சோதிட புதையல்
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜோதிட நூல்களிலும், முகநூல் மற்றும் யூட்யூப் வழியாகவும் தாங்கள் பெறப்படும் சோதிட கருத்துக்கள் அனைத்துமே அவரவர் அனுபவத்திற்கு ஏற்ப மூல நூல்களில் பெறப்பட்ட அடிப்படைக் கருத்தை கொண்டு அனுபவ ஆராய்ச்சி கொண்டு தரப்படும் சோதிட பொதுப்பலன் ஆகும்.
கிரகங்கள் கீழ்க்கண்ட வகையில் உச்சம், மூலதிரிகோணம் ,ஆட்சி மற்றும் நட்பு போன்ற வரிசையில் அதன் கிரக வலிமை நிர்ணயம் செய்யப்படுகிறது. இவை ஒளி அளவை அடிப்படையாகக் கொண்டது.
இவை மட்டுமல்லாமல் கிரகங்கள் ஸ்தான பலம், திருக் பலம், நைசர்கிக பலம், ஜேஷ்டா பலம்,திக் பலம் மற்றும் கால பலம் போன்ற வகையிலும் ஒரு கிரகங்களின் வலிமை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒரு சில சமயங்களில் மேற்கண்ட வகையில் ஒரு கிரகம் பலமடைந்து இருப்பினும் அதனுடன் சேரும் கிரகங்கள் தன்மையைப் பொருத்தும் அந்த கிரகங்கள் பெரும் நட்சத்திர சாரத்தைப் பொருத்தும் மற்றும் அந்த கிரகங்கள் பெறக்கூடிய வக்கிரம் மற்றும் அஸ்தமன நிலையை பொருத்தும் ஒரு கிரகத்தின் கிரக வலிமையானது முடிவு செய்யப்படுகிறது.
ஒரு கிரகம் ஆனது பாவர் சேர்க்கை,பார்வை மற்றும் நட்சத்திர சாரம் ,பகை வீடு ஏறுதல்,மறைவிட ஸ்தான அதிபதிகளுடான தொடர்பு, வக்கிரம் மற்றும் அஸ்தமனம் நிலை போன்றவைகளால் ஒரு கிரகமானது பலவீனமடைகிறது.
ஒரு கிரகத்துடன் பாவர் சேர்க்கை என்பது இரண்டு வகையில் வகைப்படுத்தலாம்.
1) இயற்கையிலேயே பாவ கிரகமான சனி, செவ்வாய், ராகு, கேது மற்றும் சூரியன் சேர்க்கை.
2 அவரவர் சாதக கட்டத்தில் உள்ள மறைவிட ஸ்தான அதிபதிகள் சேர்க்கை.
ஒரு சிலரது சாதகங்களில் கிரகங்கள் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருப்பினும் அதன் தசை அவரது வாழ்வில் உரிய காலத்திற்கு வராமல் கஷ்டப்படக் கூடிய சூழல்கள் அமைவதை பார்க்கிறோம்.
ஒரு சிலரது சாதகங்களில் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் எவ்வித கிரகங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு உரிய காலத்தில் நல்ல தசை நடப்பில் வந்து அவரது வாழ்வினை உயர்நிலைக்கு கொண்டு செல்வதை பார்த்திருக்கிறோம்.
ஒரு ஜாதகம் யோக பலனை தர வேண்டுமாயின் அந்த ஜாதகத்தில் "உயிர் "என்று அழைக்கப்படும் லக்கனமும், அதன் அதிபதியும் இதேபோல "உடல்" என்று அழைக்கப்படும் இராசியும்,ராசி நாதனும் பலம் இழக்காமல் இருக்க வேண்டும்.
"உயிரின்றி உடல் தனித்து வாழ இயலாது" .ஒரு முழு மனித வாழ்விற்க்கு உயிரும், உடலும் அவசியம் ஆகும்.இருப்பினும் ராசி நாதனை விட லக்கன நாதனே சாதகரை வழி நடத்தி செல்லும் கேப்டனாக திகழக்கூடியவர் ஆவார்.
ஒருவரது ஜாதகத்தில் லக்னமும், ராசியும் இரண்டும் பலம் பெற்று நிற்கும் பொழுது அவரது வாழ்வு 100% எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறும் தன்மையை சாதகருக்கு தரும் வாய்ப்பு உண்டு.
ஒருவர் ஜாதகத்தில் பலன் பார்க்க முற்படும்போது உயிர் என்று அழைக்கப்படும் இலக்கனத்தை அடிப்படையாகக் கொண்டே சாதக பலனை ஜாதகருக்கு விளக்க முயல் வேண்டும்.
இலக்கண அடிப்படையாகக்கொண்டு சாதகப் பலன் பெறுவதை "விதி" என்று அழைக்கிறோம். ஒரு சமயம் விதி கெட்டால்"மதி" என்ற வகையில் ராசியை லக்கனமாக கொண்டும் சாதக பலன் விளக்கலாம்.
இலக்கனம் மற்றும் ராசியை வெவ்வேறாக கொண்டவர்களுக்கு இலக்கனம் மற்றும் ராசி ஆகிய இரு வழிகளிலும் கிரகங்கள் பலம் பெற்று இருப்பின் ஜாதகர் மிகுந்த யோகம் படைத்த சாதகராக இருப்பார்.
இலக்கனம் மற்றும் ராசி ஆகிய இரு வழிகளில் ஏதேனும் ஒரு வகையில் கிரகங்கள் பலமடைந்து நின்றால் சாதகர் ஐம்பது சதவீதம் யோக பலன் பெற்றவராக இருப்பார்.
இலக்கனம் மற்றும் ராசி ஆகிய இரு வழிகளிலும் கிரகங்கள் பலம் இழந்த நிலையில் இருப்பின் "கதி" என்று அழைக்கப்படும் சூரியனை அடிப்படையாகக் கொண்டு சாதக பலன் பெற முயலலாம்.
இவ்வகையிலும் பலம் இழந்து நிற்பின் தரித்திர சாதகம் ஆகும்.விதிப்பலன் என்ன செய்வது.
ஒரு சாதகத்தில் குரு பகவான் லக்கனம், ராசி, லக்கனாதிபதி மற்றும் ராசி அதிபதி இவற்றில் ஏதாவது ஒரு சிலவற்றை பார்க்க அது யோக சாதக வரிசையில் சேரும் வாய்ப்பு உண்டு.
ஒரு ஜாதகத்தில் கேந்திர ஸ்தான அதிபதிகளின் திசையை விட , கோண அதிபதிகளின் திசையே மிகுந்த யோக பலன்களை சாதகருக்கு தரும் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
லக்னாதிபதிக்கு நட்பாகவும் மற்றும் லக்கனாதிபதி இருக்கும் இடத்திற்கு கேந்திர, கோணங்களில் இடம் பெறும் கிரகங்கள் தனது திசையில் சாதகருக்கு யோக பலன்களை தருகிறது.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
எனது மின்னஞ்சல் முகவரி
masterastroravi@gmail.com.
My blogspot
AstroRavichandran .blogspot .com
AstroRavichandransevvai .blogspot .com.
No comments:
Post a Comment