Tuesday, 3 November 2026


 கேள்வி என்னும் வேதம் -தொடர் ( 4)


 கோள்கள் என்ன செய்யும்? என்ற தலைப்பில் யோகி பக்த பிரசாத் காரசாரமாக உரையாற்றி கொண்டு இருந்தார்.வானத்தில்  எங்கே உள்ள கோள்கள் மனித வாழ்வினை எப்படி பாதிக்கிறது? என்று விதன்டவாதமாக கூட்டத்தில் இருந்த ஒரு பையன் கேள்வி கேட்டான் " .

     கோள்கள் மனித வாழ்வினை சீரமைக்க உதவுகிறது .வான் வீதியில் எங்கே உள்ள கோள்கள் எப்படி மனித வாழ்க்கை சுழற்சியினை சீரமைக்கின்றது. என்பதனை அறிவியல், ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் ஆகிய மூன்று வகையான அறிவு கொண்டு உற்று நோக்கினால் உண்மை புலப்படுகின்றது.


   மனித மனதிற்கும் சந்திரனுக்கும் நெருங்கிய தொடர்பு  உண்டு.அமாவாசை  மற்றும்  பொளர்ணமி காலங்களில் மனித மனம் ஒரு வித தன்மைக்கு உட் படுகிறது. அமாவாசையின் போது  கோபம், முரட்டுத்தனம், பயம், மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்வுகள் தீவிரமடைகிறது.

பௌர்ணமியில்   தூக்கமின்மை காரணமாக மனக் குழப்பம், அதிகப்படியான உற்சாகம் அல்லது அலைபாயும் உணர்ச்சிகள் அதிகரிக்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்ந்து நோக்கினால் உண்மை புலப்படுகின்றது.


சந்திரனின் உள்ள ஈர்ப்பு விசைக்கும் மற்றும் மனித மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால் தான் பெளர்ணமி தினத்தில் தியானம் மற்றும் கிரிவலம் போன்றவை மேற்க்கொள்ளும் போது மிகப்பெரிய ஆன்மீக மாற்றம் மனிதனுக்குள் நிகழ்வதாக ஆன்மீகம் சொல்கிறது..


ஜோதிடத்தில் தேய்பிறை சந்திரன் பாவ கிரகமாக கருதப்படுகிறது.தேய்பிறை சந்திரனின் பார்வை அல்லது சேர்க்கை முழு பாவ கிரகமான சனியின் பார்வை அல்லது சேர்க்கைக்கு நிகரான பாவ தன்மையை தருகிறது. ஒருவர் தேய்பிறை சந்திரனில் பிறந்து அதனுடன் நிழல் கிரகமான ராகு சேர்க்கை பெற்று பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு பிறக்கும் குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளாக பிறக்கிறது.இது  போன்ற அமைப்பு கொண்ட ஜாதகங்கள் பலவற்றை பார்த்து அதன்படி சொன்ன அடுத்த நிமிடமே அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.இதிலிருந்து நான் உங்களுக்கு என்ன சொல்கிறேன் என்றால் எங்கே உள்ள சந்திரனுக்கும்,நமது 

மனதுக்கும் நிச்சயமாக தொடர்பு என்பது உண்டு.இதனால் தான் சந்திரனை மனநிலைக்காரகன் என்று அழைக்கப்படுகிறது.


அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் கடல் அலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது என்கிறது விஞ்ஞானம்.கடல் நீரில் உள்ள ரசாயன பொருட்களின் சதவீதம் நமது உடலில் உள்ள நீரின் உள்ள ரசாயன சதவீதமும் ஒன்றே.சந்திரன் கடல் நீரை அந்த குறிப்பிட்ட காலங்களில் பாதிப்பதை ஏற்படுத்துவது போல மனித மனங்களிலும் பாதிப்பை சந்திரன் தருகிறது.நான் இப்பொழுது சந்திரன் என்ற ஒரு கிரகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு விளக்கி கொண்டு இருக்கிறேன்.இதே போல எல்லா கிரகங்களும் அண்டத்தை பாதிக்கிறது. "அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது" என்றார்.


   பிறகு ஏதோ நினைத்த மாதிரி இருந்து விட்டு அவரே தொடர்ந்தார் அதே நேரத்தில் வளர்பிறை சந்திரன் இயற்கை சுப கிரகமான குரு பகவானின் பார்வை அல்லது சேர்க்கைக்கு நிகரான நல்ல பலனை தருகிறது.வளர்பிறை சந்திரனின் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற கிரகங்கள் நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளி தரக்கூடிய அமைப்பை பெறுகிறது.


எனவேதான் பௌர்ணமியில் பிறந்தவர்கள் அரசியலில் அல்லது அரசாங்கத்தில் உயரிய பதவிகளில் அமர்கிறார்கள். .இது ஏனைய பிற கிரகங்கள் அமைப்பை பொருத்து அமைகிறது.இல்லையெனில் தான் சார்ந்த துறைகளில் உயரிய தலைமை பதவி அவர்களுக்கு கிடைக்கிறது."இவை அனைத்தும் ஜோதிடவியல் தரும் உண்மைகள் ஆகும்."

என்றார் .


 இவர் மேலும் அமாவாசை காலங்களில் நமது முன்னோர்களுக்கு தர்பணம் செய்தலும்,பொளர்ணமி காலங்களில் கிரிவலம், தியானம் மற்றும் இறை வழிபாடு போன்றவை செய்தலும் மேற்க் கொள்ளப்படுகிறது."என்றார்.


 இவ்வாறு யோகி பக்த பிரசாத் நீண்ட உரையில் பேசி முடித்ததும் அனைவரும் கைதட்டி ஆமோதித்தனர்.


ஒரு சீடன் எழுந்து ஐயா நீங்கள் பேசும் பொழுது அமாவாசை, பொளர்ணமி, வளர்பிறை மற்றும் தேய்பிறை என்று பல சொற்களை பயன்படுத்தி உள்ளீர்கள் இந்த சொற்றொடர்கள் பற்றிய விரிவான விளக்கம் தந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் "-என்றார்.


இதற்கு முதலில் ஜோதிட ரீதியாக  விளக்கம் தந்து விடுகிறேன்.

ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் ஒளி கிரகங்கள் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவான்  இவர் ஒரு ராசியில் ஒரு மாதம் காலம் வாசம் செய்வார்.

சித்திரை மாதம் மேஷ ராசியில்  இருந்தால் வைகாசி மாதத்தில் ரிஷப வீட்டிற்கு வந்து விடுவார்.இவ்வாறாக நகர்ந்து பங்குனி மாதம் மீனம் ராசிக்கு வந்து விடுவார்.ஒருவர் எந்த தமிழ் மாதம் பிறந்து உள்ளார் என்பதை சூரியன் எந்த ராசியில் உள்ளார் என்பதை வைத்து கண்டு பிடித்து விடலாம்.இதனால் சூரியன் மாதக் கோள் என்று அழைக்கப்படுகிறது.


ஆனால் சந்திரன் ஒரு ராசியில் இரண்டேகால் நாள் மட்டும் தங்குவார்.இதனை நாள் கிரகம் என்று அழைக்கப்படுகிறது.ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தினை "ஜென்ம ராசி "என்று அழைக்கப்படுகிறது.சந்திரன்  எந்த நட்சத்திரத்தில் நிற்கின்றதோ அதனை ஒருவரது " ஜென்ம நட்சத்திரம் ஆகும்.

 சந்திரன் பதினைந்து நாட்கள் வளர்பிறை ஆகவும், அடுத்த பதினைந்து நாட்கள் தேய்பிறை ஆகவும் செயல்படுகிறது.


   ஜாதக கட்டத்தில் சூரியன் இருக்கும் இடத்தினை எட்டு பாகைக்குள்ளாக சந்திரன் பகவான் நெருங்கிய நிலையில் அமாவாசை உண்டாகிறது.சூரியனை விட்டு சந்திரன் விலகி சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 180 பாகை கடக்கும் போது அதாவது சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் வீட்டிற்கு சந்திரன் வந்ததால் பொளர்னமி ஆகும்.இந்த இடைப்பட்ட சந்திரனை வளர்பிறை என்று அழைக்கப்படுகிறது.இதனை பூர்வ பட்சம் என்றும்,சுக்ல பட்சம் என்றும் அழைக்கப்படுகிறது.


இதேபோல் பொளர்னமியை விட்டு  விலகி மறுபடி 180 பாகை கடந்து அதாவது எட்டாம் வீட்டில் இருந்து பன்னிரெண்டாம் வீடு தாண்டும் வரை உள்ள சந்திரனை தேய்பிறை காலம் என்று அழைக்கப்படுகிறது.இதனை அமர பட்சம் அல்லது கிருஷ்ண பட்சம் என்றும் அழைக்கப்படுகிறது.இதில்  சில நுட்பமாக ஆய்ந்தால் சில விதிவிலக்குகள் உண்டு.அதை பற்றி இன்னும் தெளிவாக விளக்க போனால் உங்களுக்கு புரியாமல் போய்விடும் அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்." என்றார்.


சரி குருஜி தெளிவாக புரியும் படி விளக்கி விட்டீர்கள்.திதி என்றால் என்ன? என்பதையும் தெளிவாக விளக்கினால் நன்றாக இருக்கும் குருஜி 


சற்று நிதானமாக யோகி பக்த பிரசாத் திதி என்பது மேலே கூறப்பட்ட விஷயத்தின் தொடர்பு தான் தம்பி.சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் அல்லது கோண அளவு வேறுபாடு திதி ஆகும்.இது பிரதமையில் தொடங்கி பொளர்ணமியில் நிறைவடைகிறது.ஒரு திதி 12 பாகைக்குள் நிறைவடைகிறது.முப்பது திதிகள் கொண்டது ஒரு சந்திர மாதம் ஆகும்.பதினைந்து திதி ஒரு பட்சம் ஆக கருதப்படுகிறது.இதில் வளர்பிறை திதி பூர்வ பட்சம் எனவும், தேய்பிறை திதி அமர பட்சம் என்றும் அழைக்கப்படுகிறது."என்றார்.


மேலும் சிறிது நேரம் எங்கோ பார்த்துக் கொண்டே நன்றாக மூச்சை நன்றாக ஆழ்ந்து இழுத்து விட்டுக் கொண்டு எதையோ யோசித்தவாறு பேச ஆரம்பித்தார்.


திதி என்பது வெறும் காலக் கணக்கு மட்டுமல்ல. மனிதன் இயற்கையின் இயக்கத்தோடு எவ்வாறு வாழ்ந்தான் என்பதற்கான ஒரு பழமையான கால அளவீட்டு முறையாகும்.


சந்திரன் வளர்வதும் தேய்வதும் இயற்கையின் மாற்றத்தைக் காட்டுகிறது.

அதுபோலவே மனித வாழ்க்கையிலும் வளர்ச்சியும் வீழ்ச்சியும் மாறி மாறி வருகின்றன.

காலத்தை அறிந்தவன் வாழ்க்கையைப் புரிந்து கொள்கிறான். இயற்கையைப் புரிந்து கொள்பவன் வாழ்க்கையின் மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறான்" என்று தத்துவார்த்தமான முறையில் பேசி விளக்கினார்.


ஒரு சீடன் பஞ்சாங்கம் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் எல்லாம் எடுத்து பார்க்கிறார்கள்.எனக்கு ஒன்றுமே புரியவில்லை குருஜி.முதலில் பஞ்சாங்கம் என்றால் என்ன?  ஐயா.

குருஜி சிரித்து விட்டு சொல்ல ஆரம்பித்தார்.


  இந்து பஞ்சாங்கத்தில் ஒரு நாளின் நல்ல நேரம், விரதம், பூஜை, திருமணம், கிரகப்பிரவேசம் போன்றவற்றுக்கு

 திதி உள்ளிட்ட பல காலக் கூறுகள் கவனிக்க படுகின்றன.அவற்றில் முக்கியமானவை:


1)திதி

2)வாரம்

3)நட்சத்திரம்

4)யோகம்

5)கரணம்

இவை ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம் ஆகும்." என்றார்.


அடுத்த கேள்வி கேட்பதற்குள் யோகி பக்த பிரசாத்தை பார்க்க வெளியூரில் இருந்து பழைய சீடர்கள் வந்ததால் இத்துடன்  கலந்துரையாடலை நிறுத்தி கொண்டு பழைய சீடர்களை பார்க்க யோகி புறப்பட்டு விட்டார்.அவர் திரும்ப வந்து விளக்கும் வரை நாமும் காத்திருப்போம்.நன்றி


அன்புடன் 

 செவ்வை சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

No comments: