சொத்து சேரும் யோகம்
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை சிலர் பணமாகவோ சிலர் பொருளாகவோ உடைமைகளை சேர்த்து வைக்கவே ஆசைப்படுகிறார்கள் .இவ்வாறு சேர்த்து வைக்கக்கூடிய ஆசை இருந்தால் மட்டும் போதுமா ? அதற்கான ஜாதக அமைப்பு அவருடைய ஜாதக கட்டத்தில் வேண்டும் அல்லவா ? அதற்கான ஜாதகம் அமைப்பை என்னவென்று பார்ப்பதே இந்த பதிவில் தலையாய நோக்கமாகும்.
ஒருவர் பூமி வாங்கி சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவருடைய ஜாதகத்தில் நான்காம் இடம் ,அதனுடைய அதிபதி மற்றும் பூமி காரகன் செவ்வாய் ஆகிய மூன்றும் வலிமை அடைந்து இருக்க வேண்டும். லக்கனாதிபதியின் வலிமையும் மிகவும் முக்கியமாகும். அவ்வாறு வலிமை அடைந்த கிரகத்தை அல்லது ஸ்தானத்தை இயற்கை சுப கிரகமான குரு பகவான் அல்லது இயற்கை சுப கிரகங்களான புதன் , சுக்கிரன் வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் உடைய பார்வை. அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் இருக்க வேண்டும்
இவ்வாறு நான்காம் இடம் அதிபதி செவ்வாய் வலுப்பெற்று இருந்தால் மட்டும் போதுமா அதற்குரிய தசா புத்திகள் அல்லது யோக தசைகள் நடப்பில் இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் தான் அந்த யோகத்தை ஒருவர் முழுவதும் அனுபவிக்க முடியும் என்னதான் லக்கனாதிபதி வலிமை இன்றி அதற்குரிய தசா புத்திகள் வரவில்லை என்றால் நான்காம் இடம் , அதன் அதிபதி மற்றும் தசெவ்வாய் வலுப்பற்று இருந்தாலும் பூமி வாங்கி சேர்க்கக்கூடிய யோகம் அற்று போய்விடும்.
ஒருவர் நிறைய வண்டி வாகனங்களை வாங்கி சேர்க்கக்கூடிய யோகம் எனப் பார்த்தால் உயிர் ஜீவ சந்துகளை ஏற்றக்கூடிய கார், பேருந்து, வேன் , டாட்டா சுமோ. போன்றவை நான்காவது இடம் அதன் அதிபதி மற்றும் வாகன காரகன் சுக்கிரன் ஆகியவற்றின் வலிமையை அவசியம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்
சனி பகவான் சுபத்துவமான நிலையில் வலுப்பெற்று இருந்தால் JCB , போன்ற கனரக வாகனங்கள் வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.
நான்காம் இடத்தில் எத்தனை கிரகங்கள் தொடர்பு கொள்கின்றதோ அந்த கிரக எண்ணிக்கை களுக்கு ஏற்ப சொந்த வீடு அமையும்.வாடகைக்கு வீடு கட்டி விடும் யோகம் உண்டாகும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சொகுசு வாழ்க்கையையும் மற்றும் சொத்து சேரக்கூடிய அமைப்பையும் தரக்கூடிய ஒரே காரக கிரகம் சுக்கிரன் பகவான் ஆவார். சுக்கிர பகவான் நன்முறையில் வலுப்பெற்று சுபத்துவமான நிலையில் அமைந்து விட்டால் வண்டி ,வாகனம், ஆடம்பரமான பங்களா, புதுவிதமான மாடல் கார்கள் வாங்கி சேர்க்கக்கூடிய யோகம், உடல் முழுவதும் நகைகளை அணியக்கூடிய யோகம் போன்ற அனைத்தும் ஜாதகருக்கு உண்டாகும்.
நான்காம் இடம் அதன் அதிபதி மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்றும் வலிமை அடைந்து சுப தன்மை அடைந்து யோக தசைகள் நடப்பில் இருந்தால் ஹோட்டல், ட்ரான்ஸ்போர்ட் ,நகைக்கடை ,வண்டி வாகனம் மூலம் வருமானம், டிராவல்ஸ்,நடனம், சினிமா ,கணிப்பொறி அழகியல் சாதனங்கள் மற்றும் பல சரக்கு கடை போன்றவற்றை தொழிலாக செய்து அதன் மூலம் பெரும் தனம். ஈட்ட இயலும்.
ஒரு வழியாகத்தில் புதன் பகவான் வலுப்பெற்று சுவதன்மையடைந்து தொழிற் ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் கணிப்பொறி கணிதம் எடிட்டிங் ,சோசியல் மீடியா பயன்படுத்தி சம்பாதிக்கிறது ,புள்ளி விவரங்களை சேகரித்தல்,இசை , பேச்சு, இலக்கிய உரை ,மேடை பேச்சாளர்,ஆன்மீக உரை போன்றவற்றின் வாயிலாக பெரும் தனம் சேர்க்கும் யோகம் உண்டாகும்.
ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் நல்ல முறையில் வலிமை அடைந்து சுப தன்மை அடைந்து தொழில் ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் பேச்சு ,ஆசிரியர் தொழில் மூலம் ,நகைக்கடை மூலம் மற்றும் நீதிபதியாக ,வழக்கறிஞராக நீதித் துறை மூலம், நிதி துறையின் மூலம் பெரும் தனம் ஈட்டும் யோகம் ஜாதகருக்கு உண்டாகும்.
ஒரு ஜாதகத்தில் சூரிய பகவான் நன்முறையில் வலுப்பெற்று சுபதன்மையடைந்து தொழில் ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் அரசியல், அரசாங்கம் தலைமை பதவி போன்றவற்றின் மூலமாக பெரும்பாலும் சொத்து சேர்க்கக்கூடிய யோகம் உண்டாகும்.
பொதுவாக மகா தன யோகம் அடைய ஒரு ஜாதகத்தில் லக்கனாதிபதி வலிமை அடைந்து தனம் ,பாக்கியம் மற்றும் லாப ஸ்தானங்கள் அதன் அதிபதிகள் உச்சம் ஆட்சி போன்ற நிலையில் வலுப்பெற்று சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு தன காரகன் குருவும் இவர்களோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் மிகப்பெரிய கோடீஸ்வர யோகம் ஜாதகருக்கு உண்டாகும். இந்த யோகம் பெற தனம், பாக்கியம் மற்றும் லாப அதிபதிகள் ஒன்றுக்கொன்று பார்வை ,சேர்க்கை மற்றும் பரிவர்த்தனை மூலம் தொடர்பு கொண்டு சுப கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்றிருக்க வேண்டும். அதற்குரிய தசைகளும் நடப்பில் இருந்தால் நிச்சயமாக பெரும் தனம். ஈட்டி அதன் மூலமாக அவர்களுக்கு சொத்து சேரக்கூடிய யோகம் ஜாதகருக்கு உண்டாகும்.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment