Monday, 23 September 2024

நாக சாபத்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் அதற்கு உரிய பரிகாரம்

 நாக சாபத்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் அதற்குரிய பரிகாரம்.




.


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   கீழ்க்கண்ட கோள் அமைப்பு உடையவர்கள் நாக சாபத்தால் குழந்தை பேரு இல்லாதவர்கள்  ஆகும்.சிலருக்கு குழந்தை இருந்தும் ஊனம் ,சுய நினைவு இன்மை மற்றும் அற்ப ஆயுள் போன்ற குறைபாடுகள் இருக்கும்.


              1) லக்கினத்தில் ராகு இருந்து செவ்வாயின் பார்வையை பெறுவது அல்லது செவ்வாயில் வீடுகளான மேஷம், விருச்சகத்தில் ராகு பகவான் இருப்பது.


            2) புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகு இருப்பது அல்லது புத்திர ஸ்தான அதிபதி ராகுவுடன் சேர , 

சனி பகவான் ஐந்தில் இருக்க பதினொன்றில்  சந்திரன்  இருந்து  சனியை பார்ப்பது.


             3) புத்திர காரகன் குருபகவான் லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்தில் அமர்ந்து ராகுவுடன் சேர லக்கனாதிபதி உடன் செவ்வாய் சேர்ந்து இருப்பது .


             4) குரு பகவானும் ,செவ்வாய் பகவானும் சேர்ந்திருக்க, ராகுவும் லக்ன அபதியும் சேர்ந்து எங்கு வேண்டுமானாலும் இருக்க ஐந்தில் சந்திரன் இருப்பது புத்திர தோஷம் ஆகும்.


         5) கடகம், தனுசு லக்கினமாகி ஐந்தாம் வீடான செவ்வாய் வீட்டில் ராகு இருக்கக்கூடியது . புதன் சனியால் பார்க்கப்படுவது புத்திர தோஷம் ஆகும்.


        6) ஐந்தாம் இடத்தில் ராகு ,குரு ,புதன் ,சனி செவ்வாய் சூரியன் ஆகியவை இருப்பது புத்திர தோஷத்தை கொடுக்கும்.


      7) புத்திர ஸ்தானமான ஐந்தாம் இட அதிபதி , சத்ரு ஸ்தான அதிபதியான ஆறாவது அதிபர் உடன் இணைந்து நற்கோள்கள் பார்க்காமல் நின்றால் கொடிய பகைவரின் சாபத்தால் சாதகற்கு பிள்ளை பாக்கியம் இல்லை. 


      8)  புத்திர ஸ்தான அதிபதி ஆறாம் இடத்தில்  சுப கோள்கள் பார்க்காமல் தீயவை மட்டும் பார்க்கப்படுமானால் தெய்வ சாபத்தால் ஆண் பிள்ளை பிறக்காது.


        9) குரு பகவானும், செவ்வாய் பகவானும் சேர்ந்திருக்க, 

 ராகுவும் லக்னாதிபதியும் சேர்ந்து எங்கு வேண்டுமானாலும் இருக்க மற்றும் ஐந்தில் சந்திரன் இருப்பது புத்திர தோஷம்.


         10 ). புத்திர ஸ்தானமான ஐந்தில் ராகு, குரு புதன் ,சனி, ,செவ்வாய் மற்றும் சூரியன்  இருக்கக்கூடாது.அவ்வாறு இருந்து சுப தன்மை அடையவில்லை எனில் புத்திர தோஷம் ஆகும்


    1 1  ) புத்திர ஸ்தானாதிபதி ,சத்ரு ஸ்தானம் எனப்படும் ஆறாம் இட அதிபதியுடன் இணைந்து நற்கோள்கள் பார்க்காமல் நின்றால் கொடிய பகைவரின் சாபத்தால் புத்திரம் இல்லை.  


  12 ) புத்திர  ஸ்தான  அதிபதி ஆறில் சுப கோள்  பார்க்காமல் பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு ,கேது மற்றும் தேய்பிறை சந்திரன் பார்வை மற்றும் சேர்க்கைகள்  முறையில் தொடர்பு கொள்வது தெய்வ  சாபத்தால் சாதகருக்கு ஆண் பிள்ளை இல்லை.


  நாக சாபத்துக்கு உள்ளாகி புத்திர பாக்கியம் தடைப்படக்கூடிய சாதக அமைப்பை பெற்றவர்கள் கீழ்கண்ட பரிகாரத்தின் மூலமாக சர்ப்ப சாந்தி செய்து புத்திர பாக்கியத்தை பெறலாம்.


    1) கணவன் மனைவி இருவரும் முழு விரதம் இருந்து பிள்ளையார் உள்ள அரச மர குளக்கரையில் குளித்து அந்த அரச மரத்தை ஐந்து முறை வலம் வந்து அவ்வாறு வரும்பொழுது விநாயகர் ஸ்துதி செய்து குழந்தை பாக்கியத்தை வேண்டி பிறகு ஒரு ஐந்து ஏழு அல்லது ஒன்பது என்ற வகையில் சுமங்கலி பெண்களுக்கு பூ ,பொட்டு, மஞ்சள், குங்குமம்  மற்றும் வஸ்திரம் அடங்கிய பொருட்களை ஒரு தட்டில் வைத்து அந்த பெண்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற அந்த புத்திர தோஷம் விலகும் அந்த சர்ப்ப சாந்தி பெரும்.


  2). ராகு காலத்தில் ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம், பேரையூர், ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளகஸ்தி மற்றும் திருப்பாம்புரம் போன்ற ஸ்தலங்களில் ஏதாவது ஒரு ஸ்தலம் சென்று வெள்ளியில் நாகப்படமடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வரவும் .அவ்வாறு  செய்து வந்தால் சர்ப்ப சாந்தி நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும்.


நன்றி!


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



       

அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: