Saturday, 25 January 2020

கோள்களின் கோலாட்டம்

கோள்களின் கோலாட்டம்

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளிகோள்களின் கோலாட்டம்

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

      மனிதனாக பிறப்பெடுத்த அனைவரும் தனது வினைப்பயனை இப்பூவுலகில் அனுபவிக்கவே பிறப்பாக பிறப்பெடுக்கிறோம்.

      ஒருவர் யாராக  , எந்த நாட்டில், எந்த மதத்தில் , யாருக்கு பிள்ளையாக  எந்த காரணத்திற்காக மற்றும் எந்த நேரத்தில் பிறப்பு எடுக்கிறோம் இதுபோன்ற பல  விஷயங்களையும் ஊழ்வினைப்பயனே முடிவு செய்கிறது.

 ஒரு பிள்ளை பிறப்பது பெற்றோர்கள் மூலமாக இருந்தாலும் அந்த பிள்ளை பிறந்தது பெற்றோர்களுக்காக மட்டுமல்ல என்பதை பெற்றோர்களாகிய அனைவரும் புரிந்து கொள்ள பட வேண்டிய ஒன்றாகும்.

    ஸ்ரீராம அவதாரம் எடுத்தது இராவண வதம் நடத்தவே அன்றி தசரதனுக்கு  பிள்ளையாக பிறந்து  அயோத்தியை மட்டும்  அரசாட்சி புரிய அல்ல.

   இப்பூலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட  ஒரு சில காரண-காரியத்திற்காக சிருஷ்டிக்கப்படுகிறார்கள்.
  ஒவ்வொரு பிறப்பும் எக் காரணத்திற்காக பிறப்பு எடுக்கிறதோ  அதற்கு உரிய காலநேரம் மற்றும் கிரக அமைப்புகள் வானவீதியில் உலாவரும் காலகட்டத்திலேயே‌
ஒருவரது வயிற்றிலிருந்து பிறப்பாக இப்புவியில் கால் வைக்கிறது.

  ஜெனன நேரத்தில் வான வீதியில் உலா வரும் கிரகங்களே சாதகரின் வினைப்பயனை தீர்மானிக்கிறது.

  அவன் அரசனாக பிறப்பு எடுப்பதும், ஆண்டியாக பிறப்பு எடுப்பதும் அவர் வாங்கி வந்த ஊழ்வினைப்பயனின்  வினைப் பயனே காரணகர்த்தா ஆகும்.

  மனிதனாக பிறந்த ஒருவர் ‌ஏதோ ஒரு பாதை நோக்கி பயணித்தாலும் வாழ்க்கை காட்டாற்றில் நம்மை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு வந்து நமக்கான பாதையை அமைத்து தருவதும் வினைப்பயனேயின்றி வேறு அல்ல.

 ஒரு சிலர் என்னவாக ஆக நினைக்கிறார்களோ அதுபோலவும்,ஒரு சிலர் என்னவாக ஆக நினைத்தாரோ அவற்றிற்கு முற்றிலும் மாறாகவும் வாழ்க்கை தடத்தை அமைத்து கோள்கள் கோளாட்டம் செய்கிறது.

  ஒருவரது பிறப்பின் இரகசியத்தை அதாவது வினைப்பயனை அறிய ஜோதிட அறிவு சாதாரண மனிதனுக்கு பேருதவி புரிகிறது.

  ஒருவரது முழு வாழ்வினையும்   நவகிரகங்கள் சாதக கட்டத்தில் உள்ள பன்னிரண்டு ராசிகளில் எந்த பாகையில்,எந்த நட்சத்திர சாரத்தில் மற்றும் எந்த கிரகங்களின் பார்வை மற்றும் சேர்க்கை அடைந்து உள்ளது என்பதைப் பொருத்தும், பலன் பார்க்கப்படும் நிலையில் வான வீதியில் உலாவரும் கிரக நிலைகளை பொருத்தும்( கோச்சார நிலை) மற்றும் நடைபெறும் தசை, புத்தி ஆகியவை சார்ந்தும் ஒருவரது வாழ்வில் நிலை தீர்மானம் செய்யப்படுகிறது.

  சாதக கட்டத்தில் ஒரு கிரகங்கள் வலுவு நிலையினை ஆராய ஸ்தான பலம்,திக் பலம் மற்றும் திருக் பலம் மிக அவசியமான ஒன்றாகும்.

  ஜாதகத்தில் ஸ்தான பலம் இழந்த கிரகங்கள் திக் பலம் பெற்றாலும் சாதகருக்கு யோகா பலனையே தருகிறது.

 பொதுவாக ஒரு ஜாதகம் யோக ஜாதகமா அல்லது அவயோக ஜாதகமாககவோ  அமைய பல்வேறு விதிகளை நமது முன்னோர்கள் சோதிட மூல நூல்களில் தனது ஞான திருஷ்டியால் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இந்திய வேத சோதிடம் நமது நாட்டின் பொக்கிஷம் ஆகும்.

 சாதக கட்டத்தில் பிறப்பு,கல்வி,பொருள் ஈட்டல், திருமணம்,பதவி மற்றும் புத்திரம் இது போன்ற பல அடிப்படை விசயங்களுக்கு விடை காண சாதக கட்டத்தில் உள்ள ஸ்தானங்களும்,நவ கிரகங்களும் காரண கர்த்தாவாகிறது.

 மேற்கண்ட லொளகீக வாழ்வுக்கு தேவையான விஷயங்களை மட்டுமன்றி அவனது பிறப்பின் ரகசிய சூட்சுமமான உண்மைகளை சோதிட ஞானத்தில் மேம்பட்டவர்களால் மட்டுமே அறியப்படுகிறது.

  ஒரு ஜாதகர் தனது வாழ்வில் உயர்வு நிலையை அடைய லக்கனமும் மற்றும் அதன் அதிபதியும் முக்கியம் ஆகும்.

 ஜாதகத்தில் எந்த கிரகங்கள் இருந்தாலும் லக்னாதிபதியான எவ்வகையிலும் பலமிழக்க கூடாது ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் இழந்து மறைவிடங்களில் நின்று பாவ கிரகங்களால் சூழப்பட்ட அமைப்பினை பெற்ற சாதகம் தரித்திர சாதகம் ஆகும்.

ஒருவர் தனம் படைத்தவராக வாழ்வில் விளங்க லக்கினம், தன,பாக்கிய மற்றும் லாப அதிபதிகள் பலமடைந்து தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு நின்று தனகாரகன் குருபகவானது பார்வையினை பெற்ற அமைப்பு உடையவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட கிரகங்களது திசை காலங்களில் அடுத்த வேளைக்கு கஷ்டப்படும் அன்றாடம் காய்ச்சி குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் பொருளாதார நிலையில் உச்சத்தை தொடுவார்கள்.

ஒருவர் ஜாதகத்தில் தனாதிபதியான இரண்டாம் அதிபதியும், தனகாரகன் குருவும் பலமிழந்து ஆறுக்குடைய கிரகம்  வலுப்பெற்றால் காலம் முழுவதும் தனது கடன் காரணாகவே வாழ்ந்து வாழ்வை முடிப்பார்.

 ஒருவரது ஜாதகத்தில் கேந்திர, கோண அதிபதிகள் மறைவிட ஸ்தான அதிபதிகள் தொடர்பின்றி தங்களுக்குள்  பரிமாறிக் கொண்டு பலம் பெற்று நிற்கும் பொழுது யோக பலன்களை சாதகருக்கு அதன் திசை புத்திகளில் தந்து சாதகரது அந்தஸ்தினை உயர்த்தி செல்கிறது.

  ஒரு சாதகத்தில் நீசம் பெற்ற கிரகங்கள் நீசபங்கம் பெற்று இருந்தாலும்,அஸ்தமனம் பெற்ற கிரகங்கள் வர்க்கோத்தமம் மற்றும் திக் பலம் பெற்று இருந்தாலும் யோக பலன்களை சாதகருக்கு தருகிறது.

  ஒருவர் சாதகத்தில் கல்வியறிவு பெற்றவராக திகழ லக்கனம்,வாக்கு ஸ்தானம்,சுக மற்றும் பாக்கிய ஸ்தானங்கள் பலமடைந்து இருக்க வேண்டும்.

 ஒருவரது மணவாழ்வு சிறக்க லக்கனம், இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம்,ஏழாமிடமான களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் ஆகிய மேற்குறிப்பிட்ட ஸ்தானங்கள் அன்றி களத்திரகாரகன் சுக்கிரன்,காமகாரகன் செவ்வாய் பாவ கிரக தொடர்பின்றி பலமடைந்து நிற்க வேண்டும்.

 ஒருவர் புத்திரர்களால் புகழ் அடைய புத்திர ஸ்தானமான  5-ஆம் இடமும் அதன் அதிபதியும் மற்றும் புத்திர காரகன் குருவும் பாவர் கலப்பு இன்றி பலமடைந்து இருக்கவேண்டும்.

 ஒருவர் அரசாங்க வேலையில் அமர மற்றும் ஆட்சி செய்யும் அதிகாரம் பெற அவரது ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகமும் மற்றும் அரசாங்க காரகன் சூரியனும், சிம்மமும் பலம் பெற்று தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றிருக்க வேண்டும்.

ஒருவரது ஜாதகத்தில் கேந்திர, கோண அதிபதிகள் மறைவிட ஸ்தான அதிபதிகளுடன் பரிமாறி நிற்கும்பொழுது அது ஒருவித தரித்திர யோக ஜாதகம் ஆகும்.

ஒருவர் ஜாதகத்தில் எவ்வளவுதான் யோகமான கிரக அமைப்புகள் இருந்தாலும் சுகாதிபதி பலமிழந்து நின்றால் அந்த யோக பலனை அனுபவிக்கும் யோகம் இராது.

 அதேநேரத்தில் ஏனைய கிரகங்கள் பலமிழந்து சுகாதிபதி பலம் பெற்றால் சுகாதிபதியுடன் தொடர்புடைய கிரக காரக  உதவியல் சுகமாக தன் வாழ்வை நடத்தி விடுவார்.

  தொடரும்..

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
  9715189647
    செல்
  9715189647
   7402570899

  அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
    M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

.......... அம்மன் துணை!

..........

No comments: