Friday, 24 January 2020

சாதக கட்ட அமைப்புகள்

     சாதக கட்ட அமைப்புகள்


                            

   செவ்வாய்ப்பட்டி
 ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

    ஒரு வீட்டிற்கு எப்படி நான்கு தூண்கள் அவசியமோ , அதேபோல மனித வாழ்விற்கு சாதக கட்டத்தில் மனித வாழ்வினை சமூகத்தில் சீர் தூக்கி நிறுத்த "கேந்திரம் " எனப்படும் 1,4,7,10 ஆம் இடங்களும் அதன் அதிபதிகளும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

     அதேபோல் ஒரு  வீட்டினுள் நுழைய நுழைவாயில் எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு சாதக கட்டத்தில் சமூதாயத்தில் "பேரும் புகழும்" அடைய நுழைவாயிலாக  "திரிகோணம்" எனப்படும் 1,5,9 ஆம் இடங்களும் அதன் அதிபதிகளும் திகழ்கிறது.

  ஒரு மனிதன் தனிமனித வாழ்வில் சிறக்க கேந்திர ஸ்தானங்களும் அதன் அதிபதிகளும் உதவி புரிகின்றன. அது எவ்வாறு என ஆராய்ந்து உற்று நோக்கினால் தங்களுக்கு விடை கிடைக்கும்.

  ஆம். லக்கனம் எனப்படும் ஒன்றாம் இடம் தன்னையும் தான்சார்ந்த குணங்களையும் தெரிவிக்கிறது.

    இரண்டாவது கேந்திர ஸ்தானமான நான்காம் இடம் தாய் நிலை பற்றியும் மற்றும் தாய்வழி அம்மான் வர்க்ககங்களை பற்றி அறிய பயன்படுகிறது.

   மூன்றாவது கேந்திர ஸ்தானமான ஏழாம் இடம் தனக்கு வாழ்க்கை துணையாக வரக்கூடிய கணவனையோ அல்லது மனைவியையோ பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.

    நான்காம் கேந்திரமான ஸ்தானமான பத்தாமிடம் இல்வாழ்வுக்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய  ஜீவன நிலையைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது.

 ஜாதகத்தில் திரிகோண ஸ்தானங்கள் மற்றும் அதன் அதிபதிகளும் சமூக வாழ்விற்கு மற்றும் சமுதாய தொடர்பு பெரும்பங்காற்றுகிறது இதன் தசை காலங்கள் சாதகர்க்கு மிகுந்த யோக பலனை தருகிறது.இது எவ்வகையில் சால் பொருந்துகிறது என ஆராய்வோம்.

   ஒருவர் பொது வாழ்வில் சிறக்க ஜாதகரை வழிநடத்தி செல்லக்கூடிய கேப்டன் எனப்படும் 
லக்கனம் மற்றும் அதிபதியை  பொருத்தே அமைகிறது. 

  சமூகத்திலுள்ள மனிதர்களை பற்றி கவலைப்படவும், சமூகப்பணி ஆற்றவும் வள்ளலார் வழிநின்று "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் "என்ற மனநிலையோடு பொதுஜன மக்களுடன் "அன்பின் வழியது உயிர்நிலை" என்ற வள்ளுவ பெருந்தகையின் கூற்றுப்படி வாழ்ந்து காட்ட  புத்தி ஸ்தானமான ஐந்தாம் இடம் பெரும்பங்காற்றுகிறது.

 "கொடைக்குணம் என்பது பிறப்பு நிலை ஆகும்.இல்லறம் என்பது இல்+அறம்‌ .இல்‌ என்பது இல்லம் ஆகும். முன்னோர்கள் கூறிச்சென்ற அறவழியில் நின்று குடும்ப வாழ்வை மேற்கொள்வதை இல்லறம் என்போம்.
அறம் என்பது "விதித்தன செய்தலும் ,விலகியன ஒழித்தலுமாகும்".

 முன்னோர்கள் விதித்து சென்றதை ஏற்று ஒழுக்க வழிநின்று வாழ்தலும், அவர்கள் வெறுத்து ஒதுக்கியதை விட்டு விலகி நிற்பதும் ஆகும்.

   சாதக கட்டத்தில் கட்டத்தில் மூன்றாவது பெரிய திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் இடத்தை தர்ம ஸ்தானம் என்று அழைப்பார்கள்.

 சமுதாய வாழ்வில் 
தான தர்ம குணங்களுடனும் ,
தாராள மனப்பான்மையுடனும் திகழ ஒன்பதாம் இடமும் அதன் அதிபதிகளும் உதவி புரிகின்றன. ஒரு பிள்ளை சமூக தொடர்பை வைத்துக்கொள்ள தந்தையே முன்னுதாரணமாகவும் இருப்பதால் ஒன்பதாம் இடத்தை தந்தை ஸ்தானமாகவும் கொள்ளப்படுகிறது.

    ஒரு மனிதன் தனிமனித வாழ்விலும் மற்றும் சமூக வாழ்விலும் சிறந்து விளங்க இந்த கேந்திர கோண அதிபதிகள் தங்களது ஜாதகத்தில் ஒன்றுக்குள் ஒன்று பரிவர்த்தனை பெற்று பலம் பெற்று நிற்கும் போது அதன் திசை நடப்பில் உள்ள காலங்களில் உயரிய புகழை அடைகிறான்.

   இலக்கணம் மற்றும் அதன் அதிபதியும் கேந்திர மற்றும் கோணம் ஆகிய இரண்டிற்கும் பொதுவான அதிபதிகளாக வருவதால் ஒரு மனிதன் தனி மனித வாழ்விலும் மற்றும் பொது வாழ்விலும் உயர்ந்தோங்கி நிற்க அவனை வழிகாட்டி நடத்திச் செல்வது இலக்கணமாகும் அதனால்தான் ஜாதகரை வழிநடத்தி செல்லக்கூடிய கேப்டனாக அது திகழ்கிறது.

 ஒரு ஜாதகத்தில் ஏனைய ஸ்தானங்கள்  வலுவிழந்தே நின்றாலும் உயிர் காரகராகிய இலக்கனமும் அதன் அதிபதியும் வலுப்பெற்று நின்றால் எதிர் நீச்சல் பேட்டு  இப்பிறப்பு எனும் மாயக்கடலை நீந்தி கரையேறி விடலாம்.

   ஒரு நாள் என்பது இரவும், பகலும் சேர்ந்தது போல மனித வாழ்விற்கு ஒளியாக இந்த கேந்திர கோணங்கள் திகழ்கிறது.இருளாக மறைவிட ஸ்தானங்கள் திகழ்கிறது.

 ஒளியாக நல்லறமும், இருளாக தீவினையும் கலந்தே சமூகத்தில் உள்ளது.

 ஒரு மனிதன் தனிமனித வாழ்விலும் மற்றும் சமூக வாழ்விலும் உயர்வு அடைய தடையாக இருக்கக்கூடிய ஸ்தானங்களாவன மறைவிட ஸ்தானங்களும் (3,6,8,12) அதன் அதிபதிகளும் ஆகும்.

அதனால் இந்த கேந்திர கோண ,ஸ்தான அதிபதிகள்  உடன் மறைவிட ஸ்தான அதிபதிகள் பரிமாறிக் கொண்டு நின்று அதன் திசை நடப்பில் உள்ள காலங்களில் ஒரு மனிதன் தனது தனி மனித வாழ்விலும் மற்றும் சமூக வாழ்விலும் இடர் பட்டு கெட்ட பெயர் எடுக்க நேரிடும்.

     ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது .
இதனை ருண, ரோக மற்றும் கடன் ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஸ்தானம் பலம் பெற்று நின்று கேந்திர கோணாதிபதிகள் பலமிழந்து இருக்கும்பொழுது‌ இதன் திசை காலங்களில்
சாதகர்  கடன் அல்லது எதிரி அல்லது பிணி போன்ற ஏதாவது ஒரு தொல்லைகளை பெற்று இருக்கும்பொழுது அவன் தனி மனித வாழ்விலும் சமூக வாழ்விலும் நேரிய வழியில் இயங்க முடியாமல் போய்விடுகிறது.

  இதேபோல ஒரு ஜாதகருக்கு எட்டாம் இடம் என்பது அஷ்டம ஸ்தானம் ஆகும்.  இந்த ஸ்தானம் வலுப்பெற்று ஏனைய கேந்திர, கோண அதிபதிகள் பலம் இழக்கும் பொழுது அதன் திசை காலங்களில் சமூகத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வம்பு ,வழக்கு மற்றும் பிரச்சினைகளை அகப்பட்டு சிறை செல்லும் சூழலும், விபத்து போன்ற சம்பவங்களும் ஏற்படலாம்.

நன்றி.(என் மனதில் எழுந்த ஒப்பீடுகள்)

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647

    செல்
  9715189647
‌. 7402570899

                                  

  அன்புடன் 
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் , கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com.

.....

No comments: