ஜாதகத்தில் எந்த திசையானது சாதகருக்கு யோக பலனைத்தரும்?
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !
ஒரு ஜாதகத்தில் ஒருவருக்கு இன்னல்கள் தராமல் சந்தோஷங்களை வாரி வழங்கக்கூடிய தசையானது எந்த தசையாக சாதகருக்கு இருக்கும்? என பலர் கேள்வி கேட்டதின்விளைவாக பலருக்கும் பயன்படும் வகையில் இந்த பதிவை உங்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.
ஜாதகருக்கு மிகுந்த யோகங்களை அள்ளி தருவதில் மிக முக்கியமாக கோணாதிபதியின்(1,5,9) திசையே ஆகும்.
லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதி தசையானது ஒருவருக்கு நடப்பில் இருக்கும் காலங்களில் யோக பலன்களை சாதகருக்கு வழங்குகிறது.
சில நேரங்களில் சாதகருக்கு இந்த கோணாதிபதிகள் திசைகள் நடப்பில் இருப்பினும் அதன் யோக பலன்களும் சற்று குறைந்து விடுவதை காணலாம். எந்த வகையில் அந்த யோக பலனில் பங்கம் ஏற்படுகிறது என்பதை கீழ்க்கண்ட வகையில் பார்ப்போம்.
ஒரு சில கிரகங்களுக்கு இரண்டு ஆதிபத்தியம் இருப்பதால் அதில் ஒன்று கோணாதிபதியாக இருந்து மற்றொன்று மறைவிட ஸ்தான அதிபதியாக வரும் பட்சத்தில் இந்த யோக பலனில் சற்று பங்கம் உண்டாகிறது.
உதாரணமாக கும்ப லக்கினத்திற்கு புதன் ஐந்தாம் அதிபதியாக இருப்பதால் அது யோக திசை என்று கணக்கில் எடுத்துக் கொண்டாலும் அதனுடைய மற்றொரு ஸ்தானம் அஷ்டம ஸ்தானமாக வருகிறது.
அதனால் ஒருவருக்கு புதன் தசை முழுவதும் யோக பலனை தந்துவிடும் என்று கணக்கிட முடியாது. குழந்தைகளுடைய 17 ஆண்டுகளில் ஒரு எட்டரை ஆண்டுகள் பஞ்சமாதிபதியாக செயல்பட்டு யோக பலனை தந்து , அடுத்து எட்டரை ஆண்டுகள் அஷ்டமாதிக்குரிய பலனை தந்துவிடும்.
அதுவும் சில நேரங்களில் கும்ப லக்னத்திற்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்றிருப்பது ,எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் மூலதிரிகோணம் மற்றும் ஆட்சி என்ற மும்மை வகையில் பலம் பெற்றிருந்தாலும் அவை அஷ்டமஸ்தானத்தில் பலம் பெற்றிருப்பதால் எட்டாம் இடத்தில் பலம் பெற்ற புதன் பகவானை விட ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்ற புதன் பகவானே யோக பலனை சிறப்பாக செய்கிறது .
சந்திர பகவான் ஆனவர் மீன ராசிக்கு ஐந்தாம் அதிபதியாக வருவதோடு ஒரே ஸ்தானமாக இருப்பதாலும், இதேபோல சூரிய பகவான் ஆனவர் மேஷ ராசிக்கு ஐந்தாம் அதிபதியாக மட்டுமே இருப்பதால் சந்திரன் மற்றும் சூரியன் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று இருக்கும்போது இவ்விரு ராசிகளுக்கும் மிகுந்த யோக பலனை தருகிறது அதன் தசையில் முழுவதும் தருகிறது.
அடுத்து கேந்திர அதிபதிகள் என அழைக்கப்படும் 1 ,4, 7, 10 ஆகிய ஸ்தான அதிபதிகளின் திசைகள் யோக பலனை தருகிறது.
இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் கேந்திர அதிபதிகள் கேந்திர ஸ்தானத்தில் இடம்பெற்றிருப்பது கேந்திராதிபத்திய தோஷத்தை தரும் வகையில் அந்த ஸ்தான அதிபதிகள் அந்த ஸ்தானத்திற்கு மறைமுக வழியில் பலம் பெற்று நிற்கும்போதோ அல்லது திரிகோணங்களில் நிற்கும் போதோ யோக பலனை தருகிறது.
உதாரணமாக தனுசு லக்கினத்திற்கு லக்னாதிபதியான குரு பகவான் நான்காம் இடத்தில் ஆட்சி பெற்று நிற்பதைவிட லக்கினத்திற்கு எட்டாம் இடமான மறைவிட ஸ்தானங்களில் உச்சம் பெற்றிருப்பது கேந்திராதிபத்திய தோஷம் நீங்கி யோக பலனை தருகிறது.
அடுத்து தன மற்றும் லாபம் ஸ்தான அதிபதிகள் என்று அழைக்க கூடிய 2 ,11 க்கு உரிய திசைகளும் யோக பலனை சாதகருக்கு வழங்குகிறது. அதில் ஸ்திர ராசிக்கு பதினொன்றாம் அதிபதி பாதகாதிபதி என்ற வகையில் சில நேரங்களில் யோகபங்கம் உண்டாகிறது.
ஜாதகத்தில் பாவ கிரகங்கள் உபஜெய ஸ்தானமான 3 ,6 ,10 மற்றும் 11-ஆம் இடங்களில் நின்று பலம் பெற்றிருக்கும் போது அந்தத் திசை நடப்பில் உள்ள காலங்களில் சாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்குகிறது.
நன்றி!
(தங்களது ஜாதகப் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
. 7402570899
அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்.
(எம் எஸ், சி எம்ஏ ,பிஎட்)
ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் .
கரம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment