லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் இடம்
செவ்வாய்ப்பட்டி
ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை !
சாதகங்களில் பணபர ஸ்தானங்கள் என அழைக்கப்படுவது 2,5,8,11 ஆகும் .இந்த பணபர தானங்களில் பதினோராம் இடமே தலைமைப் பண்பு வகிக்கிறது.
ஒரு சிலருக்கு தொழில் எந்த வகையிலும் சிறப்பாக அமையாது போனாலும் , வருமானம் மட்டும் எந்த வகையிலாவது வந்து கொண்டே இருக்கும்.
அவர் ஜாதகத்தை எடுத்து ஆய்வு செய்து பார்த்தால் அவருடைய தொழில் ஸ்தானம் கெட்டுப்போய், லாபஸ்தானம் எனும் பதினொன்றாம் இடம் பலம் பெற்று காணப்படும்.
பதினொன்றாம் இடத்து அதிபதி நல்ல வலு பெற்றவர்களுக்கு இந்த நிலை ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது.
பொதுவாக கேந்திரங்களில் பாவ கிரகம் இடம்பெறுவதும், திரிகோணங்களில் சுப கிரகங்கள் இடம்பெறுவதும் நன்மை பயக்கும் என்பது பொதுவான ஜோதிட விதியாகும்.
சில கிரகங்கள் கேந்திரங்களிலும் ,சில கிரகங்கள் திரிகோணங்களில் நன்மை அளிக்கின்றன.
ஆனால் பாபக் கிரகமாக இருந்தாலும், சுப கிரகமாக இருந்தாலும் பதினொன்றாம் இடத்தில் எல்லா கிரகங்களும் நன்மையே தரும் என்பது ஜோதிட விதியாகும். இது ஒரு பொதுவிதிதான். இவை கிரகங்கள் பெற்ற பலம் ,அதனுடன் சேர்ந்த கிரகங்கள் மற்றும் பார்த்த கிரகங்கள் அதன் ஆதிபத்தியம் அதற்கேற்ப பலன் மாறுபடலாம்.
பதினோராம் இடத்தைக் கொண்டு நாம் அறிய முயல்வது
1) மூத்த சகோதர ,சகோதரிகள்,
2) சாதகனை போற்றி வனங்குபவர்கள்,
3) இளைய தாரம்
4)பொன் பொருளை சேர்ப்பதற்கான கலையறிவு
5) லாப வரவு
6)வேளாண்மை
7)குதிரை
8)யானை
9) சிறந்த உத்தமமான அறிவு,
10)பல்லக்கு ஏறுதல்
11)மனக்கவலை தீரும் வழிகள்,
12) மேலாடைகள்
13)வாகன வசதி
14)கவுரவம்
15)செய் தொழில் மேன்மை
16)பலதாரமணம்
17)பூமி விருத்தி
18) சங்கீத தொழில்
19)நாடக தொழில்
20)அயல்நாட்டுப் பயணங்கள் மேன்மை
21) மின்சாரம்
22)நண்பரின் வீடு
23)சபை
24) சமூகத்தில் தனக்கு ஆதரவாக இருப்பவர்கள்
25) இடது காது
26)வலது பாதம்
27) இடது கை
28 )இருகால்கள்
29)அமைச்சர் பொறுப்பு
30)பொன் பொருள் சேர்க்கை மற்றும் கிணறு போன்றவற்றை ஆராய்ந்து அறியலாம்.
அதிலும் குறிப்பாக பதினோன்றாம் இடத்தை லாப ஸ்தானம் என்று சொல்லலாம். எனவே லாபத்தை பற்றி அறிய பதினொன்றாம் இடத்து அதிபதியும், குரு பகவானையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் .
பதினொன்றாம் இடம் என்பது இளைய தாரத்தை பற்றி குறிப்பதாகும் .எனவே ஒரு ஜாதகருக்கு ஏழாம் இடம் வலுவிழந்து, பதினோராம் இடம் வலுப்பெற்று நிற்கும் பொழுது அவருக்கு தார யோகத்தை தருகிறது.
எனவே தார யோகத்தைப் பற்றி அறிய போன்ற பதினொன்றாம் இடத்து அதிபதியும், கிரகங்களில் சுக்கிரனையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
பதினொன்றாம் இடம் என்பது மூத்த சகோதரனைப் பற்றி அறிய உதவும் இடமாதலால் ,மூத்த சகோதரன் பற்றி ஆய்ந்து அறிய பதினொன்றாம் இடத்தையும் , சகோதர காரகனான செவ்வாயையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
எனவே பதினொன்றாம் இடத்து காரக கிரகங்கள் குரு, சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகும்.
பதினோராம் இடத்தை சிலர் துர் ஸ்தானத்தின் வகையில் சேர்க்கிறார்கள்.
சில சந்திர காவியம் போன்ற பழைய நூல்களில் துர் ஸ்தானத்தை 3, 6 ,8 ,12 என்பதற்கு பதிலாக 3,6,8,11 என்றும் குறிக்கின்றனர் .
ஆனால் பதினோராம் இடத்தினை பொருத்தவரை அவை எந்த தீமையையும் சாதகருக்கு தருவதில்லை. அவை ஒரு நல்ல ஸ்தானமாகவே செயல்படுகிறது. எனவே பதினோராமிடத்தில் அமர்ந்த கிரகங்களும் சரி, பதினோராம் வீடு அதிபதிகளும் சரி ஜாதகருக்கு நன்மையே பயக்கிறது .
ஒருவகையில் சர லக்னங்களுக்கு (மேஷம் கடகம் ,துலாம் மற்றும் மகரம்) போன்றவற்றிற்கு பதினொன்றாம் இடம் பாதக ஸ்தானமாக வருவதால் அந்த லக்கினக்காரர்களுக்கு பதினொன்றுக்குடையவர் சில பாதகங்களை தர வேண்டியவராகிறார்.
பாதக ஸ்தானம் என்றாலும் அவர் லாபஸ்தானம் என்ற வகையில் நன்மையை நிச்சயம் தனது தசையில் சாத்துக்குடி தருவார்.
சர லக்கனங்களுக்கு பதினொன்றாம் இடம் பாதக ஸ்தானம் என்ற போதிலும் அதிலும் பல சூட்சும உண்மைகள் இருக்கிறது.அதாவது மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதி சனி ,கடக லக்கினத்திற்கு பாதகாதிபதி சுக்கிரன், துலா லக்னத்திற்கு பாதகாதிபதி சூரியன், மற்றும் மகர லக்னத்திற்கு செவ்வாய் பாதகாதிபதி ஆவார்.
இதில் கடக லக்னத்திற்கு பாதகாதிபதியான சுக்கிரன் அதிக பாதகங்களை சாதகருக்கு தந்து விட மாட்டார். ஏனெனில் கடக லக்கின அதிபதியான சந்திரனுக்கு சுக்கிரன் நண்பர் ஆவார்.இது மட்டுமல்லாமல் லக்கினாதிபதியான சந்திரன் உச்சம் அடையும் இடமும் ஆகும்.
ஆனால் அதே நேரத்தில் மற்ற சர ராசியான மேஷம், துலாம் மற்றும் மகர லக்னங்களுக்கு அந்த லக்னாதிபதியான செவ்வாய், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய கிரகங்களுக்கு பாதகாதிபதியாக வரக்கூடிய கிரகங்களான சனி ,சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் அந்த சர லக்னாதிபதிக்கு பகை கிரகங்கள் ஆகும். இவ்வாறு பகை கிரகங்களாக வருவதால் பாதகத்தன்மை அதிகமாக தருவதற்கான வாய்ப்புகள் உண்டு .
பதினொன்றாம் இடத்தை கொண்டு லாபம் பற்றி ஆராயும் போது குருவையும், இளைய மனைவியை பற்றி ஆராயும் போது சுக்கிரனையும் , மற்றும் மூத்த சகோதரனைப் பற்றி ஆராயும்போது செவ்வாயையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் .
பதினொன்றாம் இடத்தை லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், மற்றும் இளைய தார ஸ்தானம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
நன்றி
(தங்களது சாதக பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற , தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையினை பெறலாம் .)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd
(ஆசிரியர் &ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,
கரம்பக்குடி ,
புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment