Saturday, 25 January 2020

திருக்கணித முறையில் சனி பெயர்ச்சி பலன்கள்-2020-2023

திருக்கணித முறையில் சனி பெயர்ச்சி பலன்கள்

                    2020-2023.


                     

     செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!

       திருக்கணித முறையில்
 24 -1 -2020-வெள்ளி கிழமை  சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்கிறார் . 

மகரராசி சனி பகவானுக்கு சொந்த வீடு ஆகும்.

  வாக்கியப்படி சனிப்பெயர்ச்சி ஆனது 2020- டிசம்பர்- 27 ஆகும்.

      ஒரு ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் சனி பகவான் வரும் காலம் ஏழரை சனி ஆரம்பமாகிறது .

   ராசிக்கு 12ல் சனி வரும் காலம் " விரயச்சனி" ஆகும்.

     ராசியில் சனி பகவான் இடம்பெற்றால் "ஜென்ம சனி"ஆகும்.

 ராசிக்கு இரண்டாமிடத்தில் சனி பகவான் இடம்பெற்றால் "பாதச்சனி "ஆகும்.

  விரயசனி 21/2 வருடம்
ஜென்ம சனி 21/2
   பாத சனி 21/2
ஆக "ஏழரை சனி" ஏழரை ஆண்டுகள் ஆகும்.

     ராசிக்கு நான்காம் இடத்தில் சனி பகவான் இடம் பெற்றால் "அர்த்தாஷ்டமச் சனி" ஆகும்.

 ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி பகவான் இடம் பெற்றால் "அஷ்டமச்சனி" ஆகும்.

    கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனுசு ராசிக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனியாக இருந்த சனி பகவான் மகர ராசிக்கு இடம் பெயருவதன் மூலம் தனுசு ராசிக்கு
பாதச் சனியாக மாறுகிறது.

 விருச்சகராசி ராசிக்கு ஏழரை சனியில் பாதச் சனியாக இருந்த சனி பகவான் மகர ராசிக்கு இடம் பெயர்வது மூலம் விருச்சக ராசிக்கு கடந்த ஏழரை ஆண்டுகளாக நடந்துவந்த ஏழரைச் சனி நிறைவு பெறுகிறது.

  
   ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கும் சனி பகவான் மகர ராசியில் 24 .01.2020 - லிருந்து- 24. 7 .2022  வரை சஞ்சாரம் செய்வார்.

  மகர ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்வதால் இது மகர ராசிக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி ஆரம்பம்  ஆகிறது. 

    கடந்த இரண்டரை ஆண்டுகளாக  மகரராசிக்கு ஏழரைச் சனியில் விரயச்சனி நடந்துவந்தது.தற்பொழுது மகர ராசிக்கு ஜென்மச் சனியாக மாறுகிறது.

 கும்ப ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சி லிருந்து ஏழரை சனி ஆரம்பமாகிறது.  குறிப்பாக கும்ப ராசிக்கு இந்த இரண்டரை ஆண்டு காலம் விரயச்சனி ஆகும்.

 தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பெயர்வதால் தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி விலகி பாதச் சனி ஆரம்பமாகிறது. இது ஓரளவு ஏழரைச்சனியில் பாதிப்பிலிருந்து தனுசு ராசி விலகல் அடைகிறது.

 இந்த சனிப்பெயர்ச்சி யானது கன்னி ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்து  அர்த்தாஷ்டம சனியாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்த சனிபகவான் மகர ராசிக்கு இடம் பெயர்வதன் மூலம் துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி ஆரம்பமாகிறது.

  கடந்த இரண்டரை ஆண்டுகளாக மிதுனராசிக்கு ஏழாமிடத்தில் சனி பகவான் நின்று கண்டச் சனியாக இருந்த சனி பகவான் மகர ராசிக்கு இடம்பெயர்வது மூலம் மிதுன ராசிக்கு கண்டச் சனி விலகி , எட்டாம் இடத்திற்கு வந்த சனி பகவான் அஷ்டமச் சனியாக மாறுகிறது.

 தற்பொழுது  கடக ராசிக்கு ஏழாமிடத்தில் மகர ராசிக்கு சனி வருவதால்  கடகம் ராசிக்கு கண்ட சனி ஆரம்பமாகிறது.

 ஏழரைச் சனியை பொருத்தவரை சனி பகவானுடைய பகை கிரகமான சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் பகவானின் சொந்த வீடுகளான மேஷம் ,கடகம், சிம்மம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு ஏழரைச் சனியோ, அஷ்டமச்சனி, கண்டச்சனி மற்றும் அர்த்தாஷ்டமச் சனி அதிக இன்னல்களை தர வாய்ப்புண்டு.

 மகர ,கும்ப ராசிக்கு சனி பகவானின் சொந்த வீடு என்பதால் அதிக பாதிப்பு வர வாய்ப்பு குறைவு.

சனி பகவானே நட்பு கிரகங்களான  புதன் மற்றும் சுக்கிரன் வீடுகளான ரிஷபம் மிதுனம் கன்னி மற்றும் துலாம் ஆகிய ராசிகளுக்கு  சமமான அளவு பாதிப்பை தரும்.

 ஏழரைச் சனி என்றாலே ஆண்டுகளும் கஷ்டத்தைத் தரும் என்று எண்ணிவிடக் கூடாது.

    இள வயதில் அதாவது குழந்தை பருவத்தில் வரும் ஏழரைச் சனி ,அஷ்டம சனி அந்தக் குழந்தையை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை என்பதை அவர்களது பெற்றோர்களுக்கதான் பாதிப்பைத் தருகிறது.

 ஏழரைச்சனியின் ஒரு குழந்தை ஜெனிக்கும் போதோ அல்லது பிறக்கும் போது  பெற்றோர்களுக்கு பொருளாதார அளவில் கஷ்டங்களும், அவர்களுக்கிடையே புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு சில நேரங்களில் ஒரே வீட்டில் இருந்தாலும் சண்டை சச்சரவுகளுடனோ அல்லது பிரிவினையையோ தர வாய்ப்புள்ளது.

  அஷ்டம சனி காலங்களில் அவர்கள் பெற்றோர்களுக்கு வம்பு, சண்டை  மற்றும் வழக்குகளில் ஈடுபட்டு காவல்நிலையத்தின் வாசலை மிதித்தல், சிறை செல்லல் , வாகன விபத்து மற்றும் ஆயுள் பங்கம் போன்றவை தர வாய்ப்புள்ளது.

 பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் ஏழரை மற்றும் அஷ்டமத்து சனி வந்தால் அவரது கல்வி நிலை பாதிப்பு ஏற்படும்.

 திருமண காலத்தில் ஒரு இளைஞர் /இளைஞிக்கு ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச் சனி நடப்பில் இருப்பின் திருமண தடையை ஏற்பட வாய்ப்பு உண்டு.புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு பிரிவினை உண்டாக்கும்.

  அர்த்தாஷ்டமச்சனி என்பது சுகஸ்தானத்தில் சனி வருவதால் அவருடைய உடல் நலத்தில் பின்னடைவை உண்டாகும்.தன் சுகம், தாய் சுகம்,வாகன சுகம் மற்றும் கல்வியால் சுகம் போன்றவற்றில் பாதிப்பு உண்டாகிறது.

 ஏழாமிடத்திற்கு வந்த சனி பகவான் கண்ட சனியாகி தண்ட செலவினை சாதகருக்கு கொடுக்கும். இக்காலங்களில் விரயச் செலவுகள் சுப செலவுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

   ஏழரை சனி காலங்களில் நிறைய இன்னல்களை தந்து உறவு என்றால் என்ன? நட்பு என்றால் என்ன? போன்ற விஷயங்களை உணரவைத்து ஒரு மனிதனுக்கு வாழ்வின் உண்மை நிலைகளை உணர வைப்பது சனிபகவான் அதனால்தான் சனிபகவானை சனீஸ்வரர் என்றும் அழைக்கிறோம்.

  அஷ்டம சனி காலங்களில் வம்பு, சண்டை ,வழக்கு  மற்றும் வீண் விவாதம் போன்ற செயல்களில் ஈடுபடாமல் விலகி இருப்பது நல்லது.

 ஏழரை மற்றும் அஷ்டமத்து சனி காலங்களில்  திருநாள்ளாறு சென்று சனிபகவானை வழிபாடு செய்ய வேண்டும்.

 காகத்திற்கு சோறு வைத்தல்.

 பிராமணர்களுக்கு கருப்பு வஸ்திரம் தானம் செய்தல்.

விநாயக வழிபாடு செய்தல்.

 துர்க்கைக்கு எள் விளக்கு தீபம் ஏற்றுதல்.

(தங்களது பிறந்த சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
  9715189647
     செல்
 9715189647
7402570899
                              
                          

 அன்புடன் ஜோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன்
     M.Sc,M.A,BEd
 (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம். கறம்பக்குடி,. புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: