Monday, 8 October 2018

கோசார கிரக நிலைகளும் மற்றும் ஜெனன கால கிரக நிலைகளும்-( 1 )

கோசார கிரக நிலைகளும் மற்றும் ஜெனன கால கிரகநிலைகளும்.- ( 1 )


                       

கிரகங்கள் படுத்தும் பாடு - ( 137 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

          ஒவ்வொறு குழந்தையும் பிறப்பதற்கான இடம் , நேரம் மற்றும் நபரை தானே தேர்ந்தெடுத்து பிறக்கிறது.கலவியில் ஈடுபடும் தந்தையின் விந்து செல்கள் ஆயிர கணக்கில் வெளிப்பட்டாலும் எல்லா விந்து செல்களும் பெண்ணின் அண்ட செல்லுடன் இணைந்து கருமுட்டையை உருவாக்கிவிடுவதில்லை.

           ஏதோ ஒரு வீரியமிக்க விந்து செல் மட்டுமே அண்ட செல்லோடு இணைந்து கருமுட்டையை உருவாக்கிவிடுகிறது.இவ்வாறு கருமுட்டை உருவான பிறகு எத்தனை வீரிய விந்து செல்கள் வெளிப்பட்டாலும் கருமுட்டைகள் நுழைந்துவிட முடியாது.

        இந்த உருவான நேரத்திலிருந்து சாதகருக்கான கிரகநிலை பாதிப்பானது ஆரம்பிக்கிறது.இக்கரு உருவாகும் நேரத்தினை ஜெனன நேரமாக கொண்டு கணித்து பலன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் அவனது சாதகபலன் துல்லியமாக கிடைக்கும்.

         ஆனால் இவை இயலாத காரியமாகும்.யாராலும் கரு உருவாகும் நேரத்தை  துல்லியமாக கண்டறிய முடியாது.இது படைப்பின் இரகசியமாகும்.நான் பதிவின் ஆரம்பித்திலே கூறியதுபோல .ஒவ்வொறு பிறப்பும் குறிப்பிட்ட காரணத்திற்காக ஒரு குறிப்பிட்ட நேரம் ,இடம் மற்றும் பெற்றோரை தேர்ந்தெடுத்தே பிறப்பு எடுக்கிறது.குழந்தையானது கருவாகி வளர ஆரம்பிக்கும்போது பிரபஞ்ச கதிர்களின் தாக்கம் அக்குழந்தைக்கு கிடைத்துவிடுகிறது.

          கரு உருவாகும் நேரத்தை சரியாக நம்மால் கணிக்க இயலாமையால்தான் அக்குழந்தையானது இப்பிரபஞ்சத்தை வெளியில் தொடும் பிறப்பு நேரத்தையே ஜெனனநேரமாக கொண்டு சாதகம் கணிக்கப்படுகிறது.அக்குழந்தை ஜெனிக்கும்போது பால்வீதியில் அடிவானத்தில் தொடும் அன்றைய நட்சத்திரங்களை ஜெனன நட்சத்திரமாக கொண்டும் அப்பொழுது வான வீதியில் அமைந்துள்ள கிரகநிலைகளை அதன் பாகை அடிப்படையாக கொண்டு பணிரெண்டு ராசிகளில் அடைக்கப்பட்டு ஜெனன சாதகம் கணிக்கப்படுகிறது.

                          

          ஜெனன சாதகத்தை கொண்டு ஒருவருக்கு சாதக பலன் அளிக்கும்போது அன்றைய நிலையில் வான வீதியில் உள்ள கிரகநிலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

        உதாரணமாக 
ஜெனன காலத்தில் சனிபகவான் எங்கு இருக்கிறார் ?  சாதகம் பார்க்கும் காலத்தில் அதே சனிபகவான் கோசார நிலையில் எந்த ராசியில் இருக்கிறார் ? என்பதை கவனித்து சனி கிரகம் சார்ந்த பலனை அளிக்க வேண்டும்.

        ஜெனன காலத்தின் சனிபகவான் இருந்த வீடு அவை பெற்ற சாரம்,பார்வை மற்றும்,சேர்க்கை நிலை ஆகியவற்றை கவனித்து பிறகு அன்றைய நிலையில் நவகோள்கள் இடம்பெறும் கட்டநிலையில் சனிபகவான் எந்த வீட்டில் இருக்கிறார்.அன்றைய நிலையில் அவரை பார்க்கும் மற்றும் சேர்க்கை பெறும் கிரகநிலைகள் ஆகியவற்றை கணக்கிட்டு பலனளிக்கப்படுகிறது.

        அதாவது ஜெனன மற்றும் கோசார கிரக நிலைகள் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து சோதிடரின் அனுபவத்தோடு இணைத்து பார்த்து இறைஆசியோடு பலனளிக்கப்படவேண்டும்.

         இந்த  கோசார அடிப்படையில் சனிபகவான் சுற்றி வரும்போது அவரவர் ராசிக்கு அதாவது  சந்திரபகவானுக்கு பணிரெணடில் வரும்போது ஒருவருக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது.

     சனிபகவான் ஒரு ராசியை கடக்க இரண்டரை ஆண்டை எடுத்துக்கொள்வதால் பணிரெண்டாமிடத்தில் வரும்போது விரய சனி என்றும் ,ராசியை அடையும்போது ஜென்மசனி என்றும் ,இரண்டாமிடத்தில் வரும்போது பாதசனி என இந்த மூன்று ராசிகளை கடப்பதையே நாம் ஏழரை சனி என அழைக்கிறோம்.

        இதேபோல ராசிக்கு நானக்காமிடத்திற்கு வரும்போது அர்த்தாஷ்டம சனி எனவும்,ஏழாமிடத்திற்கு வரும்போது கண்டசனி எனவும் மற்றும் எட்டாமிடத்திற்கு வரும்போது அட்டமசனி எனவும் அழைக்கப்படுகிறது.

       இங்கு ஏழரை சனி எனும்போது ஏழரை ஆண்டுகளுமே இன்னல்களை தருவதில்லை. ஆனால் சிலநேரங்களில் சில ராசிகளுக்கு  ஏழரை சனி காலத்தில் நன்றாக இருப்பதுபோல இருந்துவிட்டு கடைசியில் ஏழரை மாதமோ அல்லது ஏழரை நாழிகையோ ஒரு உலுக்கு உலுக்கி கஷ்டங்களை தந்து வாழ்வின் எல்லா அனுபவங்களையும் பெறவைப்பார்.

                             

        இந்த ஏழரை சனி மூலம் அதிக இன்னல்களை அனுபவிப்பதன் மூலம் வாழ்வின் உண்மைநிலைகளையும் மற்றும் உண்மையான உறவுகளையும் ,நண்பர்களையும் இனம் காண உதவுகிறது.

        அதேபோல எல்லா  ராசிகளுக்கும் ஒரே மாதிரியான மற்றும் ஒரே அளவான கஷ்டங்களையும் தந்துவிடுவதுமில்லை.இந்த ஏழரை சனியானது சனியின் பகை வீடுகளான செவ்வாய் மற்றும் சூரியனை அதிபதிகளாக கொண்ட வீடுகளுக்கு சற்று அதிக இன்னல்களை தருகிறது.

        இதேபோல ஏழரை சனி நடைபெறும்போது சந்திரதிசை நடந்தாலோ அல்லது சனிபகவான் ஆனவர் சந்திரசாரம் பெற்றிருந்தாலோ அல்லது சந்திரனோடு அரவுகளான ராகு அல்லது கேது பகவான் சேர்ந்துள்ள நிலையில் ராகு அல்லது கேது திசை நடந்தாலோ  இந்த நிலையான சாதகருக்கும் சற்று கூடுதலான கஷ்டங்களை ஏழரை மற்றும் அட்டம சனி தரக்கூடிய சூழல் அமைகிறது.

         இதனால் மற்ற ராசி காரர்களுக்கு இன்னல்களை தராது என பதிவிடவில்லை.மேற்கண்ட சூழல்களில் சற்று கூடுதலான கஷ்டங்களை தருகிறது என்பதை எனது அனுபவத்தில் கண்ட உண்மைகளை எல்லோறும் அறிந்து கொள்ள பகிர்கிறேன்.

           மனிதனாக பிறந்த அனைவரும் அவரவர் கர்மபலனை அனுபவித்தே தீரவேண்டும்.இதில் இன்பம் மற்றும் துன்பம் என்பது அவரவர் மனநிலையை பொறுத்த விஷயம் ஆகும்.அவரவர் செய்யும் பூர்வபுண்ணியப்படியும் மற்றும் நிகழ்காலத்தில் எண்ணும் நல்ல சிந்தனை,சேவை மற்றும் இறைவழிபாடு அடிப்படையில் விதிபலனை மாற்றியோ அல்லது தாங்கிகொள்ளக்கூடிய மனவலிமையையோ இறைவன் அளிக்கிறார் என்பதே உண்மை ஆகும்.

தொடரும்..

(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாகவே எந்த நாட்டில் நீங்கள் இருந்தாலும் பெறலாம்.நீங்கள் தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம்.)

  செல்
  740 257 08 99
   97 151 89 647
வாட்ஸ்அப்
  97 151 89 647

                                    

அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமழ்நாடு.

No comments: