அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தாராபலன்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை!
தாரை அல்லது தாரா என்பது நட்சத்திரத்தை குறிப்பதாகும்.
மனநிலை காரகன் என அழைக்கப்படும் சந்திர பகவான் இடம்பெற்றுள்ள நட்சத்திரத்தையே
" ஜென்ம நட்சத்திரமாக" கருதப்படுகிறது. ஜென்ம நட்சத்திரம் இடம்பெறும் ராசியே சாதகருக்கு "ஜென்ம ராசியாக" எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சந்திர பகவான் ஒரு ராசியில் இரண்டேகால் நாட்கள் வாசம் செய்கிறார். அதாவது 54 மணி நேரம் ஒரு ராசியில் சந்திர பகவான் சஞ்சாரம் செய்கிறார்.
ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரம் ஆகும். அதாவது 9 பாதங்கள் ஆகும். எனவே சந்திர பகவான் ஒருபாதம் கடக்க 6 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.
ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்திலிருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ணி வரும் எண் 1, 2, 3, 4 ,5 ,6 ,7, 8, 9 வரை உள்ள எண்களுக்கு தாரைகளின் பெயர்களை வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது.
நட்சத்திரங்கள் மொத்தம் இருபத்து ஏழு என்பதால்
ஒன்பதுக்கு மேல் வந்தால் ஒரு ராசிக்குரிய மொத்த பாதமான ஒன்பதால் வகுக்கப்பட வேண்டும் வகுத்து வரும் மீதியைக் கொண்டு தாரா பலன் காணப்பட வேண்டும்.
உதாரணமாக ஒருவருக்கு மகம் நட்சத்திரம் சிம்மராசி என வைத்துக்கொண்டால் தற்பொழுது அவருக்கு கோச்சார அடிப்படையில் சந்திரன் பகவான் மகர ராசியில் திருவோணம் நட்சத்திரத்தில் வாசம் செய்கிறார் எனில் திருவோணம் நட்சத்திரமானது மகத்திற்கு 13 -வது நட்சத்திரம் ஆகும்.
13
= ----- = 1.4
9
(இங்கு ஈவு-1 , மீதி -4. ஆதலால் மீதி 4 வருவதால் சேமதத்தாரை ஆகும்.
கோச்சார அடிப்படையில் சந்திரன் பகவான் மகர ராசியில் வாசம் செய்யும் கால அளவு.
உத்ராடம் -2,3,4 பாதங்கள்
3×6=18 மணி நேரம்
திருவோணம் 1,2,3,,4 பாதங்கள்
4×6= 24 மணி நேரம்
அவிட்டம் 1,2 பாதங்கள்
2×6=12 மணி நேரம் ஆகும்.ஆக மொத்தம் ஒரு ராசிக்கு 54 மணி நேரம் வாசம் செய்கிறார்.
ஆதலால் சந்திரன் பகவான் மகர ராசியில் திருவோணம் நட்சத்திரத்தில் வாசம் செய்யும் இருபத்து நான்கு மணி நேரமும் புதிய காரியங்களில் ஈடுபட்டு ஷேமத்தை (வெற்றியை) அடையலாம்.
மாறாக அதே ஜென்ம நட்சத்திரத்திற்கு கோச்சாரப்படி உத்திராடம் நட்சத்திரம் எனில்
12/9=1.3
இங்கு மீதி 3 என்பதால் விபத்து தாரை ஆகும்.
ஆதலால் சந்திர பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் வாசம் செய்யும் 18 மணி நேரமும் அசுப பலன்களே நடக்கும்.எனவே புதிய பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
தாரைகளின் பெயர்;-
1) ஜென்ம தாரை:-
மனக்குழப்பம் தரும், தொழில் தொடங்க உகந்த காலம் இல்லை.
ஒருவரது ஜென்ம நட்சத்திரம், ஜென்ம நட்சத்திரத்திலிருந்து வரும் 10 வது நட்சத்திரம் மற்றும் 19 வது நட்சத்திரம் ஆகும்.
அசுபதிக்கு ஜென்ம தாரை
அசுபதி, மகம், மூலம் ஆகும் .
இணை நட்சத்திரங்கள்
அசுபதி- ஜென்ம நட்சத்திரம்
மகம்- அனு ஜென்மம் நட்சத்திரம்
மூலம் -திரி ஜென்மம் நட்சத்திரம் ஆகும்.
2) சம்பத்து தாரை:-
செல்வம் பெருகும், தனவரவு உண்டாகும். புதிய முயற்சிகள் செய்ய உகந்த காலமாகும்.
ஜென்ம நட்சத்திரத்திற்கு இரண்டாவது நட்சத்திரம் சம்பத்து தாரை ஆகும். அதாவது 2, 11 மற்றும் 20 ஆவது நட்சத்திரமாகும்.
உதாரணமாக மேஷ ராசிக்கு எடுத்துக்கொண்டான் அசுபதி, பரணி, கார்த்திகை முதல் பாதமாகும்.
அசுபதிக்கு சம்பத்து தாரை பரணி ஆகும்.
இணை நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம்.
பரணிக்கு சம்பத்து தாரை கார்த்திகை, உத்திரம், உத்திராடம் .
கார்த்திகை சம்பத்து தாரை
ரோகிணி ,அஸ்தம், திருவோணம்
ஆதலால் அசுபதி அல்லது அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு நியமிக்கப்படும் பரணி பூரம் மற்றும் பூராடம் நட்சத்திரத்தில் சுப காரியங்களையும்,புதிய முயற்சிகளையும் செய்யலாம்.
3) விபத்து தாரை:-
இந்த நட்சத்திர தாரை அன்று புதிய பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
ஜென்ம நட்சத்திரத்துக்கு மூன்றாவது நட்சத்திரம் ஆகும்.அதாவது 3,11,21 வது நட்சத்திரம் ஆகும்.
உதாரணமாக அஸ்வினிக்கு மூன்றாவது நட்சத்திரம் கார்த்திகை ஆகும்.
கார்த்திகை ,உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் அன்று அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் புதிய பயணங்களை தவிர்ப்பது நல்லது ஆகும்.
4) சேமத் தாரை
ஒருவர் மேற்கண்ட முயற்சியில் நன்மை அடையவும் மற்றும் புதிய காரியங்களில் ஈடுபடவும் சேம தாரையை பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெறலாம்.
ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து நான்காவது நட்சத்திரம் ஆகும். அதாவது 4 ,13 ,22 வது நட்சத்திரம் ஆகும்.
உதாரணமாக மகம் நட்சத்திரம் வெளியில் நான்காம் நட்சத்திரம் அஸ்தம் ஆகும்.
அஸ்தம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் மகம் நட்சத்திரக்காரர்கள் புதிய முயற்சிகளிலும் மற்றும் சுப காரியங்களிலும் ஈடுபடலாம்.
5) பிரத்யக்கு தாரை:-
வீண் அலைச்சல், மன குழப்பம் மற்றும் கவனச்சிதறல் போன்றவை இந்த நட்சத்திர தாரையை பயன்படுத்தும்போது சாதகருக்கு தரும் என்பதால் அந்த நட்சத்திரத்தின் போது ஒருவர் மேற்கொள்ள வேண்டிய புதிய செயல்களை தள்ளிப்போட வேண்டும்.
அவரது ஒருவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஐந்தாவது நட்சத்திரம் ஆகும் .அதாவது 5 ,14, 23 வது நட்சத்திரம் ஆகும்.
உதாரணமாக பரணி நட்சத்திரத்திற்கு பிரத்யக்கு தாரை திருவாதிரை ஆகும்.
திருவாதிரை சுவாதி சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பரணி நட்சத்திரத்திற்கு செயல்களை தள்ளிப் போட வேண்டிய நட்சத்திரமாகும்.
6) சாதக தாரை;-
ஒரு செயலை செய்ய சரியான சந்தர்ப்பத்தை காத்திருப்பவர்கள் சாதக தாரையை பயன்படுத்தி புதிய முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெறலாம்.
உதாரணமாக புதிய சொத்து வாங்க,வீடு வாங்க, தேர்தலில் நின்று வெற்றி பெற... இது போன்ற சந்தர்ப்பங்களை பார்த்து காத்திருப்பவர்கள் புதிய முயற்சிகளுக்கு உகந்த தாரை ஆகும்.
ஜென்ம நட்சத்திரத்திற்கு 6-ஆவது நட்சத்திரம் ஆகும் .அதாவது 6 ,15 ,24 வது நட்சத்திரம் ஆகும்.
உதாரணமாக மகம் நட்சத்திரம் எனில் ஆறாவது நட்சத்திரம் சுவாதி நட்சத்திரம் ஆகும்.
மகம் நட்சத்திரத்திற்கு சாதக தாரை: திருவாதிரை, சுவாதி, சதயம் .
எனவே மகம் நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நட்சத்திரத்தில் ஒரு செயலைச் செய்ய மற்றும் புதிய முயற்சிகள் செய்ய உகந்த காலமாகும்.
7) வதை தாரை:-
வதை தாரையின் போது கடுமையான கெடுபலன்கள் மற்றும் தீய பலன்கள் நடைபெறும்.
ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏழாவது நட்சத்திரமாகும். அதாவது 7 ,16, 25 ஆவது நட்சத்திரமாகும்.
உதாரணமாக சதயம் ஜென்ம நட்சத்திரம் எனில் ஏழாவது நட்சத்திரம் கார்த்திகை ஆகும்.
சதய நட்சத்திரத்திற்கு வதை தாரை
கார்த்திகை, உத்திரம் உத்திராடம் ஆகும். சதயம் நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நட்சத்திரங்களில் கடுமையான கெடுபலன்கள் நடக்கும் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
8) மைத்திர தாரை அல்லது மித்திரர் தாரை:-
மைத்திர அல்லது மித்திரர் என்பது நட்பு நிலை ஆகும்.நன்மை செய்யக்கூடிய நட்சத்திர தாரை ஆகும் ஆதலால் புதிய முயற்சிகள் செய்வதற்கு உகந்த தாரை ஆகும்.
ஜென்ம நட்சத்திரத்திற்கு 8-ஆவது நட்சத்திரம் மைத்ர தாரை ஆகும் .அதாவது 8, 17 ,26 வது நட்சத்திரம் ஆகும்.
உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்திற்கு எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும்.
ஆதலால் அசுபதி அல்லது அஸ்வினி நட்சத்திரத்திற்கு மைத்ரி தாரை ; பூசம் ஆகும்.
பூசம் அனுஷம் உத்திரட்டாதி அஸ்வினி நட்சத்திரத்திற்கு மைத்ரி தாரை ஆகும்.
9) பரம மைத்ர தாரை அல்லது பர மித்திரர் தாரை:-
பரம மித்திரர் என்பது அதிநட்பு நிலை ஆகும். அனைத்து செயல்களும் செய்வதற்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.
ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 9-வது நட்சத்திரம் ஆகும். அதாவது 9 ,18, 27 வது நட்சத்திரம் ஆகும்.
உதாரணமாக கேட்டை நட்சத்திரம் எனில் மரம் மைத்ர தாரை உத்திரட்டாதி ஆகும்
இணை நட்சத்திரங்கள் உத்திரட்டாதி, பூசம், அனுஷம் ஆகும்.
கேட்டை நட்சத்திரத்திற்கு மேற்கண்ட நட்சத்திரங்கள் எல்லா செயல்களும் செய்வதற்கும் உகந்த நட்சத்திரம் ஆகும் .
தாராபலன் தேர்ந்தெடுப்பது ஏன்?
"நாள் செய்வதை போல நல்லோர்கள் செய்ய மாட்டார்கள்" என்பது சொலவடை ஆகும். எனவே எந்த ஒரு காரியத்தையும் நாம் தொடங்கும் போது அதில் வெற்றி பெற வேண்டுமாயின் நல்ல நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து செய்யும் போது உகந்த சூழல் உருவாகி அதில் முழு வெற்றியை ஈட்ட முடியும்.
புதிதாக சொத்து வாங்குவதாக இருந்தாலும் ,
அதேபோல புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும், பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதாக இருந்தாலும் ,
வெளிநாடு பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும்,
இவை போல புதிய வீடு கட்டுவதாக இருந்தாலும் தக்க நட்சத்திரத்தை பயன்படுத்தி புதிய முயற்சி செய்ய அதில் ஈடுபட்டு வெற்றி பெறலாம் .
ஒருவர் புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறவும் மற்றும் சுப காரியங்கள் செய்யவும் 2 ,4 ,6 ,8, 9 ஆம் தரைகளை தேர்வு செய்து செயலில் ஈடுபடுங்கள். அதே நேரத்தில் 1,3,5,7 ஆம் தாரைகளில் புதிய முயற்சிகள் மற்றும் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்து விடுதல் உத்தமம் ஆகும். நன்றி வணக்கம்.
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
masterastroravi@gmail.com
My blog
www.AstroRavichandran.blogspot.com
www.AstroRavichandransevvai.blogspot.com
...... ......... ...
No comments:
Post a Comment