மன நல பாதிப்புகளுக்கு உட்படுபவர் யார்?
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை
இன்றைய உடலால் வரும் வியாதிகளை விட மனதால் வரும் வியாதிகள் தான் அதிகம் ஆகும்.
மனதளவில் திடமான உறுதியான நம்பிக்கை உடன் நேர்மறை எண்ணங்கள் உடையவர் வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் மனச்சோர்வு கொள்ளாமல் எளிதாக வெற்றி பெறுவார்..
ஒரு சாதகத்தில் தன்னம்பிக்கையின் அளவுகோலாக செயல்படுவது லக்கனாதிபதி ஆகும். லக்கினாதிபதியானவர் உச்சம்,மூல திரிகோணம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் கேந்திர கோணங்களில் நின்று வலுவான அமைப்பை பெற்றவர்கள் எந்த நிலையிலும் தன் நிலை மாறாத திடமான உறுதியான நம்பிக்கையுடன் வாழ்வின் போக்கை எதிர்கொள்வார்கள்.
ஜாதகத்தில் மன நிலைக்கும் , சந்திரன் பகவானுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு.அமாவாசை மற்றும் நிறைமதி காலங்களில் மனநல விடுதிகளில் பைத்திய கார தன்மை அதிகரித்துள்ளது.
மனமானது நாம் விழிக்கும் முன்பே அவை விழித்து கடந்த காலத்தில் நடந்த துரோகங்கள், அவமானங்கள், சண்டைகள் மற்றும் சச்சரவுகள் போன்றவற்றை நினைவுக்கு கொண்டு வந்து மனதை காயப்படுத்தும்.
பொதுவாக ஒரு ஜாதகத்தில் மனநிலை காரர்கள் என்று அழைக்கக்கூடிய சந்திர பகவான் எந்த விதத்திலும் கெடக்கூடாது சந்திர பகவான் தேய்பிறை சந்திரனாக இருந்து பாவிகளான சனி, செவ்வாய் மற்றும் ராகு போன்றவற்றின் தொடர்பை பெற அதன் தசா புத்திகளின் பாதிக்கப்படும் அமைப்பைப் பெறுகிறது.
ஜாதகத்தில் சந்திரனுடன் சனி, ராகு மற்றும் செவ்வாய் போன்றவை தொடர்பு கொள்ளும்பொழுது அதாவது ஒரு ராசிக்குள் எட்டு பாகையில் அவை நெருக்கமாக இருக்கும் போது வேறு எந்த விதத்திலும் சுபத்துவம் கிடைக்காத நிலையில் சனி தசையில் அல்லது ராகு திசையோ அல்லது சந்திர திசையோ மனமானது பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையை அடையும்.
ஒரு ராசியில் சந்திரன் பகவான் சூரியன் பகவானுடன் சேர்ந்து அமாவாசை யோகம் பெற்று தேய்பிறை சந்திரனாக இருந்து பாவ 🌙 சந்திரனாகி அந்த ராகு நெருக்கமாக இணைந்த நிலையில் மற்றும் செவ்வாயும் அந்த வீட்டில் நெருக்கமான நிலையில் இருக்கும் சம சப்தமாக சனிபகவான் பார்க்கக்கூடிய நிலையில் வேறு எந்த விதத்திலும் சுபத்துவம் பெறாத நிலையில் சனி ராகு செவ்வாய் போன்ற ஏதாவது ஒரு ராசியில் நடக்கலாம். அல்லது புக்தி காலங்களில் மனநல பாதிப்புக்கு சாதகமாக இருப்பார்கள்.
கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி காலங்களில் மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.அதிலும் குறிப்பாக ஏழரை சனி காலங்களில் ஜென்ம சனி காலங்களில் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்லும் காலங்களில் சந்திரன் பாதிக்கப்பட்ட நிலையில் ஜாதகர் மனதளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவார்கள்.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறைகளைப் பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
Email ; masterastroravi@gmail.com
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd
(ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர்,
கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment