Friday, 14 August 2026

விரய ஸ்தானம் தரும் பலன்கள்.

 விரய ஸ்தானம் தரும் பலன்கள்.




 செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

         ஒருவர் ஜாதகத்தில் பன்னிரெண்டாம் இடம் என்பது முடிவான அல்லது நிறைவான பாவகம் ஆகும்.இதன் மூலமாக ஒரு நாளின் நிறைவான இரவை குறிக்கும் ஸ்தானம் ஆகும்.

        இரவில் நடக்கும் காம சுகம் , படுக்கை சுகம் மற்றும் நித்திரை சுகம் ஆகியவற்றை அறிய உதவக்கூடிய ஸ்தானம் ஆகும்.

       ஒரு வாழ்வின் நிறைவான முக்தி நிலையினை அறிய உதவக்கூடிய ஸ்தானம் ஆகும்.

       ஒருவர் எப்படி செலவு செய்வார் என்பதையும் மற்றும் ஒருவருக்கு நடக்கும் விரயம் தரும் செலவுகளை அறிய உதவக்கூடிய ஸ்தானம் ஆகும்.

     ஒருவர் தனது  காம சுகத்தை எவ்வாறு பெறுகிறார் ? என்பதை அறிய உதவக்கூடிய ஸ்தானம் ஆகும்.தனது காம இன்பத்தை தனது வாழ்க்கை துணை உடனாகவா ?அல்லது வேறு ஒரு பெண் உடனாகவா ? என்பதை அறியவும் இந்த ஸ்தானம் பயன்படுகிறது.

    ஒருவர் ஜாதகத்தில் விரய ஸ்தானம் மூலமாக ஒருவரது நித்திரை சுகத்தை அறி உதவுகிறது.அண்ணாமலை படத்தில் ரஜினிக்கு வைத்து உள்ள ஒரு பாடல் இந்த இடத்தில் சரியாக வருவதை பார்க்கலாம்.

பாடல் இதோ

கட்டாந்தரையில்

ஒரு துண்டை விரித்தேன்

தூக்கம் கண்ணை சொக்குமே

அது அந்த காலமே!

மெத்தை விரித்தும்

சுத்த பன்னீர் தெளித்தும்

கண்ணில் தூக்கம் இல்லையே

அது இந்த காலமே!

         -----என்ற பாடலுக்கு ஏற்ப படுத்தவுடன் எவ்வித மன சிக்கல் இல்லாமல் உடனே தூக்கம் வருவதற்கு உடலில் எவ்வித மன சிக்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு ஜாதக கட்டத்தில் விய ஸ்தானம் என்று அழைக்கப்படும் பன்னிரெண்டாம் இடத்தில் சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன்,பாவி உடன் இணைந்த புதன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளாது இருக்க இயற்கை சுப கிரகங்கள் ஆன குருபகவான், தேய்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள சரியான நித்திரை சுகம் அதாவது படுக்கை சுகம் ஜாதகருக்கு கிடைக்கும்.அதேபோல அடுத்தவருக்கு தானம் செய்ய கூடிய மனம் படைத்தவராக இருப்பார்கள்.


இயற்கை பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் சனி, செவ்வாய், ராகு, கேது, தேய்பிறை சந்திரன் மற்றும் பாவி உடன் சேர்ந்த புதன் விய ஸ்தானம் எனப்படும் பன்னிரெண்டாம் இடத்தோடு தொடர்பு கொள்ளும் பொழுது நித்திரை சுகம் அற்றவராக அடுத்தவருக்கு உதவி செய்யக்கூடிய தாராள குணம் அற்றவராக காணப்படுவர் ."எச்சிக் கையால் கூட காக்காய் விரட்ட மாட்டார்" என்பது இவ்வகை சாரும்.


ஒரு ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடம் முக்தி ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது ஒருவர் வாழ்வின் இறுதி நிலையான ஆன்மீக ஞான நிலையை அடைய பன்னிரெண்டாம் பாவகம் உதவுகிறது அதாவது ஒருவர் ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தில் கேது பகவான் நின்று குரு பகவானின் பார்வையை பெற்ற நிலையில் அல்லது சனி ,கேது இணைந்து பன்னிரெண்டாம் இடத்தில்  சூட்சும வலு பெற்று, குரு பகவானுடைய பார்வையை பெற்ற நிலையில் ஒருவர் ஆன்மீக வாழ்வில் தன்னை  அர்ப்பணித்துக் கொள்வார்கள்.


 ஒரு ஜாதகத்தில் பன்னிரெண்டாம் இடம் காம திரிகோணம் (3,7,12)  என்று அழைக்கப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் பன்னிரெண்டாம் இடத்தில் சுக்கிரன், சனி செவ்வாய், ராகு  போன்றவை தொடர்பு ஏற்படும் பொழுது அதிக காம எண்ணம் உடையவராக பல மலரில் தேன் பருகும் வண்டு ஆக சாதகர் இருப்பார். இயற்கை சுப கிரகங்களுடைய  பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு ஏற்படும் போது பலனில் மாற்றம் ஏற்படுகிறது.


ஒருவர் செய்யக்கூடிய செலவு சுப விரய செலவா ?அல்லது கெட்ட விரய செலவா ? என்பதை  பன்னிரண்டாம் இடத்துடன் தொடர்பு கொண்ட கிரகங்களைப் பொறுத்து அமைகிறது. என்பதை பனிரெண்டாம் இடத்துடன்  தொடர்பு கொள்ளும் கிரகங்களை பொறுத்து அறியப்படுகிறது. பன்னிரண்டாம் இடத்தில் பாவ கிரக தொடர்பு‌ கெட்ட விரய செலவுகளையும் மற்றும் சுப கிரகம் தொடர்பு பெறும் பொழுது சுப விரயச் செலவுகளையும் ஜாதகருக்கு கொடுக்கிறது.


நன்றி 


ஜாதகம் பார்க்க....


செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே 


097151 89647 


(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: