என் மகனின் படிப்பு எப்படி இருக்கும்?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
" கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்ற எவை"_என்பது வான் புகழ் கொண்ட வள்ளுவரின் அருள் வாக்கு.இங்கு மாடு என்பது செல்வம் ஆக
கருதப்படுகிறது..
"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் தற்கை நன்றே"- என்ற வீரசோழியம் மற்றும் வெற்றி வேட்கை போன்ற நூல்களில் வருகிறது.ஒரு மனிதன் பிச்சை எடுக்கும் நிலை காணப்பட்டாலும் கல்வியை மட்டும் விட்டு. விடக்கூடாது. பிச்சை எடுத்தாவது படிக்க வேண்டும் என்று நாம் தவறாக இதைக் புரிந்து கொள்கிறோம்.
ஆத்திசூடி நூலில் பெண்பால் புலவர் ஔவையார் அவர்கள் ", நூல் பல கல்" என்ற ஒற்றை வரி மூலம் கற்றலின் இன்றியமையாததை குறிப்பிடுகிறார்.
ஒருவர் நன்றாக படிப்பாரா? அல்லது மாட்டாரா ? போன்ற தகவல்களை ஜாதக கட்டத்தில் கல்விக்கு உரிய ஸ்தானமான இரண்டாம் இடம், நான்காம் இடம் மற்றும் ஒன்பதாம் இடம் போன்ற இடங்களையும் மற்றும் அதன் அதிபதிகளையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
இவை தவிர்த்து லக்கனாதிபதியின் வலிமை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
நவ கிரகங்களில் கல்விக்கு வித்யா காரகன் புதன் மற்றும் அறிவு காரக கிரகம் குரு பகவான் ஆவார்.
ஜாதகத்தில் குரு மற்றும் புதன் பகவான் ஆகிய இருவரும் சேர்ந்து நிலையில் அல்லது பார்வை பெற்ற நிலையில் இருந்தாலும் அல்லது வளர்பிறை சந்திரன் கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்.
குறிப்பாக குரு பகவான் உங்கள் குழந்தையின் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் பார்வை கொள்ளும் பொழுது உங்களுக்கு பிறந்த குழந்தை நன்றாக படிக்கும் .
வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் குரு அல்லது புதன் பகவான் நின்ற நிலையில் சுப கிரக பார்வை பெற்ற நிலையில் அல்லது வளர்பிறை சந்திரன் அதி யோகத்தில் இருந்தாலும் அந்த பிள்ளை நன்றாக படிப்பார்.
கல்வி ஸ்தானமான இரண்டாம் இடம் கல்வியறிவு பற்றி அறிய உதவும் முதன்மையான ஸ்தானம் ஆகும்.இந்த இடத்தில் இயற்கை சுப கிரகமான குரு பகவான், வளர்பிறை சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் நின்றாலும் அல்லது இயற்கை சுப கிரகங்களின் பார்வையை பெற்ற நிலையிலும் இருந்து நல்ல யோக தசைகள் நடப்பில் இருப்பின் ஜாதகர் கல்வி அறிவு உடையவராக திகழ்வார்.
வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இயற்கை பாவ கிரகங்கள் ஆன தேய்பிறை சந்திரன்,சனி, செவ்வாய் ,ராகு மற்றும் கேது பகவான் நின்றாலும் அல்லது இயற்கை பாவ கிரக பார்வையை பெற்ற நிலையில் வாக்கு ஸ்தான அதிபதியும் பலவீனம் அல்லது பாவத்துவ நிலையில் இருக்கும் போது நிச்சயமாக உங்கள் குழந்தை படிப்பில் குறைபாடு இருக்கும்.கல்விக்கு உரிய காரக கிரகமான குரு மற்றும் புதன் பகவான் ஆகிய இருவரும் பலவீனம் அல்லது பாவ தன்மையை அடைந்து இருப்பார்.
குரு பகவான் மற்றும் புதன் பகவான் நீசம் அடைந்து பாவ கிரகமான சனி, செவ்வாய், ராகு, கேது, மற்றும் தேய்பிறை சந்திரன் உடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் படிப்பில் பெரிய அளவில் நாட்டம் இருக்காது.
சில நேரங்களில் இரண்டாம் இடம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் லக்கனாதிபதி வலிமை பெற்று இருந்தாலும் ஒரளவு எதிர்நீச்சல் போட்டு கல்வி படிப்பை நடுத்தரமான நிலையில் படித்து முடிப்பார்.அதே நேரத்தில் லக்கனாதிபதியும் பலம் இழந்த நிலையில் மழைக்கு கூட பள்ளி கூடம் ஒதுங்க மாட்டார்.
நன்றி
For online appointment
Cell & WhatsApp & Gpay no
097151 89647
Another cell no 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
.jpeg)

No comments:
Post a Comment