Tuesday, 3 November 2026

 துல்லியமாக ஜாதக பலன்களை கணிக்க...



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை?


  ஒரு ஜாதக பலன்களை துல்லியமாக கணிக்க முதலில் பிறப்பு விவரங்கள்  சரியாக இருக்க வேண்டும்.சரியான பிறப்பு விவரங்களை  கொண்டு ஜாதகத்தை கணித்து எடுக்க வேண்டும்.சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று நிமிட வித்தியாசத்தில்  லக்கனம் மாறுவதாக இருந்தால் அந்த ஜாதகர் லக்கன சந்தியில் பிறந்து இருக்க வேண்டும்.


  லக்கனம் மாறும் நிலை இருந்தால் அதாவது லக்கன சந்தியில் பிறந்து இருந்தால் அந்த ஜாதகத்தில் எது சரியான லக்கனம் ?  என்பதை கண்டுபிடிக்க தசா புக்திகளை கொண்டு ஜாதக பலன்களை சொல்லி பார்க்க வேண்டும்.எந்த லக்கன பலன் சரியாக இருக்கிறதோ அந்த லக்கனத்தை ஜென்ம லக்கனமாக கொண்டு ஜாதக பலனை அறிய இயலும்.


என்னிடம் ஜாதகம் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவர் சிம்ம லக்கனம் அவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் புதன் பகவான் மற்றும் பதினொன்றாம் இடத்தில் குரு பகவான் உள்ளார்.லக்கனத்தில் சனி பகவான் அமர்ந்த நிலையில் உள்ளார்.இரண்டாம் இடத்தில் ராகு பகவான், எட்டாம் இடத்தில் கேது பகவான், ஆறாம் இடத்தில் சூரியன், சுக்கிரன்,ஒன்பதாவது இடத்தில் சந்திரன் உச்சம் மற்றும் பன்னிரெண்டாம் இடத்தில் செவ்வாய் பகவான் உள்ளார்.


   நான் அவரது ஜாதகத்தை பார்த்து "ஐந்துக்கு உடைய குரு பகவான் பதினொன்றாம் இடத்துக்குரிய புதன் பகவான்  ஆகிய இருவரும் தங்களுக்குள் இடம் மாறி நின்று பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார்கள். சிம்ம லக்கினத்திற்கு குரு தசை யோக திசை எனவே குரு தசையில் நிறைய சம்பாரித்து இருப்பீர்கள். சனி திசையில் கடுமையாக கஷ்டப்படுவீர்கள் " என்று கூறினேன்.


     அவர் "சார்  நான் ஜாதக பலன் பார்த்த எல்லா ஜோதிடர்களும்  அப்படியே பலன் சொன்னாங்க .ஆனால் நான் குரு தசையில் தான் கடுமையான கஷ்டங்கள் மற்றும் நஷ்டங்களை சந்தித்தேன். இப்ப நடக்கிற சனி தசையில் நிறைய சம்பாதித்து உள்ளேன்" என்றார் .


  அப்படின்னா உடனே எனக்கு அவருடைய சாதகத்தில் உள்ள லக்னத்தில் சந்தேகம் வந்தது.அவருடைய லக்கனத்தை கன்னி லக்கனமாக கொண்டு பலன் பார்த்தால் கன்னி லக்கினத்திற்கு குரு  தசை பாதக மற்றும் மாரக அதிபதி என்பதால்.கடுமையான கஷ்டங்களை ஜாதகருக்கு கொடுத்திருக்கும்.ஆனால் சனி தசை லக்கன யோகர் என்பதால் மிகப்பெரிய யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கும்.அதன்படி ஜாதகருக்கு சனி தசை மிக சிறப்பாக இருந்தது.


இவ்வாறாக  லக்கனம் தவறாக இருந்தால் பலன்கள் அனைத்தும் மாறி விடும்.எனவே ஜாதக பலன் பார்க்க முற்படும் போது முதலில் லக்கனம் மற்றும் அதன் அதிபதியை முழுவதும் நன்றாக கவனிக்க வேண்டும்.இவ்விரண்டும் சரியாக அமைந்து விட்டால் வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் எதிர் நீச்சல் போட்டு  வெற்றி பெற்று விட முடியும்.


   உங்கள் லக்கனத்திற்கு எந்த தசை யோக மற்றும் அவ யோக தசை என் கண்டறிய வேண்டும்.யோகத்தை தரக்கூடிய தசைகள் யோகத்தை தரும் வகையில் உள்ளதா ? என்பதை கவனிக்க வேண்டும்.


 ஒரு சமயம் யோகத்தை தரக்கூடிய தசைகள்  சனி, செவ்வாய் ராகு மற்றும் கேது பகவான் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் அவை யோகத்தை தரக்கூடிய தசைகளாக  இருந்தாலும்  யோகத்தை தராது.அதே போல அவ யோகத்தை தரக்கூடிய தசைகள் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு, வளர்பிறை சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் அவை அவ  யோக தந்தை தரக்கூடிய தசையாக இருந்தாலும் அவை யோகத்தை தரக்கூடிய தசையாக மாறுகிறது


ஒரு குறிப்பிட்ட பலனை துல்லியமாக எடுக்க

ஸ்தானம், அதன் அதிபதி மற்றும் காரக பலன்கள் என் மூன்று வகைகளில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


 குறிப்பாக ஒருவர் தனக்கு வரக்கூடிய மனைவி பற்றி அறிய களத்தின் ஸ்தானமான ஏழாம் இடத்தையும்,அதன் அதிபதி ஆன களத்திர ஸ்தான அதிபதியையும் மற்றும் காரக கிரகமான களத்திர காரகன் சுக்கிரன் ஆகிய மூன்று வழிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு நடக்கும் தசை புக்தி மற்றும் லக்கனாதிபதி வலிமை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு துல்லியமான. ஜாதக பலன்களை கண்டறிய உதவுகிறது.


தசை நடத்தும் கிரகம் ஆனது அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி உள்ளதா ? பாவ வர்க்கம் ஏறி உள்ளதா? என்பதை ஆய்வு செய்து பலன் அறிய உதவுகிறது.சில நேரத்தில் ராசியில் ஒரு கிரகம் கெட்டு அல்லது பாவ தன்மையை அடைந்து இருந்தும்  ஒரு தசை நல்ல பலனை தந்தால் அதற்கான காரணம் அந்த தசை நடத்தும் கிரகம் ராசியில் கெட்டு இருந்தாலும் அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி இருந்தால் நல்ல பலனை தந்து இருக்கிறது என்பதை உணரலாம்.


நன்றி 


For online appointment 


CELL & WhatsApp & Gpay 


 097151 89647 


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன் 


  சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: