Friday, 14 August 2026

உங்களுக்கு எப்படிப்பட்ட கணவர் அல்லது மனைவி அமைவார்?

 உங்களுக்கு எப்படிப்பட்ட கணவர் அல்லது மனைவி அமைவார்? 




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


  கண்ணின் கடை பார்வை 

காதலியார் காட்டி விட்டால் 

 மண்ணில் குமரர்க்கு 

மாமலையும் ஓர் கடுகாம்.!


"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது"- குறள் 


      ஒருவருடைய ஜாதகத்தில் தனக்கு வரக்கூடிய கணவன் அல்லது மனைவி எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை  அறிந்து கொள்ளும் ஆர்வம் எல்லா இளைஞர் /இளைஞிகளுக்கும் நிச்சயமாக உண்டு.


   இன்றைய இளைஞர்கள்  கூடி கசு குசு என்று பேசிய காலம் போய் இன்று எல்லோருக்கும் தெரியும் வகையிலும் தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை பற்றிய கனவுகளோடு கற்பனை செய்து பார்ப்பது என்பது இன்று 

எல்லா இளைஞர்களிடமும் வெகுவாக  உண்டு.அதிலும் பெண்களிடம் சற்று கூடுதலாகவே உள்ளது.


 திருமண வரன் கேட்கக்கூடிய இன்றைய இளைஞர்கள்/இளைஞிகள் கட்டாயம் நட்சத்திர பொருத்தங்களை மட்டுமே நம்பி திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.


 முதலில் அவர் அவர் ஜாதகத்தில் உள்ள கிரக கட்டங்கள், லக்கனாதிபதி வலிமை மற்றும் நடக்கும் தசா புக்தி போன்றவற்றை ஆராய்ந்து பார்த்து வாழ்க்கை துணை பற்றிய ஆய்வை வெளிப்படுத்த வேண்டும். 


   தனது கணவர் அல்லது மனைவி எப்படிப்பட்டவர் என்பதை உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஏழாம் இடத்தை கொண்டு முடிவு செய்யப்படுகிறது.


   ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடம் என்பது  தாம்பத்திய வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள உதவும் ஸ்தானமாகும்.ஏழாம் இடத்தின் அதிபதி  ஆனவர் களத்திர ஸ்தான அதிபதி ஆகும்.ஏழாம் இடத்திற்கு காரக கிரகமாக 

சுக்கிர பகவான் வருகிறார்.


    ஒருவர் ஜாதகத்தில் திருமணம் போன்ற உயிர் காரணிகளுக்கு இராசி மற்றும் லக்கனம் ஆகிய இரண்டிற்கும் பொதுவாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


   திருமண வாழ்வை பற்றி அலசி ஆராய்ந்து பார்ப்பதற்கு லக்கனம் என்ற ஒன்றாம் இடம், குடும்ப ஸ்தானம் என்ற இரண்டாம் இடம் , களத்திர ஸ்தானம் என்ற ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்ற எட்டாம் இடம் ஆகிய ஸ்தானங்கள் அதன் அதிபதிகள் மற்றும் காரக கிரகமாக  திகழும் சுக்கிரன் பகவான் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


   தனக்கு வரக்கூடிய கணவன் அல்லது மனைவி எப்படிப்பட்டவள் என்பதை கீழ்க்கண்ட வகையில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


  1)  தனக்கு வரக்கூடிய மனைவி அழகான மனைவியா அல்லது கணவனா ?


 ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சந்திரன் நின்றாலும் அல்லது அந்த இடத்தை பார்வை செய்தாலும் ஒருவருக்கு வரக்கூடிய மனைவி அல்லது கணவன் அழகு வதனம் படைத்த மனைவியாக/கணவனாக அமைவார். மாறாக இயற்கை பாவ கிரகமான சனி பகவான்  இருந்தாலும் அல்லது பார்த்தாலும் கருத்த மனைவியாக அல்லது கணவனாக அமைவார்.


2) தனக்கு வரக்கூடிய மனைவி அல்லது கணவன் நல்ல குணம் படைத்தவனா ? 


 ஒருவர் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிறை சந்திரன் ,தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் நின்றாலும் அல்லது அந்த அதிபதிகளுடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில்  தொடர்பு கொண்டாலும் ஏழாம் இடத்தை சுப கிரகங்கள் பார்வை செய்தாலும் தனக்கு வரக்கூடிய மனைவி குணவதியான அன்பான மனைவியாக ) கணவனாக அமைவாள்.


   மாறாக ஏழாம் இடத்தில் ராகு பகவான் இருந்து ஏழாம் இடத்தை சனி அல்லது செவ்வாய் பார்வை செய்தால் அல்லது இருவரும் பார்வை செய்தால் தனக்கு வரக்கூடிய மனைவி கடுமையான பஜாரியாக ரவுடி தன்மை கொண்டவளாக ஆணவம் பிடித்தவளாக இருப்பாள்.


3) திருமணம் கால தாமதமாகி கொண்டே செல்ல காரணம்.


    ஜாதகத்தில் திருமண ஸ்தானமாக ஒன்று, இரண்டு, ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் இயற்கை பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற கிரகங்கள் நின்றாலும் அல்லது இந்த இடத்தை சனி , செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் பார்த்தாலும் இந்த அதிபதியுடன் பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை  நிலையில் தொடர்பு கொண்டாலும் களத்திர காரகன் என அழைக்கக்கூடிய சுக்கிரனும் மற்றும் புத்திர காரகன் என்று சொல்லக்கூடிய குரு பகவானும் பலவீனமாகி அல்லது பாவத்துவமாக இருந்தாலும் அவர்களுக்கு திருமணம் காலதாமதம் ஆகி கொண்டே செல்லும்.


3) திருமணம் ஆகி மகிழ்ச்சியான மண வாழ்க்கை யாருக்கு?


   ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் எந்த கிரகங்களும் இல்லாமல் அல்லது ஏழாம் இடத்தை எந்த கிரகங்களும் பார்க்காமல் இருந்தாலும் அல்லது ஏழாம் இடத்து டன் பாவர் தொடர்பு இன்றி ஏழாம் இடத்தை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டாலும்,ஏழாம் அதிபதி கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரகங்கள்  பார்க்கப்பட்டு தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரனும் வலுப்பெற்று இருந்தால் அவர்களுக்கு மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமையும்.


4) நல்ல திருமண பொருத்தம் என்பது எப்படி தெரிந்து கொள்வது?


  திருமண பந்தத்தில் ஈடுபட இருக்கும் இருவருடைய ஜாதகத்தில் பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த இடம் போன்றவற்றை வாங்கி நன்றாக கணித்து அவர்களுக்கு ஜாதக கட்டத்தில் கிரக அமைப்புகள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை நன்றாக ஆராய்ந்து அவர்கள் இருவரின் ஜாதகங்களிலும் திருமண ஸ்தானங்களையும், புத்திர ஸ்தானங்களையும், அதன் அதிபதிகளையும் மற்றும் காரக கிரகங்களையும் ஆராய்ந்து பார்த்து லக்னாதிபதி வலிமை மற்றும் நடக்கக்கூடிய தசா புத்தி இவற்றுடன் ஒப்பிட்டு பார்த்து தோச பரிகாரங்களையும் கணக்கிட்டு திருமணம் செய்வதே சரியான பொருத்தமாகும். 


  மாறாக வெறும் நட்சத்திரப் பொருத்தங்களை மற்றும் வைத்துக் கொண்டு திருமணம் செய்யும்பொழுது தான் அவை கடைசியில் ஏதாவது ஒரு பிரச்சனையில் போய் முடிந்து விடுவது உண்டு எனவே ஜாதக பொருத்தம் பார்க்கும் பொழுது வெறும் நட்சத்திரப் பொருத்தங்களை மட்டும் பார்க்காமல் கட்ட அடிப்படையில் மற்றும் நடக்கும் தசா புத்தி அடிப்படையிலும் ஆராய்ந்து பார்த்து திருமண பொருத்தம் செய்ய வேண்டும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay no 


097151 89647 


Another cell no 7402570899


(தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெறலாம்.)




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

No comments: