உங்கள் ஜாதகம் எப்படி இருந்தால் நல்லது.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜாதகம் பார்க்க வரும் ஜாதகரின் பிறப்பு விவரங்களை இட்டு ஜாதகம் திரையில் வந்தவுடன் இவர்கள் எந்த பிரச்சினைக்காக நம்மிடம் ஜாதகம் பார்க்க வந்து இருக்கிறார்கள் ?
என்பதை எளிதாக என்னால் ஒரு சில நிமிடங்களில் கணித்து விட முடியும்.
நீங்கள் இந்த பிரச்சினைக்காக என்னிடம் ஜாதகம் பார்க்க வந்து இருக்கிறீர்கள் என்று கூறியவுடன் அவர்களுக்கு அவரது ஜாதகத்தின் மீதும் மற்றும் ஜோதிடராகிய என் மீதும் ஒரு முழு நம்பிக்கை வந்து விடுகிறது.
பிறகு லக்கனம் அதன் அதிபதி இவர்கள் ஜாதகத்தில் எப்படி உள்ளார்கள் என்பதை ஆய்வு செய்து ஜாதகர் எப்படிப்பட்டவர் மற்றும் ஜாதகரின் குணாதிசயங்களை எடுத்து சொல்லுவதன் மூலம் பலன் பார்க்க வருபவர்களுக்கு நம் மீது அசாத்திய நம்பிக்கை வந்து விடுகிறது.
பிறகு தசா புக்திகளை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது மனித வாழ்வியல் சம்பவங்களை துல்லியமாக எடுத்துரைக்க முடியும்.தசா புக்திகளை கொண்டு ஒரு மனிதன் வாழ்வில் எந்த எந்த கால கட்டங்களில் என்ன மாதிரியான நிகழ்வுகள் நடைபெற்றது என்பதை துல்லியமாக கூறும் போது பலன் பார்க்க வரும் ஜாதகர் முழுமையாக ஆர்வமாகி விடுவார்கள்.
ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாகக் கொண்டு தசா புக்தி பலாபலன்கள் துல்லியமாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு தசா புக்தி பலன்கள் அவரவர் லக்கினத்திற்கு ஏற்ப கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்ற கிரகங்களுக்கு ஏற்ற மாதிரியே தசாபுத்தி பலன்களும் அமைகிறது
தசா புக்தி பலன்கள் கொண்டு ஒரு ஜாதகர் எந்த கால கட்டங்களில் கடுமையான கஷ்டங்களை சந்தித்து இருப்பீர்கள்.எந்த கால கட்டங்களில் யோகம் தரும் தசைகள் நடைபெற்று வாழ்வின் இன்ப சுகங்களை அனுபவித்து இருப்பீர்கள் போன்ற பலன்களை துல்லியமாக கூறமுடியும்.
சிலர் பிறப்பிலிருந்து இறப்பு வரை கஷ்டப்பட்டு உழைத்து கஷ்டபட்டே சாக கூடிய துர்பாக்கிய நிலைக்கு அவர்களுக்கு பிறப்பிலிருந்து இறப்பு வரை அவ யோக தசா புக்திகளே தொடர்ந்து நடைபெற்று இருக்கும்.
சிலருக்கு பிறப்பிலிருந்து இறப்பு வரை தொடர்ந்து யோக தசைகளே நடந்த நிலையில் born with silver spoon ஆக பிறப்பிலிருந்து இறப்பு வரை யோகத்தை அனுபவிக்க கூடிய யோகம் நிறைந்த ஜாதகராக திகழ்வார்கள்.
சிலருக்கு குறிப்பிட்ட கால கட்டம் வரை அவயோக தசைகள் நடந்து பிறகு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு நல்ல யோக தசைகள் நடக்கும் நிலையில் பிறந்து நாற்பது வயது வரை கஷ்டப்பட்டு பிறகு நன்முறையில் உழைத்து முன்னேறி வாழ்வின் பிற்பகுதியில் பெரும் யோகத்தை அனுபவிக்க கூடிய தன்மையை தருகிறது.
ஒருவர் ஜாதகத்தில் 1,2,7,8 ஆம் இடங்களில் சனி, செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூன்று பாவ கிரகங்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் சிலருக்கு 36 வயதுக்கு மேற்பட்டோர் ஆக இருந்தாலும் இதுவரை கட்டாயம் திருமணம் நடைபெற்று இருக்காது என உறுதியாக ஜாதக பலன் கூறலாம்.
புத்திர ஸ்தானத்தில் சனி செவ்வாய், ராகு தொடர்பு ஏற்பட்டு புத்திர காரகன் குரு பகவான் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை என்பதை உறுதியாக பலன் அளித்து விட இயலும்.வேறு வகையில் சுப கிரக தொடர்பு ஏற்படாத வரை அல்லது யோகம் தரும் தசை நடப்பில் வராதவரை ஜாதக பலனில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
இதேபோல் எந்த ஸ்தானத்தில் சனி செவ்வாய் மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள அந்த ஸ்தானம் தொடர்புடைய பலன் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படலாம் அல்லது பலன் கிடைக்காமல் கூட போய் விடலாம்.இவை அந்த ஸ்தான அதிபதி,காரக கிரகம் மற்றும் நடக்கும் தசாபுத்தி ஆகியவற்றை பொறுத்து அமைகிறது.
அதேநேரத்தில் இயற்கை சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள அந்த ஸ்தானம் தொடர்புடைய நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும்.அந்த ஸ்தான அதிபதி ,காரக கிரகம் மற்றும் நடக்கும் தசா புக்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பலனில் கூடுதல் அல்லது குறைவு ஏற்படும்.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay
. 097151 89647
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்),
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.


No comments:
Post a Comment