Sunday, 26 July 2020

புஷ்கர் நவாம்சம் தரும் யோக பலன்களை

புஷ்கர நவாம்சம் தரும் யோகப் பலன்கள்.


                               

செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை!

    ஒரு ஜாதகத்தில் சோதிடர்களின் கணிப்பு பலன்களையே மாற்றிவிடும் தன்மை புஷ்கர நவாம்சத்தில்  அமைந்துள்ள கிரகங்களுக்கு உண்டு.

  "புஷ்கர" என்றால் "தாமரை" என்று பொருள்படும். இதனை "புஷ்கராம்சம்" என்றும் அழைக்கிறோம்.

   ஒரு சில கிரகங்கள் ஜாதகத்தில் நீசம், பகை மற்றும் அஸ்தமனம் பெற்ற நிலையில் இருக்கின்ற பொழுது ஜோதிடர்களாகிய நாம்  கெடுபலன்களை தரும் என கூறி இருப்போம்.ஆனால் அதன் திசையில் யோக பலன்களை சாதகர் அனுபவித்து இருப்பார். அவர் மீண்டும் உங்களை சந்திக்கும் பொழுது நீங்கள் கெடுபலன்கள் நடக்கும் என்ற நிலையில் எனக்கு அக்கிரக திசையில்தான் அதிக யோக பலனை தந்துள்ளது என கூறும் போது,  எப்படி தந்தது ?என நீங்கள் ஆழ்ந்து நோக்கினால் அந்த கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் அமைந்து இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

  அதாவது புஷ்கர நவாம்சத்தில் நின்ற கிரகங்கள் ஸ்தான பலத்தை இழந்து நின்றாலும் அதன் தசையில் மிகுந்த யோக பலனை அதிகம் தருகிறது.

  புஷ்கர நவாம்சத்தில் அமைந்துள்ள கிரகங்கள் நவாம்சத்தில் சுபர்களின் வீடுகளில் மட்டுமே அமைகிறது.

    சுப வீடுகளான தனுசு, மீனம், ரிஷபம், துலாம் மற்றும் மிதுனம் ஆகிய வீடுகளில் மட்டுமே அமைகிறது.

                        


   சாதக கட்டத்தில் உள்ள  பனிரெண்டு ராசிகளில் ஒன்பது கிரகங்களும்  மற்றும்
 இருபத்து ஏழு நட்சத்திரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரம் (9- பாதங்கள்) வீதம்
பன்னிரெண்டு ராசிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.

 கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திர காலில் நின்று மேலே குறிப்பிட்டுள்ளபடி உரிய ராசிக்கட்டத்தில் அமைகிறது.

  மேஷ ராசி
அசுபதி, பரணி முழுவதும் மற்றும் கார்த்திகை முதல் பாதம் மட்டும்.

  ரிஷப ராசி

கார்த்திகை 2,3,4 மாதம், ரோகிணி மற்றும் மிருகசீரிஷம் முதல் இரண்டு பாதம்,

   மிதுன ராசி

மிருகசீரிடம் 3,4-ஆம் பாதம் ,திருவாதிரை மற்றும் புனர்பூசம் முதல் மூன்று பாதம்.

கடக ராசி

புனர்பூசம் 4ம் பாதம் , பூசம் மற்றும் ஆயில்யம் முழுவதும்.

சிம்ம ராசி

 மகம் மற்றும் பூரம் முழுவதும், உத்திரம் முதல் பாதம் மட்டும்.

 கன்னி ராசி

 உத்திரம் 2, 3, 4 ,அஸ்தம் முழுவதும் மற்றும் சித்திரை முதல் இரண்டு பாதம் .

  துலாம் ராசி

சித்திரை 3, 4 ம் பாதம், சுவாதி முழுவதும் மற்றும் விசாகம் முதல் மூன்று பாதம்.

   விருச்சிகம் ராசி

 விசாகம் 4-ம் பாதம், அனுஷம் மற்றும் கேட்டை முழுவதும்,

  தனுசு ராசி

 மூலம், பூராடம் முழுவதும் மற்றும் உத்ராடம் முதல் பாதம்.

 மகரம் ராசி

உத்ராடம் 2,3,4 மாதம், திருவோணம் முழுவதும் மற்றும் அவிட்ட முதல் இரண்டு பாதம்.

  கும்ப ராசி

அவிட்டம் 3 ,4 ம் பாதம், சதயம் முழுவதும் பூரட்டாதி முதல் மூன்று பாதம்.

மீனம் ராசி

பூரட்டாதி- 4 ம்- பாதம், உத்திரட்டாதி, ரேவதி முழுவதும்.

ஒவ்வொரு கிரகங்களுக்கு மூன்று நட்சத்திரங்கள் வீதம், 
   27 நட்சத்திரங்களையும் கீழ்க்கண்டவாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

                       

சூரியன்-

 கார்த்திகை, உத்திரம் உத்திராடம்

சந்திரன்

 ரோகிணி, அஸ்தம் திருவோணம்

செவ்வாய்

 மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

ராகு

 திருவாதிரை, சுவாதி சதயம்

  குரு
புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
 சனி
 பூசம் ,அனுஷம் உத்திரட்டாதி

புதன்

ஆயில்யம், கேட்டை, ரேவதி

கேது
 அசுவதி ,மகம், மூலம்

 சுக்கிரன்

பரணி, பூரம், பூராடம்.

இணை 🌟 நட்சத்திரங்கள்

(ஜென்ம நட்சத்திரம்-அசுபதி எனில்

அனுஜென்ம நட்சத்திரம்-மகம்

திரி ஜென்ம நட்சத்திரம்-மூலம்.)

மேற்கண்ட நவகோள்களின் கேது பகவான், செவ்வாய் பகவான் மற்றும் புதன் பகவான் நட்சத்திரங்களுக்கு புஷ்கர நவாம்சம் கிடையாது.

  27 நட்சத்திரங்களில் இந்த ஒன்பது நட்சத்திரங்கள் தவிர ஏனைய 18 நட்சத்திரங்களுக்கும் புஷ்கர நவாம்சம் உண்டு.

  ஏனைய ஆறு கிரகங்களுக்கு உரிய நட்சத்திரங்களில் ( 18 நட்சத்திரங்கள்)   ஒரு சில குறிப்பிட்ட பாதங்களுக்கு மட்டுமே புஷ்கர நவாம்சம் உண்டு.

                          

அவையாவன

1)சூரியனின் நட்சத்திரங்களுக்கு
 1 மற்றும் 4ஆம் பாதம் மட்டும்,

2) குருவின் நட்சத்திரங்களுக்கு இரண்டு மற்றும் நான்காம் பாதம் மட்டும்.

 3)சந்திரனின் நட்சத்திரங்களுக்கு இரண்டாம் பாதம் மட்டும்.

4) சனியின் நட்சத்திரங்களுக்கு இரண்டாம் பாதம் மட்டுமே.

5) சுக்கிரனின் நட்சத்திரங்களுக்கு மூன்றாம் பாதம் மட்டும்.

6) ராகுவின் நட்சத்திரங்களுக்கு நான்காம் பாதம் மட்டுமே.

 கீழ்க்கண்ட கிரகங்கள் தரும் புஷ்கர நவாம்சம் சுபரின் ராசியாகவே அமைகிறது.

சூரியன் தரும் புஷ்கர நவாம்சம்- தனுசு, மீனம்

 குரு தருவது ரிஷபம், கடகம்

 சந்திரன் தருவது ரிஷபம்,

 சனி தருவது  கன்னி,

 சுக்கிரன்  தருவது துலாம்

 ராகு. தருவது  மீனம் ஆகும்.

 ஒரு ஜாதகருக்கு இலக்கனமானது புஷ்கர நவாம்சத்தில் அமைந்து லக்கினாதிபதி உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம்பெற்று நிற்பின் வாழ்நாள் முழுவதும் யோகப் பலன்களை அனுபவிக்கும் யோக பலனை பெற்றிருப்பார்.

  ஜாதகத்தில் கேந்திர, திரிகோணாதிபதிகள் மற்றும் தன, லாபாதிபதி உச்சம் ஆட்சி போன்ற நிலைகளில் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்றுள்ள நிலையில் அமைந்து அதன் திசை நடப்பில் உள்ள காலங்களில் ஜாதகருக்கு கிரகங்கள் மிகுந்த பலம் பெற்று அதிக யோகம் தரும் அமைப்பை பெறுகிறது.

  ஜாதக கட்டத்தில் மிகுந்த யோக பலனை தரக்கூடிய பெரும் கோணம் எனப்படும் ஒன்பதாம் அதிபதியும் மற்றும் பெரும் கேந்திரம் என அழைக்கப்படும் பத்தாம் அதிபதியும் சேர்க்கை, பார்வை மற்றும் பரிவர்த்தனை என்ற நிலையில் "தர்மகர்மாதிபதி யோகம்" பெற்று மேலும் புஷ்கர நவாம்சமும் பெற்று அமர்ந்துவிட்டால் கூடுதல் பலமடைந்து சாதகருக்கு அதன் திசையில் சிறப்பான யோக பலன்களை தருகிறது.

  ஒரு சாதக கட்டத்தில் இரண்டு, மூன்று கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் அமைந்துவிட்டால் தலைமை ஏற்று நடத்தக்கூடிய உயரிய அரசு பதவிகளிலும் மற்றும் அரசாட்சி அமைப்புகளிலும் நின்று புகழ் பெறக்கூடிய யோகங்களை சாதகனுக்கு தருகிறது.

 ஒருவரது ஜாதகத்தில் அரசு கிரகமான சூரியன் மற்றும் சந்திரனின் நட்சத்திரங்கள் அமர்ந்த கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் அமர அரசு வேலை கிடைக்கும்.
 
 ஆனால் அதே நேரத்தில் ஜாதக கட்டத்தில் கெடுதல் தரும் கிரகங்கள் அல்லது மறைவு ஸ்தான அதிபதிகள் புஷ்கர நவாம்சத்தில் அமர்ந்து பலம் பெறக்கூடாது.

    பொதுவாக சாதகத்தில் பலம் பெற வேண்டிய கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் அமைய அது சாதகருக்கு மிகுந்த யோக பலனை அள்ளித் தருகிறது.

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப் & கூகுள் பே எண் ;
          9715189647

   செல்
    9715189647
     7402570899


                             

  அன்புடன்
 சோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன்
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com


AstroRavichandransevvai.blogspot.com

AstroRavichandran.blogspot.com

.............

No comments: