ஊழ்வினை பற்றி அறிய.....
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
மனித வாழ்வினை செப்பனிடவும் மற்றும் வடிவமைக்கவும் கிரகங்களின் பங்கு அலாதியானது.
ஒரு மனிதன் என்னவாக ?யாராக ? எப்படியாக மாற வேண்டும் என்பதை கிரகங்கள்தான் முடிவு செய்கிறது.
அதேபோல ஒரு மனிதன் பிறக்கும் இடம் , நபர் மற்றும் சூழ்நிலையை முடிவு செய்வதும் ஊழ்வினைப் பயனே முதல் முக்கிய காரணமாகும்.
எனவேதான் சிலப்பதிகாரம்
"ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்" என்கிறது.
இக்காலகட்டத்தில் நல்லவர்கள் கஷ்டப்படுவதற்கும், கெட்டவர்கள் நன்றாக இருப்பதற்கும் ஊழ்வினை பயன் ஒரு மிக முக்கிய காரணமாக அமைகிறது.
ஒருவரது ஊழ்வினை பயனை முழுவதும் அறிந்து கொள்ள அறிந்து கொள்ள முயல்வது என்பது அமானுஷ்ய செயல் ஆகும். இதனை ஜாதக கட்டத்தில் ஓரளவு புரிந்து கொள்ள பூர்வ புண்ணிய ஸ்தானமான "ஐந்தாமிடம்" பேருதவி புரிகிறது.
""பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்"
---திருக்குறள்
ஒருவர் தன் வாழ்வில் அடையக்கூடிய பெருமைக்கும் மற்றும் சிறுமைக்கும் அதாவது உயர்வுக்கும் மற்றும் தாழ்வுக்கும் அவன் செய்யும் செயலே உரைகல்லாக அமைகிறது.
ஒருவர் செய்யும் செயலே அவரது வினைப் பயனாக அமையும் .அது மறுபிறப்பை தொடர்கிறது என்பதை வள்ளுவரும், இளங்கோ அடிகளும் அழகுபட எடுத்தியம்புகிறார்கள்.
ஒருவர் வினைப் பயனுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு இப்பிறப்பில் நாம் பிறந்தாலும் வாழ்வினை முற்றிலும் முடிவு செய்வது ஊழ்வினை பயன் மட்டும் என்று கருதிவிட முடியாது.
இப்பிறப்பில் நாம் செய்யும் நல்வினை மற்றும் தீவினைக்கு ஏற்ப ஒரு வினைப்பயனை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ செய்துகொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டிருக்கிறது.
பொதுவாக ஜாதக கட்டத்தில் ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணியஸ்தானம், புத்திரஸ்தானம்,
புத்தி ஸ்தானம், உயர்கல்வி பெறும் ஸ்தானம் மற்றும் அம்மான் வர்க்கங்களை (மாமன்) தெரிந்துகொள்ள உதவும் ஸ்தானம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் சுபத்துவம் பெறாத நிலையில் நின்று , ஐந்தாம் இட அதிபதியும் பலவீனமாகி நின்றால் பூர்வ புண்ணிய பலன் கெட்டு விட்டது எனலாம்.
பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தில்
சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது... போன்ற பாவ கிரகங்கள் நின்று வேறு எந்த வகையிலும் சுபத்துவம் பெறாத நிலையில் அதாவது இயற்கை சுப கிரகமான குரு வளர்பிறைச் சந்திரன் புதன் மற்றும் சுக்கிரன் போன்றவை தொடர்பு இல்லாத நிலையில், ஐந்தாம் இட அதிபதி மறைவு ஸ்தானமான 6, 8 போன்ற இடங்களில் நின்றாலோ அல்லது நீசம் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் போன்ற நிலையில் பலவீனப்பட்டு சுபத்துவம் பெறாத நிலையில் பூர்வ புண்ணிய ஸ்தானம் கெட்டு விட்டது எனலாம்.
பூர்வ புண்ணிய ஸ்தானம் கெட்டு விட்டால் ஒரு நபர் அவரது பூர்வீக இடத்தைவிட்டு குறைந்தபட்சம் 300 கிலோ மீட்டர் தள்ளிச் சென்று வசிப்பது உகந்த சூழலை ஏற்படுத்தித் தரும்.
பூர்வபுண்ணிய ஸ்தானம் ஒருவருக்கு கெட்டுவிட்டால் பூர்வீகத்தில் மனையில் வசிக்கும் யோகம் கிடையாது. பூர்வீகச் சொத்துக்கள் ஒரு சிலருக்கு அழிந்துவிடும் அல்லது பூர்வீக சொத்து இருந்தாலும் வம்பு ,வழக்கு மற்றும் பிரச்சனையை தரும் அல்லது பூர்வீக சொத்து இருந்தும் பயனில்லாத நிலையில் இருக்கும்.
ஐந்தாம் இடம் புத்திர ஸ்தானம் என்பதால் அடுத்த தலைமுறையை உருவாக்கக்கூடிய மிக உன்னத பணியை செய்யும் ஸ்தானம் புத்திர ஸ்தானமான 5-ஆம் இடம் ஆகும்.எனவே ஜாதகத்தில் ஐந்தாமிடம் மிக முக்கியமான ஒரு ஸ்தானமாகும்.
புத்திர நிலையினை கணிக்க லக்கினம் மற்றும் ராசிக்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடம் அதனுடன் தொடர்புடைய கிரகங்கள்(பார்வை மற்றும் சேர்க்கை) ஐந்தாம் இட அதிபதியான புத்திர ஸ்தானாதிபதி மற்றும் புத்திர காரகன் குரு ஆகிய மூன்று நிலைகளில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
புத்திர ஸ்தானத்தை ஆய்வுசெய்ய தம்பதிகள் இருவரது ஜாதகத்தையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.
ஒருவருக்கு புத்திரபாக்கியம் பற்றி ஆய்வு செய்ய மேற்கூறிய மூன்று வகைகளில் ஒரு வகைக்கு 33.33 மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டு ஆய்வுசெய்து பார்க்கப்பட வேண்டும்.
பொதுவாக புத்திர தோஷம் என்பது பெண் குழந்தைகளே பிறக்கும் நிலை,
புத்திரம் பிறவாத நிலை மற்றும் புத்திரர் பிறந்ததும் அவர்களால் பயன் பெற இயலாத நிலை.
மேற்கண்ட மூன்று வகை எந்த நிலை என்பது அவர்களது ஜாதகத்தில் உள்ள புத்திரதோஷத்தின் வலிமையைப் பொருத்து அமைகிறது.
மூன்று நிலைகளில் ஏதேனும் இரண்டு நிலைகள் பாதிக்கப்படாமல் இருந்தால் கட்டாயம் புத்திர பாக்கியம் உண்டு.
மூன்று நிலைகளில் ஏதேனும் ஒரு நிலை மட்டும் பாதிக்கப்படாமல் இருந்து ஏனைய இரண்டு நிலைகள் பாதிக்கப்பட்டு இருப்பின் பெண் குழந்தைகளே பிறக்கும் நிலை உருவாகும்.
மூன்று நிலைகளும் பாதிக்கப்பட்டு இருந்தால் புத்திர பாக்கியம் இல்லாத நிலை உருவாகும்.
பொதுவாக ஒரு ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இட அதிபதி இயற்கை சுப கிரகங்களாக இருந்து உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று
கேந்திர கோணங்களில் அமர்ந்து இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட அமைப்பு பெற்றவர்கள் புத்திரர்களாலும், பூர்வீக சொத்தாலும் மற்றும் புத்தியாலும் பிழைக்க கூடிய யோகம் பெற்றவர்கள் ஆவார்கள்.
பூர்வீக ஸ்தானத்தில் சனி அமர்ந்தால் புத்திர தடை, பூர்வ புண்ணியத்தில் வசிக்க முடியாத சூழல், அல்லது பூர்வபுண்ணிய சொத்துக்களை இழக்க கூடிய சூழல், புத்தியில் கலக்கம், மாமன் வர்க்கத்திற்கு ஆகாது.
"ஐந்தில் சனி இருந்தால் அழைத்து வைக்கவே மாமன் இல்லை
மிஞ்சியே இருந்தாலும் மீள்வான் ஒரு மாமன்" என்ற சொல்லோடை உள்ளது . மேற்கண்ட பலன்கள் இயற்கை சுப கிரகங்கள் பார்க்கப்பட பலன் மாறுபடும்.
ஐந்தாம் இடத்தில் ராகு இருந்தால் புத்திர தோஷம், புத்தியில் சூழ்ச்சித் தன்மை, பூர்வீக சொத்து வசிக்க முடியாத சூழல் அல்லது பூர்வீக சொத்தில் வில்லங்கம் போன்றவை ஆகும்.
ஐந்தாம் இடத்தில் குருபகவான் இருப்பின் "காரகோ பாவ நாஸ்தி" என்ற வகையில் உகந்தது அல்ல. ஏனைய வகையில் ப புத்தியால் கிடைக்கக்கூடிய ஆன்மீகத் தன்மை, பூர்வபுண்ணிய சொத்து லாபம் உண்டாகும் முதலியன.
ஐந்தில் வித்தைக்காரன் புதன் இருந்தால் கதை கவிதை, கட்டுரை, நாடகம், திரைக்கதை மற்றும் வசனம் போன்றவை எழுதும் சூழல் உண்டாகும். அவ்வாறு எழுதி புகழ் வரும் வாய்ப்பும் கிடைக்கும்.
ஐந்தில் சுக்கிரன் இருப்பது கலைத்தன்மையான நடனம், நாட்டியம், ஓவியம் மற்றும் சிலைவடித்தல் அழகாக எழுதுதல், ஹோட்டல் போன்ற விஷயங்களில் நாட்டம் , வண்டி வாகன யோகம் மற்றும் வீடு கட்ட யோகம் உண்டாகும் .
ஐந்தாம் இடத்தில் சூரிய பகவான் அமர்ந்திருப்பது ஆட்சி செய்யும் அதிகாரம், ஆணையிடும் தன்மை, மற்றவர்களை வழி நடத்திச் செல்லக்கூடிய தன்மை ,ஆன்மீகத் தன்மை மற்றும் சான்றோர்களுக்கு நிகரான பண்புகளைப் பெற்று விளங்குதல் போன்றவை உருவாகும்.
ஐந்தாம் இடத்தில் செவ்வாய் பகவான் இருந்து சுபத்துவம் பெற்ற நிலையில் மருத்துவராக கூடிய வாய்ப்பு, வீரதீர பராக்கிரம செயல்களில் ஈடுபாடு விவசாயத்தில் நாட்டம் மற்றும் சகோதர உடைய ஆதரவு கிட்டும்.
ஐந்தாம் இடத்தில் கேது அமைந்திருப்பது ஆன்மீகத் தன்மை ,புத்திர தடை உருவாகும் , புண்ணிய சக்திகள் , மற்றும் குலதெய்வ வழிபாடு உருவாகும்.
ஐந்தாம் இடத்தில் சந்திரன் அமர்ந்திருப்பது, நல்ல மனநிலை, கற்பனை உணர்வு , மற்றும் காதல் உணர்வு போன்றவை உண்டாகும்.
மேற்கண்ட அனைத்தும் பொதுப்பலன்கள் ஆகும்.
ஐந்தாம் வீடு அதிபதி லக்கனத்தில் அமர்ந்தால் பூர்வ புண்ணிய யோகம், புத்திர பலன் பெறக் கூடிய யோகம், புத்தியால் பிழைக்கக்கூடிய யோகம் உருவாகும்.லக்னாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி இலக்கனத்திலும் அமர்வது நல்ல சுப பரிவர்த்தனை ஆகும். இதனால் லக்கனயம் மற்றும் ஐந்தாம் இடம் பலம் பெற்று சாதகர் ஐந்தாம் இடத்துக்குரிய பலன்கள் அனைத்தும் சிறப்பாக கிடைக்கும்.
பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி இரண்டாம் இடத்தில் அமர்ந்தால் புத்திரர்களால் தனலாபம் உண்டாகும்.தான் கொண்ட புத்தியால் பிழைக்க கூடிய வாய்ப்பு உண்டாகும். வாக்கு சாதுர்யம் உண்டாகும், கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடிய யோகம் உண்டாகும் மற்றும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும்.
இரண்டாம் இட அதிபதி மற்றும் ஐந்துக்குடையவர்கள் பரிவர்த்தனை பெற்று இருப்பது "சுப யோக பரிவர்த்தனை" ஆகும்.
மூன்றாம் இடம் மறைவு ஸ்தானம் ஆக இருந்தாலும் அது முழு மறைவிடமாக கருதப்பட முடியாது. இதனை வீரிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது. 5-க்குடையவர் மூன்றாமிடத்தில் அமரும்பொழுது தன் கொண்ட புத்தி கற்பனை உணர்வுகளால் கதை கவிதை கட்டுரை எழுதி தலையங்கம் எழுதி புகழ் அடைய கூடியவற்றை பெறுவர்.3 மற்றும் 5 ம் இட பரிவர்த்தனையும் மிகுந்த யோக பலனை மேற்கண்ட வகையிலான நற் பலன்களை வழங்குகிறது.
5-க்குடையவர் நாலாம் இடத்தில் அமரும் போது தன் சுகம் கல்வியால் சுகம் ,வண்டி வாகன சுகம், பூர்வபுண்ணிய சுகம் மற்றும் புத்திர சுகம் போன்றவை அடையக்கூடிய யோகத்தை பெற வேண்டும் இவ்வித பரிவர்த்தனை கேந்திர, கோண பரிவர்த்தனை ஆகும்.அதன் திசை காலங்களில் மிகுந்த யோக பலனை சாதகருக்கு வழங்குகிறார்.
நான்கு மற்றும் ஐந்துக்கு உடையவரது பரிவர்த்தனை
" கேந்திர கோண பரிவர்த்தனை" ஆகும்.
5-க்குடையவர் ஆனவர் ஐந்தாம் இடத்தில் இருந்து ஆட்சி பெற்ற நிலையில் அமரும்பொழுது மிகுந்த யோக பலனை ஜாதகருக்கு வழங்குகிறது.
ஐந்துக்குடையவர் மறைவிட ஸ்தானமான ஆறாமிடத்தில் அமரும்பொழுது புத்திர தடை பூர்வபுண்ணிய இல்லாத சூழல், பூர்வீக சொத்தில் பிரச்சனை மற்றும் எதிர்ப்புகளை உருவாக்கும்.
ஐந்து மற்றும் ஆறாம் இடத்து அதிபதி பரிவர்த்தனை பெறுவது "அவயோக பரிவர்த்தனை" ஆகும். இந்த பரிவர்த்தனை ஐந்தாமிடத்தின் ஆதிபத்திய பலன்களை கெடுதல் செய்கிறது.
ஐந்தாம் இட அதிபதி, ஏழாம் இடத்தில் அமர்வது காதல் மணம் மற்றும் கணவன்-மனைவிக்கிடையே அன்னியோன்யமான சூழல், நல்ல மனைவி அமைதல் மற்றும் நன்மக்களைப் பெறுதல் போன்ற நற்பலன்களை தரும்.
5 மற்றும் 7-ஆம் இடத்து அதிபதி பரிவர்த்தனை ஆனது கேந்திர கோண பரிவர்த்தனை ஆகும். இது சுப பரிவர்த்தனை ஆகும்.
5-க்குடையவர் எட்டாம் இடத்தில் அமரும்போது பூர்வீக சொத்தில் வில்லங்கம், வம்பு, வழக்கு மற்றும் பிரச்சனைகளைத் தரும், புத்திரர்களால் தடைகளையும் தொல்லைகளையும் கொடுக்கும்.
ஐந்து மற்றும் 8-க்குடையவர் பரிவர்த்தனை " அவயோக பரிவர்த்தனை" ஆகும்.
5-க்குடையவர், ஒன்பதாம் இடத்தில் அமரும் பொழுது பூர்வபுண்ணிய யோகம் ,புத்திரத்தால் யோகம் ,தான தர்ம குணம் மற்றும் புத்தியால் பிழைக்கும் யோகம் உண்டாகும்.
5 மற்றும் 9 குடைவர் பரிவர்த்தனை
"கோண பரிவர்த்தனை" ஆகும் .இது சுப பரிவர்த்தனை என்று அழைக்கப்படுகிறது.
5-க்குடையவர் பத்தாமிடத்தில் அமரும்போது புத்திரத்தாலும், பூர்வ புண்ணியத்தாலும் பலன் பெறும் யோகம்.தான் பெற்றுள்ள புத்தியால் செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
5 மற்றும் 10 க்கு உடையவர் பரிவர்த்தனை "கேந்திர கோண பரிவர்த்தனை" ஆகும்.
5-க்குடையவர் பதினோராம் இடத்தில் அமரும் பொழுது புத்திரத்தால் லாபம் பெறும் சூழல் உருவாகும்.பூர்வ புண்ணிய சொல்லால் லாபம் அடையும் சூழல் உருவாகும்.
ஐந்து மற்றும் பதினொன்றாம் இட அதிபதி பரிவர்த்தனையானது யோக பரிவர்த்தனை ஆகும்.
5-க்குடையவர் விரய ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்தில் அமரும்போது முத்திரைத்தாள் ஆதரவு தரவில்லை பூர்வ புண்ணிய சக்தியை இழக்கும் சூழல் புத்தியால் பிழைக்க இயலாத நிலை போன்றவை உருவாகலாம்.
ஐந்து மற்றும் பன்னிரண்டாம் இட பரிவர்த்தனை "அவயோக பரிவர்த்தனை ஆகும்.
மேற்கண்ட அனைத்தும் ஒரு விதமான பொதுப் பலன்களே ஆகும்.சில நேரங்களில் இயற்கை சுபகிரக பார்வையைப் பொறுத்து பலன்களில் மாறுபடலாம்.
நன்றி!
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & டெலிகிராம்
9715189647
செல்
7402570899
9715189647
My website
www.astroravichandransevvai.in
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
No comments:
Post a Comment