குரு பகவான் தரும் திருமண யோகம்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் ''என்பது ஆன்றோர் மொழி.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதும் சான்றோருடைய வாக்கு.
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்".
வள்ளுவப் பெருந்தகை
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்கிறார்.
ஒரு காலகட்டத்தில் ஒரு ஆடவர்க்கு பெண் கொடுப்பதற்கு வயல், வைக்கப்போர் அளவு ,அச்சுகள் எண்ணிக்கை ( அதாவது எத்தனை ஆடு மற்றும் மாடுகள் கட்டி உள்ளது) இதுபோன்ற பல விவரங்களை பார்த்து ஒரு பெண்ணை அந்த வீட்டுக்கு கொடுப்பதற்கு முடிவு செய்தார்கள் ஆனால் இன்று அது போன்று இருந்தால் கட்டாயம் பெண்ணை அந்த வீட்டுக்கு கொடுக்க மாட்டார்கள். மாப்பிள்ளை உடன் பிறந்தவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கூட இந்த காலகட்டத்தில் பெண் கிடைப்பது பெரிய கஷ்டமாகிவிடும்.
இன்றைய காலகட்டத்தில் மாப்பிள்ளை நிறைய படித்து ஐடி கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் வீட்டை விட்டு நகர்புறத்தில் தன் மகளை அழைத்துக் கொண்டு தனி குடித்தனம் நடத்த வேண்டும் இதுபோன்ற எண்ணத்தோடு வரக்கூடிய பெற்றோர்களே இன்று அதிகம் ஆகிவிட்டது.
இது போன்ற சூழலில் திருமணம் நடக்கும் பொழுது தான் அவர்களுக்கு இடையே ஏற்படக்கூடிய மன அழுத்தங்களை அல்லது புரிந்து கொள்வதில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சொல்லி ஆறுதல் பெறுவதற்கும் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கும் அருகில் வயது முதிர்ந்த பாட்டிகள் ,பாட்டன்கள் , சித்தப்பா, பெரியப்பா மற்றும் அத்தை, மாமன் வகைகள் போன்ற உறவுகள் அருகில் இல்லாததால் சிறிய விஷயங்கள் கூட பெரிய பிரச்சினையாகி அவர்களுக்குள் ஒரு பெரிய பிளவை உண்டாக்கி விவாகரத்து வரை சென்று விடுகிறார்கள்.
இது போன்ற காலகட்டத்திலும் ஒரு நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டுமென்றால் உங்களுடைய ஜாதகத்தில் குரு பகவானுடைய பங்கு அதிகமாக தேவைப்படுகிறது.
நல்ல மணவாழ்க்கை அமைவதற்கு குரு பகவானுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. குரு பகவான் எங்கு இருந்தாலும் அல்லது எந்த இடத்தை பார்த்தாலும் அந்த இடத்தையும் அவை சார்ந்த பலனையும் உயர்த்திக் கொடுப்பது குரு பகவானுடைய சாலச் சிறந்த படியாக பணி ஆகும்.
ஜாதகத்தில் திருமண ஸ்தானம் என்பது லக்னம் என்ற ஒன்றாம் இடம், குடும்பஸ்தான என்ற இரண்டாம் இடம், களத்திர ஸ்தானம் என்ற ஏழாமிடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்று அழைக்கப்படும் எட்டாமிடம் அதன் அதிபதிகள் ஆகியவற்றை பொறுத்து திருமண வாழ்க்கை அமைகிறது. ஏழாமிடத்திற்கு காரக கிரகமாக அதாவது தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய கிரகமாக சுக்கிர பகவான் திகழ்கிறார்.
மேலே குறிப்பிட்ட இந்த இடங்களையும் அல்லது அதன் அதிபதிகளையும் குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது நிச்சயமாக அவருடைய மண வாழ்க்கை மிகச்சிறந்த மண வாழ்க்கையாக அமைகிறது. அவருடைய இல்லறத்துணை சிறப்பாக அமைகிறது.
அதிலும் குறிப்பாக களத்திர ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஏழாம் இடத்தையும் அதன் அதிபதியையும் குரு பகவான் பார்வை செய்த நிலையில் அவருடைய இல்லற வாழ்க்கை நல்ல இல்லறமாக அமைகிறது.
குரு பகவான் எவர் ஒருவர் ஜாதகத்தில் மேலே குறிப்பிட்ட திருமண ஸ்தானமான ஒன்று, இரண்டு, ஏழு மற்றும் எட்டு ஆகிய இட ங்களையும் அல்லது அதன் அதிபதிகளோடும் எந்த அளவுக்கு பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு உள்ளதோ அந்த அளவிற்கு அவருடைய வாழ்க்கை தரம் மிகவும் சிறப்பாக அமைகிறது.
குரு பகவான் எந்த விதத்திலும் பங்கம் அடையாமல் இருக்க வேண்டும் .அதாவது குரு பகவான் உடன் சனி அல்லது ராகு பகவான் இணைந்த நிலையில் அல்லது குரு பகவானை சனி பகவான் பார்வை செய்த நிலையில் அந்த குரு பகவான் பலவீனமான குருவாக கருதப்படுகிறது.இந்த நிலையில் குரு பகவானின் பார்வை முழுமையாக நல்ல பார்வையாக அமையாது.இவ்வித நிலையில் குரு பகவான் பார்வை கோடி நன்மையை தருவது கிடையாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இது ஒன்று போன்று பங்கமடைந்த குரு பகவானை பெற்ற ஜாதகர்கள் குரு பகவானுக்கு சிறப்பு பரிகாரங்கள் செய்ய வேண்டும். அதாவது திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமானை வழிபடுதல் மூலமும், திட்டை வசிஷ்டேஸ்வரர் வழிபடுவதன் மூலமாகவும், கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலம் சென்று வியாழக்கிழமை வழிபாடு செய்வது மூலமாகவும் பலமடைய செய்யலாம்.
குருபகவானுக்கு வியாழன் தோறும் கொண்டைக்கடலை அவித்து வைத்து பொன்னிற வஸ்திரத்தை சாத்தி வழிபாடு செய்வது உகந்தது. இன்னும் குருவிணுடைய வாகனமான யானைக்கு ஏதாவது பழம் ,கரும்பு வாங்கிக் கொடுத்து உணண செய்யலாம்.குருவிற்கு உரிய காயத்ரி மந்திரம் தினந்தோறும் காலை உச்சரித்து வருவது நன்மை பயக்கும்.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay no
097151 89647
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


No comments:
Post a Comment