திருமணம் என்னும் சுப வைபோகம்
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
திருமணம் தொடர்பான சில சோதிட அடிப்படையிலான உண்மைகள்
களத்திர ஸ்தானாதிபதியான ஏழாம் வீட்டு அதிபதியும், களத்திரகாரகன் சுக்கிரனும் குடும்பாதிபதியான இரண்டாம் வீட்டு அதிபதியும் மறைவிட ஸ்தனங்களான ஆறு ,எட்டு மற்றும் பன்னிரண்டில் மறைந்தாலும் அல்லது நீசம் பெற்றாலும் திருமணம் நடைபெற காலதாமதமாகும். சுபகிரகங்கள் பார்த்தால் தெய்வ பரிகாரங்கள் திருமணம் விரைவில் நடக்கலாம். இதில் பாவ கிரகங்கள் பார்த்தால் திருமணம் பல இன்னல்களுக்கு இடையே நடைபெற வாய்ப்பு இருக்கலாம்.
களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்து, ஏழாம் அதிபதி, களத்திர காரகன் சுக்கிரனையும் பாவ கிரகங்கள் பார்த்தால் அந்த பாவ கிரகத்திற்குரிய சாந்தி பரிகாரம் செய்தால் காலங்கடந்து திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டு.
பொதுவாக சிம்மம் மற்றும் கடக லக்னகாரர்களுக்கு ஏழாமதிபதி சனியாக வருவதால் ஏறுக்கு மாறாக மனைவி அமைவாள். இதிலே சுபகிரகங்கள் பார்வை இருந்தால் மனதிற்கு பிடித்த மனைவி அமைவாள்.
இதேபோல்தான் மகர, கும்ப லக்கனங்ளுக்கு ஏழாம் அதிபதி சந்திரன் மற்றும் சூரியன் லக்னாதிபதி சனி பகவானுக்கு பகையாக அமைவதால் மேற்கண்ட வகையில் சுபகிரகங்கள் பார்வை இருந்தால் மட்டுமே மனதிற்கு பிடித்த மனைவி அமைய வாய்ப்பு உண்டு.
களத்திர ஸ்தானாதிபதி மற்றும் களத்திரகாரகன் இரண்டும் ஆண் வீடு ஏறி இருந்தால் பெண் ஜாதகத்தில் ஆண்குணமும், ஆண் ஜாதகமாக இருந்தால் பெண்மை குணமும் இருக்கும்.
களத்திரகாரகன் சுக்கிரன் இருக்கும் ஸ்தாத்திலிருந்து ஏழாவது வீடு எந்த திசையை அந்தத் திசையில் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. ஏழாம் அதிபதியையோ அல்லது சுக்கிரனையோ ராகு, கேது பார்த்தால் நேர் திசையில் திருமணம் நடைபெறாது. மூலை வாக்கில் திருமணம் நடைபெற வாய்ப்புண்டு.
ஏழாம் அதிபதி அல்லது சுக்கிரன் சர ராசி வீட்டில் அமர்ந்தால் தூரத்தில் திருமணம் நடைபெறும்.
(சர ராசி மேஷம் கடகம் துலாம் மற்றும் மகரம்),
ஸ்திர ராசி வீட்டில்ட்டில் அமர்ந்தாள் உள்ளூரில் திருமணம் நடைபெறும்.
(ஸ்திர ராசி- ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம்)
உபய ராசி வீட்டில் அமர்ந்தால் பக்கத்து ஊரில் திருமணம் நடைபெறும்.
(உபய ராசி மிதுனம் கன்னி தனுசு மற்றும் மீனம்)
ஏழாம் வீட்டு அதிபதி மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் ஆனவர் சனி, ராகு பார்த்தாலும் அல்லது அவருடைய நட்சத்திரக் காலில் நின்றாலும் அந்நிய உறவில் திருமணம் நடைபெறும்.
ஏழாம் வீட்டு அதிபதியும், களத்திரகாரகன் சுக்கிரனும்
குரு, புதன் ,சந்திரன் போன்ற நட்சத்திர காலில் நின்று சுபக்கிரகங்கள் பார்த்தால் அத்தை மாமன் போன்ற நெருங்கிய உறவில் திருமணம் நடைபெறும்.
பொதுவாக ஒருசிலருக்கு திருமணம் காலதாமதமாக கொண்டு செல்வதற்கும் அல்லது திருமணமே நடந்தாலும் அவர்களுக்கிடையே ஒருவித அன்யோன்ய தன்மை இல்லாமல் இருக்கும் அல்லது ஒரு சிலருக்கு கருத்து ஒற்றுமை ஏற்படாமல் விவாகரத்து வரை சென்று வருவதற்கும் அவர்கள் சாதகத்திலுள்ள கிரகங்கள் நடத்தும் பாடே ஆகும்.
இப்பிறப்பில் நாம் என்னதான் நல்வினை புரிந்திருந்தாலும்,
"ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்" என்ற சிலப்பதிகாரம் புணைந்த இளங்கோவடிகள் கூற்றுப்படி " முற்பிறப்பில் நாம் செய்த ஊழ்வினைப் பயன் ஆனது இப்பிறப்பில் நல்வினை மற்றும் தீவினையாக வந்து நம்மை துயரபடுத்துவதற்கு காரணமாக அமைகிறது.
ஒருவர் திருமண காலத்திற்கு முன்பாக தன்னுடைய சாதகத்தினை முறையாக ஆய்வு செய்து பார்த்து தமது திருமண வாழ்வானது எவ்வாறு இருக்கும் என்பதை முன்கணிப்பு செய்துகொண்டால் அதன் வழி வரக்கூடிய இன்னல்களை "நம்மால் மாற்ற இயலாத செயல் " என்பதை புரிந்து கொண்டு கர்மபலன் என்று அனுபவிக்க மனதை தயார்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவரது திருமண வாழ்வு பற்றி அறிய முன்னரே நான் பல பதிவுகளில் கூறியது போல "லக்கனம் ,குடும்பம் , களத்திரம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் ஆகும்.இதேபோல கிரகங்களில் களத்திரகாரகன் சுக்கிரன், காம காரகன் செவ்வாய் மற்றும் புத்திரகாரகன் குருபகவான் ஆகிய மூன்று கிரகங்களையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
திருமண வாழ்வினை விதி எனப்படும் லக்கனம், மதி எனப்படும் ராசி மற்றும் கதி எனப்படும் சூரியன் ஆகிய மூன்றையும் லக்கனமாக கொண்டு மூன்று வழிகளிலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
திருமண வாழ்வானது இம்மூன்று வழிகளிலும் பாதிக்கப்பட்டிருந்தால் திருமண பந்தத்தில் ஈடுபடாமல் விலகி இருப்பதோ அல்லது பற்றற்று மனதை தயார் படுத்திக்கொண்டு திருமண பந்தத்தில் ஈடுபடுவதோ நல்லது ஆகும்.
"விதி வழி வழியது வாழ்க்கை"
ஒரு மனிதன் என்னதான் முயற்சி செய்து தனது வாழ்வை நல்வழியில் அமைக்க முயன்றாலும் கர்ம பலனே நம்மை இழுத்துச் செல்லும்.
இம்மானிட பிறப்பானது வினை பயனை அனுபவிக்கவே மீண்டும் பிறப்பு எடுக்கின்றது.
ஜாதகத்தில் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம்,புத்திர தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் ... போன்ற பலவித தோஷங்கள் உள்ளதா ? என் ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும்.
கோச்சார அடிப்படையிலான ஏழரைச்சனி, அஷ்டமசனி..போன்றவை உள்ளதா ? என கவனிக்கப்பட வேண்டும்.
திருமண காலத்தில் நடைபெறும் தம்பதிகள் இருவரது திசைகளை கவனிக்க வேண்டும்.நல்ல திசையாக இருந்தால் மட்டும் திருமணம் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
ஜாதகத்தில் குரு நோக்கம் உள்ளதா? என்பதை கவனிக்க
பட வேண்டும். குரு பகவான் 2 ,5 ,7 ,9 போன்ற இடங்களை பார்க்கும் காலம் திருமணத்திற்கு உகந்த காலமாகும்.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
My blog
WWW.AstroRavichandran.blogspot.com
WWW.AstroRavichandransevvai.blogspot.com
No comments:
Post a Comment