Saturday, 25 January 2020

கிரக தத்துவங்கள்

கிரக தத்துவங்கள்


                           

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

   ஒரு குழந்தையானது தாயின் வயிற்றில் கருவாக உருத்தெரியாமல் ஜெனிக்கும போதே கிரகங்களது தாக்குதல் ஆரம்பமாகியது என்றாலும் இப்பிரபஞ்சத்தினை தாயின் வயிற்றில் இருந்து வெளியேறுகின்ற காலத்தில் வானவீதியில் வலம் வரும் கிரகங்கள் தான் அந்த ஜெனிக்கும் குழந்தையின் ஆளுமைத்தன்மையை நிர்ணயிக்கிறது.

  ஒரே வயிற்றில் ஒரே பெற்றேர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கரு இரட்டையராக(identical twins) இருந்தாலும் அவ்விருவருகளுக்கு இடையேயும் பிறந்த நேரம் ஒரு சில வினாடிகளே வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களுக்கு இடையேயும் ஒரே மாதிரியான குணநலன்கள் காணப்படுவதில்லை.

 எத்தனையோ கோடிக்கணக்கான 
மக்கள் பிறந்து மறைந்திருப்பார்கள் ,
எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் பிறக்க இருக்கிறார்கள் ஆனால்  ஒருவரது கைரேகையை போலவே மற்றொருவர் கைரேகை அமைவதில்லை.
அதேபோல எத்தனையே கோடிக்கணக்கான மக்கள் பிறந்து இருக்கிறார்கள் ,பிறக்க போகிறார்கள் ஆனால் ஒருவரது சாதகத்தினை போலவே வேறு ஒருவரது சாதகமானது அமைவதில்லை.

 ஒரு சில சாதகங்களை மேம்போக்காக பார்க்கும் பொழுது யோகமற்ற சாதகமாக காணப்பட்டாலும், சாதக கட்டத்தில் சில சூட்சுமமான முறையில் பலம் பெற்று அந்த ஜாதகத்தை யோக ஜாதகமாக மாற்றிவிடுகிறது.

  ஒரு சில ஜாதகங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் கிரகங்கள் அதிகமாக இருப்பினும் அவரது வாழ்வு சாதாரன சராசரி மனிதனின் வாழ்வாகவே பிறப்பிலிருந்து இறப்பு வரை அமைந்து விடுகிறது.

 ஜாதகத்தில் யோகமான அமைப்புகள் காணப்பட்டாலும் அக்கிர திசை நடப்பில் இல்லாது போகலாம் அல்லது அந்த யோகங்கள் ஏதோ ஒரு வகையில் பங்கபட்டிருக்கலாம்.

 ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நீசம் அடைந்து இருந்தால் வலிமையை இழக்கும் என்பது 
பொது விதியாக இருந்தாலும் அது திக்பலம் பெற்று இருக்கின்ற பட்சத்திலோ அல்லது வர்க்கோத்தமம் பெற்றிருக்கும் நிலையிலோ அல்லது நீசபங்கம் பெற்றிருக்கும் பட்சத்தில் அல்லது பரிவர்த்தனை பெறும் நிலையில் அது பலமடைந்து யோகம் உள்ள கிரகமாக மாறுகிறது.

  ஒரு கிரகம் நீசம் ..போன்ற வகையில் பலவீனமடைந்து இருந்தாலும் சாரநாதன் பாவகிரகமாகவே இருந்தாலும் உச்சம் பெற்று இருப்பின் அக்கிரகம்  பலமடைந்து யோக பலனை அதன் தசையில் தருகிறது.மேலும் சுப கிரக பார்வை பட மேலும் நற்பலனை கூடுதலாக தருகிறது.

  பொதுவாக பாவ கிரகங்கள் கேந்திரத்திலும் ,சுப கிரகங்கள் திரிகோணத்திலும் நிற்பது நல்லது.

   ஒரு ராசியில் இரண்டு பாவ கிரகங்கள் இணைந்து ஒரு ராசியில் காணப்பட்டாலும்
 13 பாகை வேறுபாடு இருப்பின் அவ்விரு கிரகங்கள் இணைந்து ஒரே ராசியில் இருந்தாலும் அவ்விணைவால் பாதிப்பு கிடையாது.

  சூரியன் உடன் இணைந்த கிரகங்கள் அஸ்தமனம் அடைந்து இருந்தாலும் சாரநாதன் உச்சம் போன்ற நிலைகளில் பலமடைந்து இருப்பின் கிரகம் அஸ்தமனம் அடைந்தே இருந்தாலும் யோக பலன்களை தருகிறது.

  உதாரணமாக கடக வீட்டில் செவ்வாய் நீசம் அடைந்து இருந்தாலும் சாரநாதன் குரு பகவான் உச்சம் அடைந்து இருந்தால் நீசம் பங்கம் அடைவதுடன் செவ்வாய்பகவானது சார நாதனும் உச்சம் அடைந்த நிலையில் யோக பலனை தருகிறது.

 லக்கனாதிபதியோ  அல்லது லக்கனத்திற்கு சுப கிரகங்களோ மறையத் கூடாது என்பது பொது விதியாக இருந்தாலும் சில விதிவிலக்காக ஒரு சில லக்கனத்தை பொறுத்தோ அல்லது கிரகத்தினை பொறுத்தோ இவ்விதி மாறுபடலாம்.

 உதாரணமாக உபய லக்னத்திற்கு குருவும், புதனும் சுப கிரகங்களாக இருந்தாலும் காரக பலன்களை சிறப்பாக தந்தாலும், அவை பாதக ஸ்தானமான ஏழாமிடத்தில் இருந்தால் பாதகத்தை தரும்.மேலும் கேந்திராதிபத்திய தோஷமும் பெறும் என்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்கிரகங்கள் இரண்டும் மறைவிடங்களில் இடம் பெறுதல் சிறப்பு பெறுகிறது.ஆனால் மறைவிடங்களுக்கு செல்லும் போது தீய பலன்களை தராது எனினும் அதற்குரிய காரக பலன்கள் மட்டுப்படுத்தப்படுகிறது.

  லக்கனாதிபதி பாவ கிரகமாக இருப்பின் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் நேரடி பலன் பெறாமல்  மறைவிடங்களுக்கு செல்லுதலே நலம் பயக்கும்.

 ஒரு கிரகம் நீச பங்கம் பெற்றால் நற்பலனை தரும் என்பது பொது விதியாக இருந்தாலும் துலா லக்னத்தில் நீசம் பெற்ற சூரியனுடன் பாவ கிரகமான சனி உச்சம் பெறும் பொழுது  நீசபங்கம்  பெறுகிறது என்றாலும் சூரியன்+சனி சேர்க்கை பாபத்துவ அமைப்பினை பெறும் என்ற வகையில் இந்த நீச பங்கம் நற்பலன்களை தராது.

  சாதக கட்டத்தில் ஒரு கிரகத்திற்கு வீடு தந்தவனோ அல்லது சார நாதனோ உச்சம் பெற்று சுப கிரக பார்வையை பெற அக்கிரக திசையானது யோக பலன்களை மிகுதியாக தருகிறது.

  ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம்  நீசம் பெற்று இருந்தாலும் அந்த நீசம் பெற்ற கிரகம் கேந்திர, கோண அதிபதிகளின் நட்சத்திர சாரம் பெற்று இருப்பின் அதன் திசை காலங்களில் அந்த வீட்டின் அதிபதி திசை காலத்தினை விட மிகுந்த யோக பலன்களை தரும்.

 உதாரணமாக விருச்சக லக்கினத்திற்கு ஏழாமிடத்தில் நீசம் பெற்ற கேதுபகவான் 9-க்குடைய சந்திர பகவான் நட்சத்திர சாரத்தில் இருக்கும்போது சுக்கிர தசையை விட அந்த இடத்தில் உள்ள கேது தசையில் மிகுந்த யோக பலனைக் கொடுக்கிறது.

 ஒரு சாதத்தில் நீசம் அடைந்து இருக்கும் கிரகத்திற்கு பார்வை பலம் கிடையாது.

 சில நேரங்களில் இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருந்தாலும் அது இணைந்து இருப்பதாக கருதி கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. .ஆனால் அதே நேரத்தில் இரண்டு கிரகங்கள் வேறுவேறு ராசியில் இருந்தாலும் ஒன்றாக இணைந்த கிரகமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இது எவ்வாறு என விளக்குவதற்கு கிரகங்கள் அமர்ந்து உள்ள பாகை நிலையினை கணக்கில் எடுத்துக்கொண்டு விளக்க முற்படலாம்.

   பாகை அடிப்படையில் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும்போது மேஷ ராசியில் உச்சம் பெற்ற சூரியன் 4 பாகை அளவில்  அமர்ந்து  உச்சம் பெற்று , இணையக் கூடிய செவ்வாய் பகவான் 28ஆவது பாகையில் நிற்க .24 பாகை வித்தியாசத்தில் ஒரே ராசியில் உள்ள கிரகங்களை   இணைந்ததாக கருதிக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது.இங்கு சூரியன் மற்றும் செவ்வாய் இணைவு பெற்ற கிரகமாக கருதி அளிக்கப்படும் பலன்கள் தவறாக போய் முடியும்.

 அதே நேரத்தில் மேஷ ராசியில் 28  பாகையில் செவ்வாய் ,ரிஷப ராசியில் முதல் 2 பாகை அளவில் சுக்கிரன் இருந்தால் அவ்விரு கிரகங்கள் வேறுவேறு ராசியில் இருந்தாலும்  செவ்வாய்+சுக்கிரனை இணைந்து உள்ள கிரகமாக கணக்கில் எடுத்துக் கொண்டு பலன் அளிக்க முற்பட வேண்டும்.

  திருக் பலம் எனப்படும் பார்வை பலனை பொறுத்த வரை எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை உண்டு என்ற வகையில் லக்கனத்தில் உள்ள சுப கிரகமானது தனது ஏழாவது பார்வையால் ஏழாம் இடத்தை மட்டும் பார்ப்பதாக உறுதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. 
சில நேரங்களில் அக்கிரகம் இணைந்துள்ள பாகை அடிப்படையில் அந்த ஏழாம் இடத்திற்கு முதலாக உள்ள ஆறாம் இடத்தையும், ஏழாம் இடத்திற்கு அடுத்ததாக உள்ள எட்டாம் இடத்தையும் பார்வை  செய்யும் வாய்ப்பு உண்டு.

 இரண்டு லக்கனத்திற்கு பாகை அடிப்படையில் லக்கன சந்தியில் உள்ள ஒரு கிரகமானது தனது திசையில் இருக்கும் லக்கன அடிப்படையில் அதற்கு அடுத்துள்ள ஸ்தானம் வழியாக பலன்களை ஸ்தானத்திற்கு ஏற்ப கொடுக்கும்.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
   9715189647

       செல்
  9715189647
    7402570899

                         
   அன்புடன்
 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
(ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி ,
புதுக்கோட்டை மாவட்டம்.

My email
 masterastroravi@gmail.com

My bogspot,

www.AstroRavichandran.
blogspot.

WWW.AstroRavichandransevvai.blogspot.com

................................,..............

No comments: