இரண்டாம் இடம் ஓர் ஆய்வு
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் ஜாதக கட்டத்தில் இரண்டாம் இடம் என்பது தனம், வாக்கு, குடும்பம் மற்றும் நேத்திரம் (பார்வை) ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ள உதவும் ஸ்தானம் ஆகும்.
இரண்டாம் இடம் என்பது எந்த வித வரையறைக்குள் அடங்காத ஸ்தானம் ஆகும்.
இவை கேந்திர,கோண ,மறைவிட மற்றும் உப ஜெய ஸ்தானம் ஆகிய எந்த கட்டுக்குள் அடங்காத ஸ்தானம் ஆகும்.
இவை ஒரு மாறுபட்ட ஸ்தானமாகும். இவை தன பாக்கிய மற்றும் லாபம் ஆகிய (2,9,11) மூன்று திரிகோண ஸ்தானம் ஆகும்..இவை தன ஸ்தானத்திற்கு தொடர்பு கொண்ட ஏனைய பிற ஸ்தானங்கள் ஆகும்.
தன ஸ்தானத்திற்கு காரக கிரகம் குரு பகவான் ஆவார் .குரு பகவான் ஆனவர் தன ஸ்தானத்தில் இருந்தாலும் தன ஸ்தானத்தை பார்த்தாலும் அல்லது தனாதிபதியோடு சேர்க்கை பெற்ற நிலையில் இருந்தாலும் ஜாதகருக்கு மிகுந்த தன யோகத்தை கொடுக்கிறது.
தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன்,ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் இடம்பெறாமல் அல்லது சனி , செவ்வாய் ஆகிய இருவரும் தனித்து அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் பார்வை செய்யாமல் இயற்கை சுப கிரகமான குரு பகவான், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற இயற்கை சுப கிரகங்கள் சேர்க்கை பெற்ற நிலையில் நின்றாலும் அல்லது பார்வை பெற்ற நிலையில் இருந்தாலும் தன ஸ்தானமானது சுப தன்மை அடைந்து நல்ல பலனை தரக்கூடிய நிலைக்கு உட்படுகிறது.
இதேபோல் தன காரகன் குரு பகவான் எவ்வித பங்கம் அடையாமல் சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையிலோ அல்லது எவ்வித கிரக தொடர்பு இன்றி தனித்த நிலையிலான குரு பகவான் இருந்தால் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும்.
இரண்டாம் இடத்தை கொண்டு ஒருவரது குடும்ப வாழ்க்கை எப்படி அமையும் என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது.இரண்டாம் இடத்தில் மேற்குறிப்பிட்ட பாவ கிரகங்கள் இடம் பெறாமல் சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் ஜாதகருக்கு நல்ல குடும்பம் வாழ்க்கை அமைகிறது.
மாறாக பாவ கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை அமைவதில் கால தாமதம் ஏற்படுகிறது.அல்லது குடும்பத்தை விட்டு பிரிந்து தூரத்தில் வசிக்க கூடிய நிலையினை தருகிறது.
இரண்டாம் இட அதிபதி பாவ கிரகங்கள் ஆக இருந்தால் தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இல்லாமல் இருப்பது நல்லது.
இரண்டாம் இட அதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்தால் அவை இரண்டாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பது சாதகருக்கு நல்ல பலனை தரும்.
ஒருவர் கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடிய தன்மை படைத்தவரா ? என்பதை அவருடைய ஜாதகத்தில் இரண்டாம் இடத்தை ஆய்வு செய்து பார்த்தால் நிச்சயமாக புலப்படும்.
ஒருவருடைய கண் பார்வை அவருடைய ஜாதகத்தில் இரண்டாம் இடத்தை ஆய்வு செய்து பார்த்தால் புலப்படுகிறது. பொதுவாக இரண்டாம் இடத்தில் சூரிய பகவான் இடம் பெற்றிருந்தால் அவர்களுக்கு கண் பார்வை கோளாறு ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டாகிறது.
இரண்டாம் இடத்தில் வளர்பிறை சந்திரன் இருப்பின் அவர் குளிர்ந்த பேச்சுக்கு உரியவர் ஆவார்.
இரண்டாம் இடத்தில் செவ்வாய் பகவானை பெற்று இருந்தால் முரட்டுத்தனமாக பேச்சுக்கு உரியவர் ஆவார்.
இரண்டாம் இடத்தில் குரு பகவான் இருந்தால் கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடியவராகவும் மற்றவர் மனது நோகாத வண்ணம் இனிமையாக பேசக் கூடியவராக திகழ்வார்.
இரண்டாம் இடத்தில் சனி பகவான் இருந்தால் உண்மைக்கு புறம்பான விஷயங்களை மற்றவர் நம்பும்படி பேசக் கூடியவராக இருப்பார்.
இரண்டாம் இடத்தில் ராகு பகவான் இருந்தால் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் கபடதாரியான பேச்சுக்கு உரியவர்.
இரண்டாம் இடத்தில் கேது பகவான் வாக்குப் பலிதம் உடையவர் ஆவார்.
இரண்டாம் இடத்தில் புதன் பகவான் இருந்தார் நல்ல பேச்சு வன்மை மிக்கவராக இருப்பார்.
இரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் நன்றாக கலகலவென்று பேசக்கூடியவராக இருப்பார்.
மேற்குறிப்பிட்ட இந்த பலன்கள் அனைத்தும் பொது பலனே ஆகும். அந்த கிரகத்துக்கு வீடு கொடுத்தவன் மற்றும் பார்வை செய்யும் கிரகங்கள் ஆகியவற்றை பொறுத்து பலனில் மாற்றம் ஏற்படும்.
இரண்டாம் இடம் ஒரு பொது மாரக ஸ்தானமாக கருதப்படுகிறது.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay no
097151 89647
My another cell no
7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments:
Post a Comment