எதை நோக்கி உங்கள் வாழ்க்கை பயணம் செல்கிறது.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
மண்ணில் பிறந்த எந்த நபரும் ஏதோ ஒரு காரண கர்த்தாவாக மண்ணில் பிறப்பு எடுக்கிறார்.ஆதலால் யாரும் தாழ்ந்தவர் இல்லை.ஒவ்வொறுவருக்கும் ஒரு கதாபாத்திரம் ,சிலருக்கு ராஜா வேடம் , சிலருக்கு எடு பிடி வேடம் . அவரவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாய் நடித்தால் தான் அந்த நாடகம் மிகவும் சிறப்பாக மக்களை சென்றடைந்து விடும்.
சில நேரங்களில் ராஜா வேடத்தில் இருப்பவரை விட எடுபுடி நடிப்பில் இருப்பவர் சிறப்பாக தனது கதாபாத்திரத்திற்கு பாந்தமாக நடித்து இருப்பார்.
எனவே மனித வாழ்க்கை என்ற நாடகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு நமக்கு அளிக்கப்பட்டு வந்து பிறந்து இருக்கிறோம்.
இந்த கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் சரியாக நேர்மையான வழியில் உழைத்து வாழ முயற்சிகளை மேற்க்கொள்வோம்.
எனவே எந்த ஒரு நபரின் ஜாதகத்தை பார்த்தும் நாம் பீடை ஜாதகம் என்று ஜாதகர் மனதை கஷ்டபடுத்த விடக் கூடாது.
ஒவ்வொறு ஜாதகமும் ஏதோ சிறப்பம்சங்களை உள்ளடங்கி இருக்கும்..ஏதோ ஒரு அவ யோக அமைப்புகளை கொண்டு இருக்கும்.
எல்லா ஜாதங்களும் றூறு சதவீதம் சிறப்பான ஜாதகமாகவோ அல்லது நூறு சதவீதம் பீடை ஜாதகமாகவோ அமைந்து விடாது.
இதில் லட்சத்தில் ஒருவர் ஜாதகம் யோகம் தரும் ஜாதகமாகவோ அல்லது லட்சத்தில் பலர் மிகவும் கஷ்டங்களை அனுபவிக்க கூடிய ஜாதகமாகவோ அமைகிறது.
சில ஜோதிடர்கள் ஜாதகத்தை வாங்கி பார்த்தவுடன் அவர்களுக்கு உரிய அரைகுறை ஞானத்துடன் ஜாதகத்தை தூக்கி வீசி இது கடுமையான பீடை ஜாதகம் என தூக்கி வீசுவதை பார்த்திருக்கிறோம்.யார் இவர்கள் ? என்ன இவர்கள் ரிஷிமார்களா ? இல்லையே பிறகு ஜாதகத்தை பார்த்தவுடனே "பீடை ஜாதகம் "என தூக்கி வீசி மனதை கஷ்டபடுத்தி விடுகிறார்களே ஏன் ? பல வினாக்கள் என்னுள் எழுந்தது உண்டு.
இளைஞர்களே உங்கள் ஜாதகத்தை பார்த்து விட்டு மோசமான ஜாதகம் என யார் கூறினாலும் நீங்கள் வெம்பி வதங்கி விடாதீர்கள்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள நவ கிரகங்களை பன்னிரெண்டு ராசி வழியாக பார்வை , சேர்க்கை மற்றும் வீடு கொடுத்தவன் வலிமை ஆகியவற்றின் வழியாக ஆய்வு செய்து பார்க்க ஏதாவது ஒரு சிறப்பம்சம் உங்கள் ஜாதகத்தில் இருக்கும்.
அந்த சிறப்பம்சம் நோக்கி வாழ்வை நகர்த்த வேண்டியது நமது கடமை ஆகும்.
அந்த சிறப்பம்சம் நமது வாழ்வில் எந்த கால கட்டத்தில் நடைபெறும் என்பதை தசாபுத்தி அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
உங்கள் ஜாதக கட்டத்தில் லக்கனம் மற்றும் அதன் அதிபதியின் வலிமை மிகவும் ஆவசியமான ஒன்றாகும்.இதுபோல் ராசி மற்றும் அதன் அதிபதி வலிமை மிக்கதாக இருக்க வேண்டும்.
லக்கனம் -ராசி மற்றும் அதன் அதிபதி ஆகிய மூன்றும் வலிமை அடைந்து இருந்தால் அந்த ஜாதகர் சிறப்பான ஒரு ஜாதகமாக கருதப்படுகிறது.லக்கனாதிபதி வலிமை அடைந்து இருந்தால் எல்லாமே வலிமை உடையதாக விளங்குகிறது.
ஒருவரது ஜாதகத்தில் திருமணம் கால தாமதம் ஆவதற்கான காரணம் உங்களுடைய ஜாதகத்தில் திருமண ஸ்தானமான 1,2,7,8 ஆகிய இடங்களில்,களத்திர காரகன் சுக்கிரன், புத்திர காரகன் குரு பகவான் மற்றும்
1,2,7,8- ன் அதிபதிகள் உடன் பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன்,ராகு மற்றும் கேது சேர்க்கை அல்லது பார்வை மூலம் தொடர்பு கொள்ள நடக்க கூடிய தசா புத்திகளுக்கு ஏற்ப திருமணம் தடை பெறலாம் அல்லது கால தாமதம் ஆகலாமே ஒழிய முற்றிலும் திருமணமே நடக்காது என பயம் உண்டாக்க வேண்டாம்.
இந்த திருமண தடை அல்லது கால தாமதம் ஆக என்ன காரணம் ? என ஆய்வு செய்து அதற்கு உரிய பரிகாரம் செய்தால்
உகந்த தசா புக்தி வரும் காலங்களில் திருமணம் நடைபெற்று விடும்.இதற்காகவும் பெரிய அளவில் மன வருத்தம் கொள்ள தேவையில்லை.
ஜாதக அமைப்பின் படி சிலருக்கு இளமை திருமணம் நடைபெறும்.ஒரு சிலருக்கு சற்று கால தாமதம் ஆகுமே ஒழிய பெரிய அளவில் மாற்றம் இல்லை.
ஒருவர் வெற்றி மேல் வெற்றி வரும் போதும் அந்த வெற்றியால் பணம் வந்த பிறகு மிகவும் நிதானமாக அடி எடுத்து வைக்க வேண்டும்.தொடர் வெற்றி வரும் போது அந்த வெற்றிகளுக்கு தான் மட்டுமே காரணம் என தலைக்கணம் கொள்ளும் மனிதன் தொடர் தோல்வி வரும் போது மட்டும் ஜாதகத்தை காரணம் காட்டி குறை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.
"பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்
ஒருவரது உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரது செயலே உரைக்கல் ஆக அமைகிறது."
நாம் செய்யும் நல்வினை மற்றும் தீவினைக்கு ஏற்ப நாம் பிறப்பு எடுக்கிறோம்.
நல்லதே எண்ணி நல்லதே செய்தால் அதுவே தலை சிறந்த பரிகாரம் ஆகும்.
நன்றி.
ஜாதகம் பார்க்க...
Cell & WhatsApp & Gpay no
097151 89647
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


No comments:
Post a Comment