ அவர் உலகையே மூன்று அடியால் அதாவது பாதசுவட்டால் அளக்க இயன்றது.
ஸ்ரீராம பக்தரான
ஸ்ரீ ஹனுமானுக்கு மூலநட்சத்திரம். நட்சத்திர சின்னம் சிங்கத்தின் வால் ஆகும். தனது வாலால் இலங்கையை தீமூட்டி அளிக்க நேர்ந்தது.
சைவ சமயக் கடவுளான சிவபெருமான் அழித்தல் தொழில் புரிய உருவாக்கப்பட்டவர் ஆவார்.
ருத்திரன் என்றால் துன்பத்தை நீக்குபவர் என்று பெயர்.
பிரம்மா அக்குழந்தைக்கு ருத்திரன் என்று பெயரிட்டார்.
ருத்ரன் உடைய நட்சத்திரம் திருவாதிரை ஆகும்.
திருவாதிரை நட்சத்திர சின்னம்: மண்டையோடு ஆகும். அதனால்தான் இவர் துன்பத்தை தரும் அரக்கர்களை அளித்து மண்டையோடு ஆக மாற்றும் தொழிலை மேற்கொண்டவர் ஆவர்.
இதுபோன்ற எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். எனவே ஒரு மனிதன் வாழ்வில் வெற்றிபெற அவருடைய நட்சத்திர குறியீடுகளை கண்டறிந்து அதனை தான் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய பொருள்களாகவோ அல்லது நட்சத்திர சின்னங்களை அடிக்கடி பார்க்கக்கூடிய வாய்ப்பை உண்டாக்கினால்.
அதாவது நம்மைச் சுற்றி அவை இருக்கும்படியான ஒரு சூழலை உருவாக்கும் பொழுது அது நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் நல்ல முறையில் அமையும் என்பது ஜோதிட உண்மையாகும்.
நட்சத்திரங்களும் அவற்றிற்குரிய குறியீடுகளும்.
அசுபதி:
குதிரை தலை
பரணி :
யோனி அடுப்பு மற்றும் முக்கோணம் முதலியன.
கார்த்திகை ;
கத்தி, கற்றை, வான், தீச்சுவாலை முதலியன,
ரோகிணி ;
தேர், வண்டி ,கோயில் ஆலமரம், ஊற்றல் ,சகடம் முதலியன,
மிருகசீரிடம் ;
மான்தோல், தேங்காய் கண்
திருவாதிரை :
மனித தலை ,வைரம், கண்ணீர்த்துளி முதலியன,
புனர்பூசம்:
வில்
பூசம்
புடலம்பூ, அம்புக்கூடு, பசுவின் மடி முதலியன,
ஆயில்யம்;
சர்ப்பம், அம்மி ,
மகம் ;.
வீடு, பல்லாக்கு, நுகம்
பூரம்;
கட்டில்கால், கண்கள், அத்தி மரம், சதுரம் மற்றும் மெத்தை முதலியன,
உத்திரம்;
கட்டில் கால், கம்பு ,குச்சி மெத்தை முதலியன,
அஸ்தம் :
கை
சித்திரை:
முத்து புலிகண்
சுவாதி;
பவளம், தீபம்
விசாகம் :
முறம் ,தோரணம், குயவன் சக்கரம் முதலியன,
அனுஷம் :
குடை , முடப்பனை, தாமரை, வில்வளசல் முதலியன,
கேட்டை :
குடை, குண்டலம், ஈட்டி முதலியன,
மூலம்;
அங்குசம், சிங்கத்தின் வால் ,பொற்களம், யானையின் துதிக்கை முதலியன,
பூராடம் ;
கட்டில்கால்
உத்திராடம் ;
கட்டில்கால்
திருவோணம் :
முழக்கோல்,மூன்று பாதச்சுவடு ,அம்பு முதலியன,
அவிட்டம்:
மிருதங்கம், உடுக்கை
சதயம் :
பூங்கொத்து, மூலிகை கொத்து
பூரட்டாதி
கட்டில் கால்
உத்திரட்டாதி
கட்டில்கால்
ரேவதி:
மீன், படகு
மேற்கண்ட 27 நட்சத்திரங்களில் பூரம், பூராடம், உத்திரம், உத்திராடம், பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி ஆகிய ஆறு நட்சத்திரங்களுக்கு கட்டில்கால் நட்சத்திர சின்னமாக வந்துள்ளது.
நம் வாழ்வில் வெற்றி பெற மேற்கண்ட நட்சத்திர சின்னங்களை அதிகமாக பயன்படுத்துவது மூலமாகவோ அல்லது அந்த நட்சத்திர சின்னங்களின் டையாள குறிகளை நம் கூடவே இருக்கும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வாகனம், பேனா,பேக் , அலைபேசி, லேப்டாப் மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் அடிக்கடி பார்க்கும்படி யாகவும் மற்றும் அடிக்கடி பார்ப்பதன் வழியாக மனதின் அடியாழத்தில் அந்த நட்சத்திர சின்ன குறியீடு பதியும் படியாகவும் செய்வதன் மூலம் வாழ்வில் வெற்றி அடையலாம் .
நன்றி!
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd
Teacher & Astrologer
Omsakthi astro online consulting centre,
Karambakkudi.
masterastroravi@gmail.com
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment