பில்லி சூனியம், பேய் பிசாசு மற்றும் கண்திருஷ்டி பற்றி ஜோதிடவியலின் கருத்து என்ன?
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
எதிரிகள் இல்லாத மனிதர்களே கிடையாது. நேர்மையாக தத்தம் வேலையை செய்துகொண்டு யாருக்கும் கெடுதல் இல்லாமல் வாழ்பவர்களுக்கும் எதிரிகள் உண்டு.
"தனக்கென வாழாமல் பிறருக்காக வாழும் தன்னலமற்ற மனிதர்களுக்கும்" இவ்வுலகில் அவர் புகழ் கண்டு பொறாமை அடைந்த எதிரிகள் உண்டு.
மகாத்மா என்று அழைக்கப்படும் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேக்களுக்கும் உண்டு.
உலகையே உய்விக்க வந்த இறைதூதர் என்று அழைக்கப்படும் இயேசு நாதரை சிலுவையில் அறைந்த யூதர்களும் உண்டு.
"தான் உண்டு,
தன் வேலை உண்டு" என்று இருப்பவருக்கும் எதையும் கண்டுக்காம இருக்கிறானே என்று நினைத்து பொறாமைப்படும் மனிதர்களும் உண்டு.
ஒரு சில மனித மனம் "தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும்" என்ற பெருந்தன்மை படைத்தவர்களும் உண்டு.
எதிரியை நேர்மையாக களத்தில் சந்திக்க இயலாத திராணியற்றவர்கள் மறைமுக வழிகளில் தாக்க சில சூழ்ச்சிகளையும் அல்லது கெட்ட சக்திகளையும்(bad deeds) பயன்படுத்துவதும் உண்டு.
கெட்ட சக்திகள் என்பது பில்லி, சூனியம் போன்ற எதிர்மறை அலைகளை மனிதர் மீது செலுத்தி அவர்களை நிலைகுலையச் செய்வது ஆகும் அல்லது மனதளவில் பொறாமை உணர்வோடும், ஏக்கத்தோடு பார்க்கும் பார்வை ஆகும்.
அதே நேரத்தில் ஒரு மனிதரை தீயசக்திகள் கொண்டு ஏவி அவனது/அவளது வெற்றி வாய்ப்பை குறைத்துவிடலாம் என்றோ அல்லது
நோய் நொடிகளை உண்டாக்கலாம் அல்லது உயிரை பறித்து விடலாம் எனில் இவ்வுலகில் அனைவரும் அவர்களது எதிரிகளுக்கு ஏவி விட எத்தனிப்பார்கள். எனவே எதிரிகளை கம்பு, கத்தி, அரிவாள் மற்றும் துப்பாக்கி கொண்டு தாக்க முயலாமல் இது போன்ற கெட்ட சக்திகளை ஏவிவிட பார்ப்பார்கள். மந்திரவாதிகளுக்கும் சமூகத்தில் வெகு மதிப்பு இருக்கும். நல்ல வருமானமும் அவர்களுக்கு உண்டாகும்.ஆனால் அப்படி இறைவன் படைக்கவில்லை.
ஆதலால் இந்த எதிர்மறை தன்மைகொண்ட கெட்ட சக்திகள் எல்லோர் மீதும் ஏவி விட முடியாது. ஆனால் அதே நேரத்தில் அந்த கெட்ட சக்திகள் இல்லை என்றும் தவிர்த்துவிட முடியாது.
என்ன சார் குழப்றீங்க? ஒன்னு கெட்ட சக்திகள் இருக்கு என்கிறீர்களா? அல்லது இல்லை என்கிறீர்களா? என வினா எழுப்ப தோன்றும்.
ஆனா இந்த கெட்ட சக்திகள் உண்டுன்னும் சொல்லலாம் அல்லது இல்லை என்றும் சொல்லலாம்.
"உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை என்பவர்களுக்கு இல்லை"
என்னதான் சார் சொல்ல வாரீங்க? என என்னை பார்த்து கேள்வி கேட்பது எனக்கு புரிகிறது.
ஏன் இப்படி சொல்றேன்னா இந்த கெட்ட சக்திகள் அவரவர் மனநிலை மற்றும் அவரவர் சாதகத்தில் உள்ள கிரக நிலையை சார்ந்தது.
இல்லைன்னு சொல்லிக்கிட்டு தைரியமா உலா வருபவருடைடைய ஜாதகத்தில நல்ல நேர்மறை எண்ணங்களை தரக்கூடிய கிரக அமைப்புகள் அமைந்து மனநிலை காரகன் சந்திரபகவான் சனி, ராகு கேது போன்ற பாவ கிரக சேர்க்கை அற்று அல்லது சனி, ராகு போன்ற பாவ கிரக சேர்க்கை இருந்தாலும் இயற்கை சுப கிரகமான குரு ,சுக்கிரன் தனித்த புதன் தொடர்பு ஏற்பட்டிருந்தாலும் மற்றும் சந்திரன் பகவான் உச்சம் ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருந்தாலும் மற்றும் நல்ல உகந்த சுபத்துவம் அடைந்த கிரக தசைகளுடன் நடப்பில் இருப்பினும் மற்றும் கோச்சார பலன்களான அஷ்டம சனி, ஏழரைச்சனி வராமல் சிறப்பாக இருக்கக்கூடிய பட்சத்தில் அவர் மீது எவ்வித தீய சக்தி ஏவினாலும் அவரை பாதிப்பதும் இல்லை. அவர் அதை நம்பும் மனநிலையில் இருப்பதுமில்லை. இது போன்றவர்கள் "பேயாவது, பூதமாவது
பில்லியாவது, சூன்யமாவது என்று எதிர் வாதம் செய்வார்கள். அவர்களுடைய வெற்றிக்கு அவர்களது தனிப்பட்ட திறமையை காரணம் என்று மார் தட்டிக் கொள்வார்கள். உண்மையில் இது போன்ற அமைப்பு உடையவர்களுக்கு மேற்குறிப்பிட்ட கெட்ட சக்திகள் எதுவும் அவர்களை சென்று பாதிப்பதில்லை.
அதே நேரத்தில் ஒருவருக்கு உகந்த நல்ல கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இல்லாத சூழலில் அவருக்கு கோச்சார அடிப்படை ஏழரை ,அஷ்டம சனி காலங்கள் நடப்பில் இருந்து சுபத்துவம பெறாத ராகு தசை , மறைவிட ஆறு மற்றும் எட்டாம் இட அதிபதி தசாபுத்திகள் நடப்பில் இருக்கும் பட்சத்தில் அவரது மனநிலை காரகன் சந்திரனும் சனி மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்கள் உடைய தொடர்பில் பெற்றிருக்கக் கூடிய சூழலில் அவர் மீது மற்றவர்கள் ஏவக்கூடிய கெட்ட சக்திகள் அந்த குறிப்பிட்ட காலம் வரை அவரை தாக்கி நிலைகுலையச் செய்வதும் உண்டு.
இதுபோன்ற உகந்த தசா அமைப்புகள் இல்லாத காலங்களில் அவருடைய மன நிலையில் ஒருவிதமான மனஅழுத்தம்(Stress) ஏற்பட்டு அந்த மன அழுத்தத்தின் விளைவாக பேய் பிடித்தது போல் உலறி திரிபவரும் உண்டு. சில நேரங்களில் முழுவதும் நிறைவு பெறாத ஆசையோடு அற்ப ஆயுளில் இறந்தவர்களுடைய ஆவிகள் இதுபோன்ற அமைப்பு உடையவர்களை உடலில் புகுந்து தமது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும் அமைப்பும் உண்டு.
எனவே இந்த பேய், பிசாசு பில்லி மற்றும் சூனியம் போன்ற கெட்ட சக்திகள் என்பது அவரவர் ஜாதகத்தில் உகந்த நல்ல தசா அமைப்புகள் மற்றும் கோச்சார பலன்கள் உள்ள காலங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை அதே நேரத்தில் கோச்சார மற்றும் தசா பலன்கள் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகள் சரியாக அமையாத பட்சத்தில் மேற்கண்ட கெட்ட சக்திகள் பாதிப்பு உண்டு .அதாவது சில நேரங்களில் மனமே நமக்குள் கற்பனையை அதாவது தேவையில்லாத கற்பனையை உண்டாக்கி பயம் கொள்ளச் செய்து நம்மை நிலைகுலைய செய்து விடுவதும் உண்டு.
இதேபோல மற்றவருடைய பொறாமை மற்றும் கண்ணெரிச்சல் போன்ற பாதிப்புகளும் மேற்கண்ட வகையிலான அடிப்படையில் அமைந்தது ஆகும்.
மற்றவர்களுடைய ஏக்க பார்வை நம்மை பாதித்துவிடுவதும் உண்டு. இதனையே நாம் கண்திருஷ்டி என்கிறோம். கண் திருஷ்டியும் எல்லோரையும் ஒரே அளவில் பாதித்துவிடும் என்று சொல்வதற்கில்லை. எந்த பாதிப்பும் அவரவர் சாதக கோச்சார, தசா மற்றும் கிரக அமைப்பைப் பொறுத்தது.
பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் மேற்கொண்ட வகையிலான பில்லி, சூனியம், பேய் ,பிசாசு மற்றும் கண் திருஷ்டி போன்ற வகையிலான பாதிப்பில் ஏதாவது ஒன்று அவரது ஜாதகத்திலுள்ள கிரக நிலை, கோச்சார மற்றும் தசா அமைப்புகள் சரி இல்லாத காலங்களில் வந்தாலும் அவரது ஜாதகத்தில் வழிநடத்திச் செல்லக்கூடிய கேப்டனாக வழங்கக்கூடிய லக்கினாதிபதி வலுவாக இருக்கக்கூடிய பட்சத்தில் அவற்றையெல்லாம் இந்தக் குறிப்பிட்ட காலம் வரை தாங்கி எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்று விடுவார்கள்.
யார் ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் இழந்து எதிரி ஸ்தானமான ஆறாமிடம் வலுப்பெற்ற சூழலில் மேற்கண்ட வகையில் பாதிப்புகள் உகந்த தசா அமைப்புகள், கோச்சார பலன் மற்றும் கிரக அமைப்புகள் இல்லாத சூழலில் வந்தால் அதனை எதிர்த்துப் போராடும் திராணியற்று அந்த குறிப்பிட்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் தன்மையற்று நிலைகுலைந்து போவார்கள்.
மேற்குறிப்பிட்ட அனைத்து தீயசக்திகள் பாதிப்பிலிருந்து அந்த குறிப்பிட்ட காலங்களில் வெளிவர அல்லது தாக்குப்பிடித்து நிற்க அனைவரும் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ ராம பக்தரான ஆஞ்சநேயரை வழிபடுதல் மிகச்சிறந்த ஒன்றாகும்.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & டெலிகிராம்
9715189647
செல்
9715189647
7402570899
My website
www.astroravichandransevvai.in
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment