சூரிய பகவான்
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
சூரிய பகவான் ஜாதக கட்டத்தில் ஒரு ராசிக்கு ஒரு மாதம் வீதம் 12 ராசியை சுற்றிவர ஒரு வருடம் ஆகிறது.
கோள்களில் முதன்மையானதாக கருதப்படுவது சூரிய பகவான் ஆகும் . சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்களும் சுற்றி வரக்கூடிய அமைப்பையே சூரிய குடும்பம் (Solar system)
என அழைக்கிறோம்.
சூரியனை சுற்றி வரக்கூடிய எட்டுக் கோள்களும் மற்றும் ஐந்து குறுங்ககோள்களும் நீள்வட்டப்பாதையில் ஈர்ப்பு விசை அடிப்படையில் பிணைக்கப்பட்டு தத்தம் பாதையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ராசிக்கட்டத்தில் சூரியனுடனோ முன்பின் ஒரு ராசியில் புதனும் , இதேபோல சூரியனுடன் அல்லது முன் பின் இரண்டு ராசிகள் தள்ளி சுக்கிரனும் சுற்றி வருகிறது. எனவே சுக்கிரனும் புதனும் உள்வட்ட கோள்கள் என அழைக்கப்படுகிறது. என்றழைக்கப்படுகிறது.
சூரிய குடும்பத்தில் சூரியனை தொடர்ந்து புதன், வெள்ளி ,புவி, செவ்வாய், வியாழன், சனி யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்கள் சுற்றி வருகிறது.
சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்கள் "புவியை ஒத்த கோள்கள் "என்று அழைக்கப்படுகிறது. கோள்களில் மிகப்பெரிய கோள்களாக வியாழன் மற்றும் சனி பகவான் கருதப்படுகிறது.
ஜாதகத்தில் ஆட்சி செய்யும் அதிகாரம், உயர்ந்த அந்தஸ்து ,அரச பதவி, அமைச்சர் ,உயர் அரசாங்க அதிகாரி மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் போன்ற உயரிய பொறுப்பினை தரும் பங்கு சூரிய பகவானுக்கு உண்டு.
சூரிய பகவானை தந்தைக்குக் காரகன் என்றும் அழைக்கப்படுகிறது. எலும்புகளுக்கு வலிமையை தருவது சூரிய பகவானே ஆகும். கண் பார்வை முதலிய உடல்நலக் குறைபாடுகளுக்கு இரண்டாமிடத்தில் தொடர்புடைய சூரிய பகவானின் காரணமாகும்.
ஜாதகத்தில் சிம்மம் லக்கனமும்,சூரிய பகவானும் வலுப்பெற்று பத்தாமிடத்தோடு அல்லது பத்தாம் அதிபதி வலுப்பெற்ற நிலையில் இயற்கை சுப கிரகமான குரு பகவானால் பார்க்கப்பட்டு சுப வலிமை பெரும் பொழுது அரசாங்க வேலை பார்ப்பவராக சாதகரை மாற்றி விடுகிறது.
சூரிய பகவான் சித்திரை மாதத்தில் மேஷ ராசியிலும் ,வைகாசி மாதத்தில் ரிஷப ராசியிலும் ,ஆனி மாதத்தில் மிதுன ராசியிலும்... இவ்வாறாக ஒரு ஜாதகர் பிறந்த மாதத்தை கொண்டு அவரது ஜாதக கட்டத்தில் உள்ள சூரிய பகவான் எங்கு இடம் பெற்றுள்ளார் என்பதை எளிமையாக கண்டறியலாம்.
ஜாதக கட்டத்தில் உள்ள 12 ராசிகளில் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு ஆறு ராசி காலங்களில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நடை போடுவார். இவ்வாறு தெற்கு நோக்கி நடைபோடும் காலம் தட்சிணாயனம் என்று அழைக்கப்படுகிறது.
தட்சிணாயன காலம் ஆடிமாதம் முதல் மார்கழி மாதம் வரை ஆகும். ஆடி மாதத்தில் கடக ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்வார் .எனவே தட்சிணாயன காலத்தில் சூரிய பகவான் கடகம், சிம்மம் ,கன்னி, துலாம் விருச்சகம் மற்றும் தனுசு ஆகிய, ஆறு ராசிகளில் சஞ்சாரம் செய்வார். தட்சிணாயன கால ஆரம்ப காலத்தில் தான் விவசாயிகள் நிலங்களில் விதைகளை விதைத்து அந்த ஆறு மாத காலங்கள் அதனை குப்பைகள் முதலிய இயற்கை உரங்கள் இட்டு , நீர் பாய்ச்சி விவசாயம் செய்து அறுடைக்காக காத்திருந்தார்கள். இதனால்தான் "ஆடிப்பட்டம் தேடிவிதை" என்றார்கள்.
ஆறு மாத காலம் எவ்வித செயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்து இட்டு வளர்க்கப்படாமல் இலை,தழை மற்றும் மாட்டுச்சாணம் இட்டு நாற்றங்காலில் இருந்து பயிர்களை அரித்து மிகுந்த நீர்வழிகள் மிகுந்த வயல்களில் பயிரிட வீரியம் பெற்று நீண்ட நாள் உயிர் வாழக்கூடிய ஆரோக்கியமான நெற்மகசூலை தந்தது. இவ்வாறு விளைந்த நெல் மணிகளை உணவாக உண்டு மனிதன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தான்.
உத்திராயண காலத்தில் சூரிய பகவான் தனது நடையை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வார் இக்காலத்தை உத்தராயணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலத்தில் தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை உள்ள காலகட்டமாகும்.
தை மாதம் 1ஆம் தேதி சூரிய பகவான் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நடைபோடும் காலத்தை பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
தை மாதம் மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் மகர சங்கராந்தி பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது.
சூரிய பகவான் மகர ராசியில் இருந்து மிதுன ராசி வரை சஞ்சரிக்கும் காலத்தை உத்தராயண காலம் என்றும் அழைக்கப்படுகிறது.
சூரிய பகவானை ஆத்மகாரகன் என்று அழைக்கப்படுகிறது. சூரிய பகவான் இருக்கும் இடத்தை இலக்கணமாகக் கொண்டும் சாதக பலன் அறியப்படுகிறது. சூரிய பகவானை இலக்கணமாக வைத்து சாதகப்பலன் அறிவதை" கதி "என்று அழைக்கப்படுகிறது.
சூரியபகவான் தந்தைக்கு காரகர் ஆவார் ஒரு ஜாதகத்தில் சூரிய பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று நல்ல ஸ்தான நிலை பெற்று இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட அமைப்பு பெற்றவர்கள் புகழுடைய தந்தையை பெற்றவராவார்.
சூரிய பகவான் ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தில் இருப்பின் ஆளுமைத் திறனும் மிக்கவராகவும் சூட்டு உடம்பைப் கொண்டவராகவும் இருப்பர்.
வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சூரிய பகவான் அமர இவரது பேச்சில் அனல் தெறிக்கும் கோபகாரராகவும், கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடியவராகவும் மற்றும் கண் நோய் உடையவராகவும் காணப்படுவார்.
மூன்றாம் இடமான வீரிய ஸ்தானத்தில் சூரியபகவான் அமர ஒரு அசட்டு தைரியம்
உடையவராகவும், துணிச்சல் மிக்கவராகவும் காணப்படுவார்.
நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சூரியபகவான் அமர கல்வி -கேள்விகளில் வல்லவராகவும், கற்ற கல்விக்கு ஏற்ற வேலை பார்க்க கூடியவராகவும், தந்தை மீது பாசம் உடையவராகவும் காணப்படுவார்.
ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரிய பகவான் இடம் பெற தந்தை பாட்டன் வழி சொத்துக்களை அனுபவிப்பவராகவும் இருப்பார். புத்தி கூர்மை உடையவராகவும், பூர்வீகச் சொத்தாதை கூடியவராகவும் இருப்பார்.
சத்ரு ஸ்தானமான ஆறாமிடத்தில் சூரியபகவான் அமர எதிரியை வெல்வார். தந்தை வழி ஆதரவு கிடைக்காமை, அரசு வேலை கிடைக்காத சூழலும் உருவாகும்.
களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் சூரிய பகவான் அமர ஜாதகருக்கு கற்ற மனைவியும், சூரியன் உடன் புதன் பகவான் இணைந்து நிற்க அரசு வேலை பார்க்கக்கூடிய மனைவி அல்லது திருமணத்திற்குப் பின் அரசாங்க வேலை கிடைக்கக் கூடிய யோகமும் அமையும்.
எட்டாம் இடமான ஆயுள் ஸ்தானத்தில் சூரியபகவான் அமர தந்தை வழி ஆதரவு கிடைக்காது.அரசாங்க வேலை தடைபடும் நிலை சூழல், வம்பு வழக்குகளில் இருந்து ராஜதந்திரமாக விடுபடும் நிலை முதலியவை உருவாகும்.
பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் சூரிய பகவான் அமர்வது நல்ல வருமானம் தந்தாலும் தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் தந்தைக்கு காரகர் சூரியன் பகவான் அமர்வது காரக பாவ நாஸ்தியை கொடுக்கும் நிலை உருவாகும்.
பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சூரியபகவான் அமர்ந்து பலம் பெற்று நிற்க அரசின் உயர் அதிகாரியாக வேலை பார்க்கக் கூடிய யோகம் கிட்டும்.
லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் சூரியபகவான் நிற்பது தந்தை வழி ஆதரவு கிட்டும். தந்தையால் புகழ் பெறுதல், அரசு ஆதரவுடன் லாபம் அடையும் நிலை உருவாகும்.
விரய ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்தில் சூரிய பகவான் அமர்வது தந்தை வழி ஆதரவு கிட்டாத நிலை, அரசு வேலை கிடைக்காமல் தடைபடுதல் நிலை உருவாகும்.
ஒருவரது ஜாதகத்தில் சூரிய பகவான் புதன் பகவான் உடன் இணைந்து இருக்கும் சூழலில் சூரியனோ அல்லது புதனோ கெடாத சூழலில் அல்லது சூரிய பகவானுடன் புதன் அஸ்தமனம் அடையாத சூழலின்"புத -ஆதித்திய யோகத்தை "தருகிறது இது சாதகருக்கு பல பட்டங்களை பெறக்கூடிய யோகத்தை தருகிறது.
உதாரணமாக தனுசு லக்னத்திற்கு 9-க்குடைய சூரியனும் ,10-க்குடைய புதனும் ஒன்பதாமிடத்தில் இணைந்து சூரிய பகவான் ஆட்சி பெற்ற நிலையிலும் புத ஆதித்ய யோகமும், தர்மகர்மாதிபதி யோகமும் கொடுக்கிறது.
இதேபோல தனுசு லக்கனத்திற்கு பத்தாம் இடமான கன்னி ராசியில் சூரியன் ,புதன் இணைவு புதன் உச்சம், ஆட்சி மற்றும் மூலதிரிகோணம் ஆகிய மூன்று வகையில் பலம் பெற்று சூரியனுடன் இணைந்து புத -ஆதித்திய யோகம் மற்றும் தர்ம-கர்மாதிபதி யோகத்தை தருகிறது.
சூரிய பகவானுடன் குருவோ அல்லது கேது பகவானும் இணைந்த சூழலில் ஆன்மிகத்தின் உச்ச எல்லை தொடும் வாய்ப்புகள் இருக்கிறது.
சூரியனுடன், சந்திர பகவான் சேர்ந்து நிற்கும் சூழலில் அமாவாசை யோகத்தினையும், சூரியனுக்கு சமசப்தம ஏழாமிடத்தில் சூரியனும் சந்திரனும் சந்தித்துக் கொள்ளும் நிலை பௌர்ணமி யோகம் ஆகும்.
"இடுசெவ்வாய் கதிர் கூடி எங்கு நின்றாலும் இவளும் வாலிபம் தன்னில் அமங்கலி ஆவாள்"
சூரிய பகவானுடன் செவ்வாய் கூடி நிற்கும் வேளையில் சுப கிரக பார்வைபடாத நிலையில் மேற்கண்ட பலாபலன் நடக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.
ஒரு ஜாதகத்தில் சூரியன்,
சுக்கிரன் சேர்க்கை சிற்றின்ப வாழ்வுக்கும் இல்லற வாழ்வுக்கும் சுகம் படாத சூழல் உருவாகும்.
சூரிய பகவானுடன் நிழற்கிரகங்களான கரும்பாம்பு என்றழைக்கப்படும் ராகு பகவானும், செம்பாம்பு என்றழைக்கப்படும் கேதுபகவானும் இணையும்போது சூரிய பகவான் கிரகண தோஷத்தால் தமது பலனை இழக்கிறது.
ஜாதக கட்டத்தில் சூரியபகவானுடன் ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் சனிபகவான் இணையும்போது தந்தை மகனுக்கு இடையே சற்று விரிசல் உருவாகும். தந்தை சொத்து சேர்த்து வைக்க தவறியவராகவோ அல்லது தந்தை மகனுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு இல்லாத தன்மை அல்லது தந்தை இல்லாத சூழல் உருவாகும்.
பொதுவாக சூரிய பகவானுடன் சனி ,ராகு கேது இணைவு உகந்ததல்ல.
தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இணைவு ஒருவர் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவார்.
சூரிய பகவானுடைய அருள் பெற சிவன் கோவில்களில் சென்று சிவபெருமானை தரிசிக்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார் கோவில் சென்று சூரிய பகவானை வழிபடலாம்.
வாழ்வில் பல முயற்சிகள் செய்தும் வெற்றி பெறாத நிலை, மனதில் ஒருவித பதட்டம், மனச்சோர்வும் மற்றும் பயமும் உடையவர்கள் சூரிய பகவானின் ஆதித்திய ஹிருதயம் "உச்சரிக்க மேற்கண்டவை விலகி நற்பலன்கள் கிட்டும்.
நன்றி.
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் .கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com.
...........................................
No comments:
Post a Comment