Tuesday, 3 November 2026

 இள வயதிலேயே  அழகான நல்ல வாழ்க்கை துணை அமைவதற்கு ஜோதிட விதிகள்.



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது "

                                       -குறள் 

     "ஒருவருக்கு திருமணம்இள வயதிலேயே நடக்க வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் லக்னம் என்ற‌ ஒன்றாம் இடம் 

குடும்ப ஸ்தானம் என்ற இரண்டாம் இடம் 

களத்திர ஸ்தானம் என்ற ஏழாம் இடம்

 மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்று அழைக்கபடும் எட்டாம் இடம் அதன் அதிபதிகள்,  ஆகிய ஸ்தானங்களும் அதன் அதிபதிகளும் இயற்கை பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெறாமல் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் பகவான் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.


 இவை மட்டுமல்லாது தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் பகவான் மற்றும் புத்திர பாக்கியம் தரக்கூடிய குரு பகவான் ஆகிய இருவரும் பாவ கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெறாமல் இருக்க வேண்டும்.


    எவர் ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் இடத்தையும், ஏழாம் இட அதிபதி அதிபதியையும்  குரு பகவான் பார்வை செய்த நிலையில் நல்ல யோகம் தரும் தசைகள் நடப்பில் இருந்தால் இள வயதிலேயே அழகான வாழ்க்கை துணை அமையும்.


 சில நேரங்களில் ஒரு சிலருக்கு ராசிக்கு ஏழாம் இடத்தை குரு பகவான் பார்வை செய்து ஏழாம் அதிபதியை பார்வை செய்தாலும் நல்ல யோகம் தரும் தசையும் நடப்பில் இருந்தால் நல்ல இள வயதிலேயே நல்ல அழகான மற்றும் யோகமான வாழ்க்கை துணை அமைந்து விடுகிறது.


 ஏழாம் அதிபதி பாவராக உள்ள ரிஷபம்,துலாம் ஆகிய இரு ராசிகளுக்கு ஏழாம் இட அதிபதி செவ்வாய் ஆக வரும் கடகம்,சிம்மம் ஆகிய இரண்டு லக்கனங்களுக்கு சனி பகவான் ஏழாம் இட அதிபதியாக வரும்.


   ஏழாம் இட அதிபதி பாவராக இருக்கும் பட்சத்தில் ஏழாம் இடத்தில் இல்லாமல் வேறு இடங்களில் நின்று இயற்கை சுப கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் நல்ல வாழ்க்கை துணை அமையும்.


தாம்பத்திய சுகத்தை தரும் களத்திர காரகன் என்று அழைக்கப்படும் சுக்கிரன் பகவான் ஒருவருக்கு நல்ல மண வாழ்க்கையை அமைத்து தருவதில் நவ கிரகங்களில் முன்னிலை வகிப்பவர் ஆவார்.


எவர் ஒருவர் ஜாதகத்தில் சுக்கிர பகவான் நல்ல முறையில் அமைந்து விட்டார் எனில் அவருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைந்து ,நல்ல முறையில் தாம்பத்திய சுகத்தை அனுபவித்து நன்மக்களை பெறக்கூடிய பேறு உண்டாகும்.


ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் உச்சம், ஆட்சி ,மூலத்திரிகோணம் போன்ற நிலையில் வலுப்பெற்று கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் நல்ல மண வாழ்க்கை அமையும்.


அதேபோல ஒருவர் நல்ல புதல்வர்ககளை பெற ஒருவர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் என்று அழைக்க கூடிய ஐந்தாம் இடம் அதன் அதிபதி மற்றும் இயற்கை சுப கிரகமான புத்திர காரகன் குரு பகவான் நன்முறையில் வலுப்பெற்று இருக்க வேண்டும்.


 உங்களுடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் இல்லாமல் ஐந்தாம் இடத்தை இயற்கை சுப கிரகங்கள்  பார்வை செய்த நிலையில் அதாவது ஐந்தாம் இடத்தையும் மற்றும் ஐந்தாமிட  அதிபதியையும் குரு பகவான் பார்வை செய்த நிலையில் இருந்தால் நிச்சயமாக நல்ல யோகம் உள்ள குழந்தை பிறக்கும்.


திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் போன்ற கேள்விகளுக்கு ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசி ஆகிய இரு வலிகளிலும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் மற்றும் அதற்குரிய காரணங்களையும் காரக கிரகங்களை ஆய்வு செய்து பார்த்து நடக்கும் தசாபுத்தி மற்றும் லக்கனாதிபதி வலிமை பொறுத்து முடிவு செய்ய வேண்டும் நன்றி 


நன்றி


No comments: