Friday, 2 February 2018

*யாருடைய சாதகத்தில் ஆணையிடும் அதிகாரம் உண்டு ?

யாருடைய சாதகத்தில் ஆணையிடும் அதிகாரம் உண்டு? 


                             

கிரகங்கள் படுத்தும் பாடு-( 190 )

செவ்வாய்பட்டி பத்ரகாளிஅம்மன் துணை !

      மனிதராக பிறந்த எல்லோருக்கும் ஆணையிடும் அதிகாரம் இயற்கையாகவே வந்துவிடுவதில்லை.ஒரு சிலர் நீண்ட காலம் ஒரு கம்பெனியில் இருந்துகொண்டு இருந்தாலும் அவர்களைவிட வந்த ஒரு சில வாரங்களிலே அந்த குழுவே தனது பேச்சை கேட்கும் அளவிற்கு ஆளுமை தன்மை மிக்கவர்களாக  திகழ்வர்கள்.இதற்க்கு அவர்களது கிரகநிலைகளே காரணமாக அமைந்து விடுவதுண்டு.

     தனது பேச்சை மற்றவர்கள் கேட்க வைக்க அதிகாரம் ஏதும் செய்யாமல் முதலில் தானே களத்தில் இறங்கி மற்றவர்களது உதவியினை எதிர்பார்க்காமல், மற்றவர்களை குறை ஏதும் சொல்லாமல் அதிக நேரத்தினை செலவழித்து மற்றவர்களது பொறாமை கலந்த மறைமுக எதிர்ப்பினை பொறுமையாக சமாளித்து ஒரு செயலை வெற்றிகரமாக செய்வதன் மூலமாக மற்றவர்கள் தனது பேச்சினை கேட்க கூடி அளவிற்கும்,மதிக்ககூடிய அளவிற்கும் தன்னை தயார்படுத்திக்கொள்வார்கள்.

         இதுபோல மற்றவர்களிடம் ஆணையிடும் அளவிற்கு தன்னை தயார்படுத்திக்கொள்வதற்க்கு கிரகங்களில் ஆத்மாக்காரனான சூரியபகவானும் ,மனதிற்காரனான சந்திரபகவானும் சாதகத்தில் பலம் பெற்ற அமைப்பினை பெற்றிருக்கவேண்டும்.

   செய்கின்ற வேலையினை  நேர்த்தியாக செய்து அதன்மூலமாக தனது பேச்சிற்கும்,செய்கின்ற செயல்பாடுகளுக்கும் ஓர் அங்கீகாரம் கிடைக்கும்படி செய்வதற்க்கு வித்தைகாரகன் புதன் பகவானின் பங்கு அலாதியானது.

                         

   ராசிகளில் மிதுனம்,கடக மற்றும் சிம்ம ராசி காரர்களுக்கு பொதுவாக ஆளுமைத்தன்மையும்,ஆணையிடும் அதிகாரமும் இயற்கையாகவே நிறைந்து காணப்படும்.

  யாருடைய சாதகக்தில் ஒன்பது,பத்தாம் அதிபதி உச்சம்,ஆட்தி போன்ற பலம் பெற்றிருந்தாலோ அல்லது ஒருவருக்கு ஒருவர் பரிவர்த்தனை பெற்று இருந்தாலோ அல்லது பார்த்துக்கொண்டாலோ அல்லது நட்சத்திர பரிவர்த்தனை பெற்று இருந்தாலும் ஆணையிடும் அதிகாரம் பெற்றிருப்பார்கள்.இது தர்ம-கர்மாதிபதி யோகம் ஆகும்.

பாடல் ஆதாரம்

  "சொல்லுமையா பாக்கியத்தோன் பத்தோன் கூடி சுகமாக வீற்றிருக்கும் பலனைக்கேளு !
எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு !
எவர்களுமே பணிவார்கள் இறைவன்போல !
தொல்லையில்லான் பலபேரை காக்கவல்லான் !
துணையாளர் பலபேரும் உண்டு பாரு !
வல்லவியா ஈஸ்வரியின் கடாட்ஷத்தாலே வளமையாக வாழ்ந்திருப்பான் எந்நாளுமே "

          கர்மக்காரகன் எனப்படும் சனி பகவான் பத்தாம் இடத்தில் பலம்பெற்று நிற்பின் மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஆகலாம்.

                            

           சூரியனும்,புதனும் இணைந்து ஒன்று,நான்கு மற்றும் எட்டாம் இடத்தில் இடம் பெற்று இருப்பின் அதிகாரம் செய்யும் ஆற்றல் பெற்று திகழ்வார்.

பாடல் ஆதாரம்

. "விளையும் புதனும்,சூரியனும் விரும்பி ஒன்றுநான்கு எட்டில் வளையக்கூடின் மன்னவனே "

          மிதுன ராசிக்கு இரண்டில் குரு உச்சம் பெற்று இருப்பவர்கள் அதிகாரம் செய்யும் பதவியில் இருப்பார்கள் அல்லது அதிகாரம் செய்யும் தோரணையில் இருப்பார்கள்.

          சிம்ம ராசிக்கு லக்கனாதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில்  உச்சம் பெற்று  சுபர் பார்வை பெற்றவர்கள் அதிகார பதவி அல்லது அரசு உயர் பதவியில் திகழ்வார்கள்.

         ஒரு சாதகத்தில் ஓன்றுக்கு மேற்பட்ட உச்சம் பெற்ற கிரக அமைப்பினை பெற்றவர்கள் அதிகாரம் செய்யும் தோரனை உடையவர்களாக திகழ்வார்கள்.

  ஒரு சாதகத்தில் சூரியன் ,புதன், குரு உச்சம் பெறுவதும்,சுக்கிரன், சந்திரன்ஆட்சி பெறுவதும் பதவியும்,மதிப்பு மிக்கவர்களாக திகழ்வார்.

           ஒரு சாதகத்தில் குரு உச்சம் பெறுவதும் ,சுக்கிரன், புதன் ஆட்சி பெறுவதும் சக்கரவர்த்தி போன்ற ஆணையிடும் அதிகாரம் உள்ள சாதகம் ஆகும்.

         ஒருவரது சாதகத்தில் வாக்காதிபதி பலம் பெற்று தர்ம-கர்மாதிபதி யோகத்துடன் இருப்பின் ஆணையிடும் அதிகாரம் உண்டு.

        எல்லாவற்றிற்க்கும் மேலாக ஒருவருக்கு சாதகரை வழிநடத்தி செல்லும் கேப்டனான லக்கனாதிபதி பலம்பெற்று இருந்தால்தான் சபை நடுவே பதவி,மதிப்பு மற்றும் ஆணையிடும் அதிகாரம் நிறைந்தவனாக திகழ முடியும்.

நன்றி,நன்றி,நன்றி

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸெஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

   வாட்ஸ்அப்
  97 151 89 647

     செல்
   740 257 08 99
       97 151 89 647

                             

அன்புடன்
  சோதிடர் ரவிச்சந்திரன்
        M.Sc ,MA, BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்.
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

My blogspot
AstroRavichandransevvai.blogspot.com



No comments: