Sunday, 26 July 2020

தசை காட்டும் பாதை

தசை (Dasha) காட்டும் பாதை


                           


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

    " ஒரு ஜாதகத்தில் திரிகோணதிபதிகள் (1,5,9) திசைகள் மிகுந்த யோக பலன்களை தரும்  என்றும் ,மறைவிட ஸ்தானாதிபதிகள் அல்லது மறைவிட ஸ்தானங்களில் இடம்பெற்ற கிரகங்களின் திசைகள் கெடுபலன்களை தரும்." என்பது தான் விதி ஆகும்.

   இதில் "ஏதாவது மாற்றம் இருக்க வாய்ப்பு இருக்கிறதா ?"
என பதிவை படிக்கிற உங்களைத்தான் கேட்கிறேன்.

நீங்க என்ன சொல்லப்போறீங்க ? "மாற்றம் இல்லைனுதான் சொல்வீங்க".

     ஆமாங்க அப்படிதான் ஆரம்ப நிலையிலே நானும் நினைத்து இருந்தேன்.ஆனால் "அப்படி இல்லை" என்பது மெல்ல, மெல்ல
 பல ஜாதகங்களை
பார்க்க, பார்க்க பலன்களை
சொல்லச் சொல்ல எனது முடிவு மாறியது.

    "அப்போ மறைவிட ஸ்தான அதிபதிகள் அல்லது மறைவிட ஸ்தானங்களில் இடம்பெற்ற கிரகங்கள் மிகுந்த நல்ல பலனைத் தரும் ?!" என்று நீங்கள் சொல்றீங்களான்னு சந்தேக கண்ணுடன் கேள்வி கேட்பது எனக்கு புரிகிறது.

     "எந்த ஒன்றில் விதி என்று ஒன்று இருக்கிறதோ? அங்கே விதிவிலக்கு என்று ஒன்று இருக்கத்தான் செய்யும்". என்ன நான் குழப்புகிறேன்னு நீங்கள் நினைத்திருக்கலாம்". உதாரணத்துடன் விளக்குறேன் சற்று பொறுமையாக படியுங்கள்.

     ஒரு இருசக்கர வாகனத்தை( two wheeler) ஓட்ட கற்றுக் கொள்ளும்போது கற்றுக் கொள்ளும் வரைதான் விதிமுறைகள் தேவைப்படும். பிறகு நன்றாக கற்றுக் கொண்டு, நல்ல அனுபவம் கிடைத்த பிறகு விதிமுறைகளை விட்டுவிட்டு அவர்களுக்கே உரியமுறையில்  சைக்கிளை ஓட்ட ஆரம்பிப்போம்.

  அதேபோல சாதக கட்டத்தில் மிகுந்த அனுபவம் மற்றும் ஞானம் கிடைத்த பிறகு லக்கனத்திலிருந்து எண்ணி வரும் 1,2,3 ... என்ற ஸ்தான அடிப்படையினை விட்டு விட்டு பலன்களை எடுக்க ஆரம்பித்து விடுவோம்.

  அதாவது "சந்திர அதியோகம் "என்ற யோக பலன்களை நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். வளர்பிறை
சந்திரனுக்கு ஆறு ,ஏழு எட்டில் குரு, சுக்கிரன் மற்றும் புதன் போன்ற இயற்கை சுப கிரகங்கள் இருப்பின் அதனை "சந்திர அதியோகம்" என்கிறோம்.

   இந்த இடங்களில் ஆறு மற்றும் எட்டாம் இடங்கள்  மறைவிட ஸ்தனமாக இருந்தாலும் இந்த இடங்களில் இடம் பெற்றுள்ள கிரகங்கள் அதன் தசைகளில் மிகுந்த யோக பலன்களை தருகிறது.

  மறைவிட ஸ்தான அதிபதிகள் வளர்பிறை  சந்திர கேந்திரத்தில் இருந்தாலும் மற்றும் இயற்கை சுப கிரகமான குரு ,சுக்ரன்  தொடர்பு பெற்றாலும் மிகுந்த யோக பலனைத்  அதன் தசைகளில் தருவதை நாம் பார்க்கிறோம்.

  மறைவிட ஸ்தானாதிபதியாக இருந்தாலும் அந்த கிரகங்கள் இடம் பெற்றுள்ள வீட்டின் அதிபதி உச்சம் ..போன்ற நிலைகளில் பலம் பெற்றிருந்தாலும் அதன் தசைகளில் மிகுந்த யோக பலனை தருகிறது.

  மறைவிட ஸ்தான அதிபதிகள் கேந்திர, கோணாதிபதிகளின் நட்சத்திர சாரம் பெற்று அந்த கேந்திர, கோண அதிபதிகள் உச்ச,ம் ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருந்தாலும் அதன் தசைகளை மிகுந்த யோக பலனைத் தருகிறது.

  இதேபோல" ஜாதகருக்கு யோக பலன்களை  தரும்  என புகழப்படும் கோண அதிபதிகள் (1,5,9)சில நேரங்களில் கெடு பலன்களையும் தரும்" என நான் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?.இதோ அதற்கு உரிய விளக்கத்தை இப்பொழுதே தருகிறேன் .

   கோண அதிபதிகள், மறைவிட ஸ்தானமேறி பாவ கிரகங்களின் பார்வை மற்றும் சேர்க்கை பெற்றிருந்தாலும் யோக பலன்களை தருவதில்லை.

 கோண அதிபதிகள்  நீசம் பெற்று வக்கிரம் பெற்று வக்கிரம் அடையாமலோ அல்லது நீச பங்க ராஜயோகம் பெறாமல் இருப்பின், அஸ்தமனம் மற்றும் பகை பெற்று நின்று இருப்பினும் அதன் திசை காலங்களில் மிகுந்த யோகத்தை தருவதில்லை.

  கோண அதிபதிகள் மறைவிட ஸ்தானாதிபதியின் சாரம்(6,8,12) அல்லது பாவ கிரகங்களான சனி, செவ்வாய் மற்றும் ராகு பகவான் நட்சத்திரசாரம் பெற்றாலும் அதன் திசை காலங்களில் மிகுந்த யோக பலன்களை தருவதில்லை.

மீண்டும் ஒரு புதிய குழப்பத்தை தெளிவாக்கும் முயற்சியுடன் அடுத்த சந்திக்கிறேன்.


(தங்களது ஜாதக பலன் , திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி,
பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப்
     9715189647

      செல்
   9715189647
    7402570899

My google pay cell no : 7402570899
Acc name ; omsakthi online astro consulting centre

                                 
                                               

     அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்).
  ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Email
 masterastroravi@gmail.com

My blog

www.AstroRavichandran.blogspot.com

www.AstroRavichandran.blogspot.com

No comments: