பஞ்ச மஹா புருஷ யோகங்கள்
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
கிரகங்கள் படுத்தும் பாடு
ஒருவரது சாதகத்தில் சூரியன் , சந்திரன், ராகு ,கேது தவிர ஏனைய ஐந்து முக்கிய கிரகங்களான குரு,புதன்,சுக்கிரன் ,சனி மற்றும் செவ்வாய் ஆகியவை ஜென்ம லக்கனத்திற்கோ அல்லது இராசி்க்கோ உச்சம்,ஆட்சி போன்ற வகையில் பலமடைந்து கேந்திர ஸ்தானமான 1,4,7,10 நிற்கும் போது இந்த பஞ்ச மஹா புருஷ யோகங்களை சாதகருக்கு அதன் உரிய தசையில் வேறு ஸ்தான அடிப்படையில் அக்கிரகங்கள் பங்க படாமல் இருப்பின் கொடுக்கிறது.
ஹம்ச யோகம்
குரு பகவான் ஒருவரது சாதகத்தில் உச்சம் ,ஆட்சி போன்ற வகையில் பலமடைந்து லக்கனத்திற்கு அல்லது ராசிக்கு கேந்திர ஸ்தானங்களில் நிற்கும் போது சாதகருக்கு ''ஹம்ச யோகத்தினை '' தருகிறது .
இந்த ஹம்ச யோகமானது கடகம்,விருச்சிகம்,தனுசு மற்றும் மீனம் ராசிகளுக்கு மிகுதியாக யோக பலன்களை தனது திசை காலங்களில் சிறப்பாக கொடுக்கிறது.
கடக லக்கனத்திற்கு லக்கனத்திலே குரு பகவான் உச்சம் பெற்றிருந்தாலும் அல்லது ஒன்பதாம் இடமான மீனத்தில் ஆட்சி பெற்று நிற்கும் போது யோக பலன்களை சிறப்பாக தருகிறது .
அதேநேரத்தில் கடக லக்கனத்திற்கு ஆறாம் இடமான தனுசுவில் ஆட்சி பெற்ற நிலையில் குரு பகவான் நின்று ஹம்ச யோகத்தினை பெற்றிருந்தபோதிலும் லக்கனத்திற்கு ஆறாம் இடம் ருண ரோக ஸ்தானம் என்பதால் யோக பலனில் பங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு .
இதேபோல விருச்சிகம் லக்கனத்திற்கு இரண்டாம் இடமான தனுசுவில் ஆட்சி பெற்று நின்று ஹம்ச யோகத்தினை தருவதை விட ஐந்தாம் இடமான மீனத்தில் ஆட்சியும்,ஒன்பதாம் இடமான கடகத்தி்ல் உச்சமோ பெற்றிருப்பது மிகுந்த யோக பலன்களை கொடுக்கிறது .
இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் தனகாரன் குரு பகவான் ஆட்சி பெற்றிருப்பது ''காரக பாவ நாஸ்தியை '' கொடுக்கிறது .
தனுசு லக்கனத்திற்கு லக்கனத்திலே ஆட்சி பெற்ற நிலையிலும்,நான்காம் இடமான மீனத்தில ஆட்சி பெற்ற நிலையிலும் மட்டுமே யோக பலன்களை தர வாய்ப்பு உண்டு .இவை தவிர லக்கனத்திற்கு எட்டாம் இடத்தில் உச்சம் பெறுவது அஷ்டம ஸ்தானம் என்ற வகையில் ஹம்ச யோகத்தில் யோக பங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மீன லக்கனத்திற்கு லக்கனத்தில் ஆட்சியும்,ஐந்தாம் இடமான கடகத்தில் உச்சம் பெற்ற நிலையில் மிகுந்த யோக பலன்களை கொடுக்கிறது .
இதேபோல பத்தாம் இடமான தனுசுவில் ஆட்சி பெற்றிருப்பின் ஹம்ச யோகத்தினை தருகிறது .
பத்திர யோகம்
ஒருவரது சாதகங்ளி்ல் புதன் பகவான் உச்சம் ,ஆட்சி போன்ற வகையில் பலமடைந்து லக்கனத்திற்கு அல்லது ராசிக்கு கேந்திர ஸ்தானங்களில் நிற்கும் போது இவ்வித யோகத்தினை சாதகருக்கு வழங்குகிறது.
ரிஷபம் ,மிதுனம் ,
கன்னி ,துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளுக்கு புதன் பகவான் மேற்கண்ட வகையில் பலமடைந்து நிற்கும் போது மிகுந்த யோக பலன்களை சாதகருக்கு வழங்குகிறது.
ரிஷபம் லக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் உச்சம் ,ஆட்சி போன்ற புதன் பகவான் மிகுந்த யோக பலன்களை கொடுக்கிறது .இரண்டாம் இடத்தில் அமரும் புதன் பகவானும் யோக பலன்களை தருகிறது .
மிதுனம் லக்கனத்திற்கு புதன் பகவான் லக்கனத்திலே ஆட்சி பெறும் நிலையிலும், நான்காம் இடத்தில் உச்சம் ,ஆட்சி பெறும் நிலையிலும் மிகுந்த யோக பலன்களை தருகிறது .
கன்னி லக்கனத்திற்கு லக்கனத்திலே புதன் பகவான் உச்சம் ,ஆட்சி போன்ற வகையில் பலமடைந்து இருப்பது பத்ர யோகத்தினை சிறப்பாக தரும் .
இதேபோல பத்தாம் இடத்தில் பலம் அடைந்த புதன் பகவானும் பத்ர யோகத்தினை சிறப்பாக தருகிறது.
மகரம் லக்கனத்திற்கு ஒன்பதாம் இடத்தில் உச்சம் ,ஆட்சி போன்ற வகையில் பலமடைந்துள்ள புதன் சிறப்பாக யோக பலன்களை தரும் .
இதேபோல கும்பம் லக்கனத்திற்கு அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தில் புதன் உச்சம் ,ஆட்சி போன்ற வகையில் பலம் பெறாமல் ஐந்தாம் இடமான மிதுனததில் பலமடைந்த புதன் பகவான் மிகவும் சிறப்பாக பத்ர யோக பலன்களை கொடுக்கிறது .
மாளவ்யா யோகம்
ஒருவரது சாதகத்தில் சுக்கிரன் பகவான் உச்சம் ,ஆட்சி போன்ற வகையில் பலமடைந்து லக்கனத்திற்கு அலலது ராசிக்கு கேந்திர ஸ்தானங்களில் நிற்கும் போது ''மாளவ்யா யோகத்தினை சாதகருக்கு வழங்குகிறது .
குறிப்பாக ரிஷபம்,
மிதுனம் ,கன்னி விருட்சகம்,மகரம் போன்ற ராசிகளுக்கு மிகுதியாக யோக பலன்களை தனது திசை காலங்களில் கொடுக்கிறது .
ரிஷபம் லக்கனத்திற்கு லக்கனத்திலே ஆட்சி பெற்ற சுக்கிரன் மிகுந்த யோக பலன்களை தருகிறது .அதேநேரத்தில் ரிஷபம் லக்கனத்திற்கு ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன் ருண ரோக ஸ்தானம் என்ற வகையில் மாளவ்யா யோக பலன்களை சிறப்பாக தருவது கிடையாது .
மிதுனம் லக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன் சிறப்பாக மாளவ்யா யோகத்தினை தருகிறது .
கடக லக்கனத்திற்கு நான்கு,பதினொன்றாம் இடத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன் பகவானை விட ஒன்பதாம் இடத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் மிகுந்த மாளவ்யா யோகத்தினை தருகிறது.
விருச்சிகம் லக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் ,கும்பம் லக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன் பகவான் மிகுந்த யோக பலன்களை தருகிறது .
சச யோகம்
ஒருவரது சாதகத்தில் சனி பகவான் உச்சம் ,ஆட்சி போன்ற வகையில் பலமடைந்து ஜென்ம லக்கனத்திற்கு அலலது இராசிக்கு கேந்திர ஸ்தானங்களில் நிற்கும் போது சாதகருக்கு ''சச யோகத்தினை '' தருகிறது .
இவ்வித யோகமானது குறிப்பாக மகரம்,கும்பம்,ரிஷபம்,
மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு தனது தசை காலங்களில் மிகுந்த யோக பலன்களை தருகிறது .
மகரம் லக்கனத்திற்கு லக்கனத்திலே ஆட்சி பெற்ற சனி பகவான்,கும்பம் லக்கனத்திற்கு லக்கனத்திலே ஆட்சி பெற்ற சனி ,ஒன்பதாம் இடத்தில் உச்சம் பெற்ற சனி பகவானும் மிகுந்த சசக யோகத்தினை தருகிறது .
மிதுனம் லக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் உச்சம் பெற்ற சனி பகவானும், எட்டாம் இடத்தினை விட ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெற்ற சனி பகவானும் மிகுந்த யோக பலன்களை சாதருக்கு தருகிறது .
கன்னி லக்கனத்திற்கு ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்ற சனி பகவானை விட ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்ற சனி சிறப்பாக யோக பலன்களை தருகிறது .
ருசக யோகம்
ஒருவரது சாதகங்களி்ல் செவ்வாய் பகவான் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து லக்கனத்திற்கு அல்லது ராசிக்கு கேந்திர ஸ்தானங்களில் நின்றால் சாதகருக்கு ''ருசக யோகத்தினை '' தருகிறது .
இவ்வித யோகமானது மேஷம்,ரிஷபம் ,கடகம்,
சிம்மம்,விருச்சிகம் மற்றும் தனுசு ராசிகளுக்கு தனது திசை காலங்களில் மிகுந்த யோக பலன்களை கொடுக்கிறது .
மேஷ லக்கனத்திற்கு எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் ,பத்தாம் இடத்தில் உச்சம் பெற்ற செவ்வாய் பகவானை விட லக்கனத்திலே ஆட்சி பெற்ற செவ்வாய் லக்கனாதிபதி என்ற வகையில் மிகுந்த யோக பலன்களை தனது தசைகளில் தருகிறது .
ரிஷபம் லக்கனத்திற்கு ஏழு,பன்னிரெண்டாம் இடத்திற்கு ஆட்சி பெற்ற செவ்வாய் பகவானை விட ஒன்பதாம் இடத்தில் உச்சம் பெற்ற செவ்வாய் மிகுந்த யோக பலன்களை தனது தசை காலங்களில் தருகிறது .
கடக லக்கனத்திற்கு ஐந்து ,பத்தாம் இடத்தில் உள்ள செவ்வாய் தனது தசா காலங்களில் மிகுந்த யோக பலன்களை தருகிறது .
விருச்சிகம் ,மகரம் லக்கனத்திற்கு லக்கனத்திலே ஆட்சி ,உச்சம் பெற்ற செவ்வாய் தனது தசா காலங்களில் ருசக யோகத்தினை சிறப்பாக தருகிறது .
நன்றி !
(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற ,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)
வாட்ஷ் அப்
9715189647
செல்
9715189647
7402570898
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc .MA .BEd
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் ,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் .
My email
masterastroravi@gmail.com
My blogspot .Google search
AstroRavichandran .
blogspot .com .
AstroRavichandransevvai
.blogspot.com
astrosmartnotes .blogspot .com
.................
No comments:
Post a Comment