Thursday, 13 August 2026

வாழ்வின் இன்ப துன்பங்களை முடிவு செய்யும் கிரக நிலைகள்.

 வாழ்வின் இன்ப துன்பங்களை முடிவு செய்யும் கிரக நிலைகள் .




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவருக்கு அறிவும் மற்றும் திறமையும் மட்டும் இருந்தால் போதாது.எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல யோக தசைகள் உரிய வயதில் வர வேண்டும்.லக்கனாதிபதி வலிமை அடைந்து இருக்க வேண்டும்.


 சில நேரங்களில் சரியான யோகம் தரும் தசைகள் உரிய வயதில் வர பெற்றவர்கள் பாக்கிய சாலிகள் ஆவார்.சரியான அறிவும், திறமையும் இல்லாமல் இருந்தாலும் விறுவிறு என்று வாழ்வின் உயரிய நிலையினை அடைந்து விடுவார்கள்.லக்கனாதிபதி வலிமை என்பது மிகவும் ஒத்துழைப்பு தரும் அமைப்பு ஆகும்.


 எல்லோருக்கும் வாழ்வின் உயரிய நிலையை நோக்கி நகர வேண்டும் என்பதே வாழ்வின் குறிக்கோள் ஆக இருக்கும்.ஆனால் சிலரை காட்டாற்று வெள்ளம் போல்  கெட்ட நேரம் வந்து வாழ்வில் பெருத்த கஷ்ட, நஷ்டங்களுக்கு உட்படுத்தி வாழ்வில் எதிர் பார்க்காத இடத்தில் நம்மை கீழ்  நோக்கி இறக்கி விடும்.இதிலிருந்து எழுவதற்குள் தொடர்ந்து வரும் தசா அமைப்புகளும் பலவீனமான நிலையில் பெருத்த கஷ்டங்களுக்கு உட்படுத்தி நசுக்கி எடுத்து விடுகிறது.இதில் லக்கனம் மற்றும் அதன் அதிபதி வலிமையாக இருந்தால் எதிர்நீச்சல் போட்டு வென்று விடலாம்.


 இதில் லக்கனம் மற்றும் அதன் அதிபதி மிகவும் பலவீனமான அல்லது பாவ தன்மையை அடைந்து இருக்கும் போது எதிர் நீச்சல் போடும் திராணியற்ற நிலையில் கடுமையான மன அழுத்தத்திற்கு உட்படும் நிலை உண்டாகும்.


சிலரது ஜாதகத்தில் வாழ்வின் முக்கியமான கால கட்டங்களில் ஆறு அல்லது எட்டுக்கு உரிய தசை  புக்தி வந்து வாழ்வில் சாதிக்க கூடிய கால கட்டத்தில் நடைபெற்று வாழ்வின் சாதனை கட்டத்தை தாண்டி செல்ல இயலாமல் செய்து விடுவது உண்டு.


மனநிலை காரகன் சந்திரன் பகவான் ராகு உடன் இணைந்த நிலையில் சனி பார்வை அந்த குறிப்பிட்ட ஸ்தானத்தில் விழும்போது, சந்திரன் பகவானே தேய்பிறை சந்திரன் ஆக இருக்கும் பட்சத்தில் கடுமையான மனநிலை பாதிப்புக்கு(autism ) உள்ளாக்குகிறது.


இந்த மன நிலை பாதிப்பு ஆனது சனி அல்லது செவ்வாய்  அல்லது ராகு அல்லது சந்திரன்  தசை வரும் போது இந்த மனநிலை பாதிப்பு ஆனது சற்று கூடுதலான பாதிப்புக்கு உள்ளாகிறது.


எவர் ஒருவர் ஜாதகத்திலும் லக்கனாதிபதி நீசம் அடைந்து சனி, செவ்வாய் அல்லது ராகு சேர்க்கை பெற்று நின்றாலும் அல்லது சனி அல்லது செவ்வாய் பார்வை பெற்ற நிலையில் இருந்தாலும் ஜாதகர் உடல் நிலையில் பாதிப்பு இருக்கும்.மனதளவில் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி விடுவார்கள்.இதில் ஆறாம் அதிபதி எட்டாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்தை ஆயுள் காரகன் சனி பகவான் பார்வை பெற்றால் ஜாதகரின் உயிர் பிரியும் நிலை உண்டாகும்.


இன்றைக்கு பெரும்பாலான ஜாதகங்களில் திருமண ஸ்தானமான 1,2,7,8 ஆம் இடங்கள் மற்றும் தாம்பத்ய சுகத்தை தரும் சுக்கிரன் மற்றும் புத்திர பாக்கியம் தரும் குரு பகவான் ஆகியவை கடுமையான பாவத்துவ நிலைக்கு உள்ளாகி பலவீனம் அடையும் நிலையில் திருமண வாழ்க்கை கால தாமதம் ஆகி கொண்டே செல்கிறது.


குறிப்பாக ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் சனி , செவ்வாய் மற்றும் ராகு தொடர்பு கொள்ளும் நிலையில் திருமணம் கால தாமதமாகி கொண்டே செல்லுதல் மற்றும் விவகாரத்து வாங்குதல் அல்லது குழந்தை பாக்கியம் இல்லாத நிலை போன்ற விதமாக பாதிப்புகள் ஜாதகருக்கு உண்டாகும்.


   இது போன்ற அமைப்பில் தாம்பத்ய சுகத்தை தரும் சுக்கிரன் பகவான் ஆனவர் சனி, செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூன்று கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை ஆகிய ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படும் பொழுது திருமணமே ஆனாலும் தாம்பத்ய சுகத்தை முழு திருப்தியாக அனுபவிக்க இயலாத நிலை உண்டாகிறது.


சிலரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன் மற்றும் சனி அல்லது ராகு சேர்க்கை பெற்ற நிலையில் இருக்கும்.அல்லது தாம்பத்ய சுகத்தை தரும் சுக்கிரன் மற்றும் குழந்தை பாக்கியம் தரும் குரு பகவான் ஆகிய இருவரும் ஒன்றையொன்று பார்வை செய்யும் நிலையில் திருமணமே ஆகி ஒரு வீட்டில் இருந்தாலும் தாம்பத்ய சுகத்தை பெற இயலாத நிலை அல்லது தாம்பத்ய சுகம் மறுக்கப்பட்ட நிலை உண்டாகும்.


 மேற்கண்ட இது போன்ற அமைப்பால் திருமண உறவில் பெரிய அளவில் திருப்தி அற்ற நிலையில் தாமரை இலையில் தண்ணீர் போல மண வாழ்வு அமைகிறது.


மேற்கண்ட அளவிலான பிரச்சினைகள் குடும்பத்தில் உருவாகும் பொழுது இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக பரிகாரம் என்ற பெயரில் யாரிடம் சென்று ஏமாந்து விட வேண்டாம் பெரிய அளவில் பண செலவு செய்ய வேண்டாம்.பல ஆன்மீக வாதிகளின் பிழைப்பு ஆனது இது போன்ற பிரச்சினைக்கு உரியவர்களால் பிழைப்பு சிறப்பாக நடக்கிறது.


 சிலர் பிரச்சினைகளில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற பரிகார பூஜை செய்பவர்களிடம் சென்று தனது வாழ்வில் நடக்கும் பிரச்சினைகளை சொல்வதை ஜாதகமாக பயன்படுத்தி கொண்டு பெரிய அளவில் பணத்தை செலவு செய்து விடுகிறார்கள்.


கிரகங்கள் தரும் பிரச்சினைகளில் இருந்து விடுபட அந்த குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு சென்று மனமுருக வேண்டினாலே சகல பிரச்சினைகளில் இருந்து பெரிய அளவில் பாதிக்காமல் தலைக்கு வருவது தலைப்பாகை உடன் போய் விடும் அல்லது அந்த பிர்ச்சினைகளை தாங்கி கொள்ளும் மனநிலையை கொடுக்கும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 

  097151 89647


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 



சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்  M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்Pin 622302..

No comments: