மனித வாழ்வில் கிரகங்கள் தரும் மாற்றங்கள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
வாழ்க்கை வித்தியாசமானது.ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. .பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியது.
எல்லோரின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.எல்லோருடைய விடியலும் ஒரே மாதிரியாக அமைவதில்லை.
சிலரின் விடியல் வாழ்வின் சாதனையின் உச்சத்தை தொட்டு பெயரும் புகழும் பெறத்தக்க நாளாக வாழ்வில் மறக்க முடியாத தினமாக அமைந்து விடுகிறது.
சிலரின் விடியல் பேரிழப்பை தரக்கூடிய நாளாக, பெரும் விரய செலவை சந்திக்கும் நாளாக,உயிருக்கு உயிராக நேசித்த ஒருவர் நம்மை விட்டு பிரியும் நாளாக அதாவது வேதனை நிறைந்த நாளாக மாறி விடுகிறது.
நேற்று போல் இன்று இல்லை!
இன்று போல் நாளை இல்லை!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆச்சர்ய படக்கூடிய விஷயங்களை,எதிர்பாராத வெற்றிகளை,வாழ்வில் வெளியில் சொல்ல முடியாத வேதனைகளை, தாங்கி கொள்ள முடியாத பேரிழப்புகளை,நம்ப முடியாத வாழ்க்கை துரோகங்களை,
நிமிர முடியாத அளவுக்கு பெரிய விபத்துக்களை,உடலியல் பலவீனங்களை மற்றும் பெரிய ஏமாற்றங்களையும் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் வெவ்வேரு நபருக்கு கொடுத்து விட்டு போகிறது.
எந்த ஒன்றும் நம்மை பாதிக்காத வரை அது பெரிய செய்தியாக மன கலக்கம் இன்றி சிறிய பச்சாதாபத்துடன் மட்டுமே மனம் நகர்கிறது.அது தனக்கு என்று வரும் போது மட்டுமே பெரிய மன குழப்பத்தை மற்றும் பயத்தை ஜாதகருக்கு கொடுத்து விடுகிறது.
இது போன்ற வெவ்வேறு விதமான மனநிலை கொண்ட மனிதர்கள் ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றி வலம் வருகிறார்கள்.
இது போன்ற வெவ்வேறு விதமான மனநிலை தன்மை கொண்ட மனிதர்கள் பலரை சந்திப்பது மட்டுமல்லாமல் அவர்களுடன் நாமும் வாழ்க்கை பயணத்தை நகர்த்த வேண்டிய கட்டாய நிலைக்கு உட்படுகிறது.
இந்த மாறுபட்ட வாழ்க்கை முறை மற்றும் மாறுபட்ட மனநிலை ஆகிய இவை அனைத்திற்கும் காரணம் கிரகங்கள் நடத்தும் கோளாட்டமே காரணமாக அமைகிறது.
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா!
ஆசை என்னும் தொட்டினிலே ஆடாதாரோ கண்ணா!
கிரகங்கள் தான் மனித வாழ்வை வழி நடத்தி செல்கிறது. சிலரை குப்பையில் இருந்தோரை கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு செல்கிறது.கோபுரத்தின் உச்சியில் இருப்பவரை குப்பைக்கு கொண்டு வருகிறது.,
இயற்கை சுப கிரகங்கள் ஆன
குரு பகவான், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கையை பெரும்பாலான கிரகங்கள் பெற்றுள்ள நிலையில் அந்த கிரக தசைகள் தொடர்ந்து வரும் நிலையில் ஒரு மனிதன் கீழ் மட்ட நிலையில் இருந்தாலும் தனது கடின முயற்சியால் உயரிய நிலையினை அடைந்து விட முடிகிறது.
அதே நேரத்தில் பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் பெரும்பாலான கிரகங்கள் உடன் தொடர்பு கொள்ளும் நிலையில் எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும் அவனை மெல்ல மெல்ல குறைந்து குப்பைக்கு வர வைத்து விடுகிறது.
என்ன தான் யோகமான அமைப்புக்கள் இருந்தாலும் அதனை அனுபவிக்க லக்கனாதிபதியின் வலிமை அவசியமான ஒன்றாகும்.லக்கனாதிபதி வலிமையாக இருந்தால் யோகத்தை அனுபவிக்கவும் இயலும்.அதே நேரத்தில் கடுமையான கஷ்டங்கள் வந்தாலும் அதனை தாங்கி எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கையில் வெற்றி பெறவும் முடியும்.
ஒரு ஜாதகத்தில் சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன் மற்றும் ராகு ஆகிய நான்கு கிரகங்கள் எந்த ஒரு ஸ்தானத்துடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டாலும் அந்த ஸ்தானம் அல்லது அந்த கிரகமானது கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி விடுகிறது.
ஒரு ஜாதகத்தில் குரு பகவான் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் எந்த நிலையில் உள்ள கிரகங்கள் உடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள அந்த கிரகம் ஆனது பாவருடன் சேர்ந்து இருந்தாலும் அல்லது மறைவிடங்களில் இருந்தாலும் அல்லது பாவ கிரகமாகவே இருந்தாலும் அல்லது லக்கன அவ யோகராக இருந்தாலும் அந்த கிரகம் ஆனது அதன் தசையில் யோக பலனை தரக்கூடிய நிலைக்கு மாறி விடுகிறது.
சில குறிப்பிட்ட முக்கிய ஸ்தானங்கள் மற்றும் காரக கிரகங்கள் சிலவற்றை பின்வருமாறு பார்ப்போம்.
ஜாதகத்தில் திருமணத்தை குறிக்கும் ஸ்தானங்கள் 1,2,7,8 மற்றும் திருமண காரக கிரகம் சுக்கிரன்
புத்திர ஸ்தானம் 5 மற்றும் புத்திர காரகன் குரு பகவான்
மகா தன் யோகம் 2,9,11 மற்றும் தன காரகன் குரு பகவான்
உப ஜெய ஸ்தானம் 3,6,9,10,11
சகோதரனுக்கு மூன்றாம் இடம் மற்றும் காரக கிரகம் செவ்வாய் ஆகும்.
தாய்க்கு நான்காம் இடம், காரக கிரகம் சந்திரன் ,
தந்தைக்கு 9 ஆம் இடம் , காரக சூரியன் ஆவார் தொழிலுக்கு 10-ஆம் இடம் காராக் கிரகம் சூரியன் மற்றும் சனி ஆவார் கடன் ,பிணி மற்றும் எதிர்ப்புக்கு ஆறாம் இடம் காரக கிரகம் சனி ,செவ்வாய் ஆகும்.
மாமனுக்கு புதன் பகவான் மற்றும் ஐந்தாம் இடம் ஆகும்.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay
097151 89647
Add another no 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


No comments:
Post a Comment