துல்லியமான ஜோதிட பலனை அறிய எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மைகள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
மனித வாழ்விற்கும் வான வீதியில் எங்கே உள்ள கிரகங்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் .இது எல்லாம் காசு சம்பாதிக்கும் யுக்தி என்று தான் சோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாத அனைவரது கேள்வியாக இருக்கிறது.இதே போல் தான் நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் நினைத்து இருக்கிறேன்.
மறைந்த எனது தாய் மாமன் கலியுகம் பிள்ளை அவர்கள் எனது ஜாதகத்தினை பார்த்து "எதிர் காலத்தில் நீ சிறந்த ஜோதிடராக வருவாய் " என்று கூறிய போ
து கூட நான் அதை பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை.பிறகு திருமணம் ஆன பிறகு எனது மாமாவே முன் வந்து ஜோதிட கலையை எனக்கு பிள்ளையார் சுழி போட்டு அடிப்படை வகுப்பை நடத்தி ஜோதிட கலையை கற்கும் ஆர்வத்தை எனக்கு ஊட்டி சென்றார்.
அதன் பிறகு தொடர் முயற்சியால் எங்கள் ஊர் செவ்வாய்ப்பட்டியில் எழுந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ பத்திரகாளியம்மன் அருளாசி உடன் இன்றைக்கு ஜோதிடம் தொடர்பாக முகநூலில் நிறைய பதிவுகள், வீடியோக்கள் மற்றும் புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.
இன்றைக்கு முதுகலை வேதியியல் மற்றும் ஆங்கிலம் படித்த நான் ஜோதிடராக ஆன பிறகு எனது ஜாதக கட்டத்தினை ஆய்வுகள் செய்து பார்க்கும் போது தான் ஜோதிட உண்மைகள் புரிகிறது.எனது சாதக கட்டத்தில் பொளர்னமியை நெருங்கும் சந்திர கேந்திரத்தில் புதன் பகவான் ஆனவர் நிற்பதால் தான் நான் ஜோதிடராக ஆனதன் சூட்சுமம் புரிகிறது.
மீன லக்கனம் மற்றும் மீன ராசிக்கு வரக்கூடாத தசையான சுக்கிரன் தசை வந்த போது எவ்வளவு திறமைகள் இருந்தும் உரிய இடத்தை அடைய முடியாமல் போராட வேண்டியதாக இருந்தது.
மேற்கண்ட வகையில் எனது ஜாதகம் இதே போல என்னை சுற்றி உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஜாதகத்தை எல்லாம் ஆய்வு மனப்பான்மை நோக்குடன் ஆய்வுகள் செய்து பார்த்த போது தான் எந்த அளவுக்கு ஜோதிட பலன்கள் துல்லியமாக உள்ளது என்பது புரிய வந்தது.
தொடர்ந்து பல ஜாதகங்களை துல்லியமாக பலன் கண்டறிய பல விதமான முறைகளை பயன்படுத்தி பார்க்கும் போது அந்த ஜோதிடவியல்ல் உள்ள நுணுக்கங்கள் புரிய வந்தது.
ஜாதக பலனை துல்லியமாக கண்டறிய பின்வரும் பல வித நுணுக்கங்கள் தேவையாக இருந்தது.
1.ஜாதகத்தில் முதலில் லக்கனம், ராசி மற்றும் அதன் அதிபதிகள் இவற்றை கவனிக்க வேண்டும்.
2) எந்த ஒரு ஸ்தானத்தை ஆய்வு செய்து பார்க்கும் போதும் அந்த ஒரு குறிப்பிட்ட ஸ்தானம் அதன் அதிபதிகள் மற்றும் காரக கிரகம் ஆகிய மூன்றையும் ஆய்வுகள் செய்து பார்க்கப்பட வேண்டும்.
3) ஒரு குறிப்பிட்ட பலன் கொடுக்கும் கிரகம் பலம் பெற்று இருக்கிறதா ? பலம் இழந்து நிற்கிறதா? பாவ தன்மை அடைந்து இருக்கிறதா? சுப தன்மையை அடைந்து இருக்கிறதா ? என்ற வகைகளில் ஆய்வுகள் செய்து பார்க்க வேண்டும்.
4) சுப கிரகங்கள் சேர்க்கை அல்லது பார்வை ஒரு குறிப்பிட்ட கிரகத்தை சுப தன்மையை அடைய வைக்கிறது.பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை ஒரு கிரகத்தை பாவ தன்மையை அடைய வைக்கிறது.
5) ஒரு குறிப்பிட்ட கிரகமானது நீசம், அஸ்தமனம்,பகை வீடு ஏறி விற்கிறதா? என்ற வகைகளில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.இவ்வாறு இருந்து சுப தொடர்பு ஏற்படாத பட்சத்தில் அந்த ஒரு குறிப்பிட்ட கிரகம் பலவீனம் அடைந்ததாக கருதப்படுகிறது.
6) ஒரு குறிப்பிட்ட கிரகம் பாவ அல்லது சுப தன்மை அடைதல், பலவீனம் அடைதல் போன்றவற்றை டிகிரி அடிப்படையாக கொண்டு ஆய்வுகள் செய்து முடிவு செய்ய வேண்டும்.
7 ) நவ கிரகங்கள் அம்சத்தில் சுப வர்க்கம் ஏறியிருக்கிறதா? பாவ வர்க்கம் ஏறி இருக்கிறதா? என்பதை பொறுத்து கிரக வலிமை முடிவு செய்யப்படுகிறது.சுப வர்க்கம் ஏறி இருந்தால் அவை பலமடைந்ததாக கருதப்படுகிறது.பாவ தன்மையை அடைந்து இருந்தால் பலவீனம் அடைந்து உள்ளது .
8) ஒரு கிரகமானது ராசியிலே பலவீனம்/பாவ தன்மையை அடைந்து இருந்தால் அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி இருந்தால் ஒரளவு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பாக மாறி விடுகிறது.சில நேரங்களில் ராசியில் பலமடைந்து / பாவ தன்மையை அடையாமல் இருந்து அம்சத்தில் பாவ வர்க்கம் ஏறி இருந்தால் அந்த தசையில் கெட்ட பலனையே ஜாதகருக்கு கொடுப்பார்.
9) கிரக பலன்களை ஆய்வுகள் செய்து பார்க்கும் போது திதி சூன்யம், நட்சத்திர சாரம் போன்றவற்றை கொண்டு ஆய்வுகள் செய்து பார்க்க கூடாது.இந்த வகைகளில் ஆய்வு செய்து பார்க்கும் போது ஜாதக பலன்கள் தவறாகி விடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
10) மனித வாழ்வினை வழிநடத்தி செல்வது தசா புத்திகளே ஆகும்.தசா புக்திகள சரியான உங்களது வாழ்வியல் உண்மைகளை எடுத்து காட்டுகிறது.ஒரு மனிதன் எந்த எந்த காலகட்டத்தில் என்ன என்ன? நடந்தது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
மேற்கண்ட பல வகையான ஆய்வுகளுக்கு உட்படுத்தி ஜாதக பலனை சொல்லும் போது அந்த பலன்கள் அனைத்தும் நூறு சதவீதம் சரியானதாக இருக்கும்.
நன்றி
For online appointment
Cell & WhatsApp & Gpay
097151 89647
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments:
Post a Comment