Saturday 16 June 2018

சுக்கிர பகவானும், குருபகவானும் மனித வாழ்வில் தரும் மகத்தான மாற்றங்கள்

                சுக்கிரபகவானும்,

                              

                     குருபகவானும் 

                        

மனித வாழ்வில் தரும் மகத்தான மாற்றங்கள்.


                            "கிரகங்கள் படுத்தும் பாடு -( 154 )

செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

                   அசுரர்களின் குருவான சுக்கிரபகவானும் ,தேவர்களின் குருவான குருபகவானும் மனிதர்களின் வாழ்விலை அருளையும்,பொருளையும் உணர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

                    சுக்கிரன் உச்சம்,ஆட்சி, போன்ற நிலைகளில் பலமடைந்து நிற்கும்போது ஜாதகருக்கு எல்லாவிதமான வசதிகளையும் தந்து வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவிக்க வைத்து ஒருவித மன அமைதியில்லாத நிலையை தந்துவிடுகிறது.

                  அதேநேரத்தில் சுக்கிரன் நீசமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையில் பலமிழந்து நிற்கும்போது குடும்பம்,மனைவி,குழந்தைகள் இவைகளுக்காக சிரமப்படவேண்டிய நிலையை தந்து விடுகிறார்கள்.மேலும் எவ்வித சுகத்தையும் அனுபவிக்க இயலாமல் போய்விடுகிறது.

                 பொதுவாக சுக்கிரனை் நீசமாக  ் பெற்றவர்கள்  எவ்வித சுகத்தையும் பூரணமாக அனுபவித்தல் என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும்.அவ்வாறு கிடைத்தாலும் இறுதியில் கசப்பாகவே சென்று முடிகிறது.

                 காம இன்பங்களை அள்ளி தரக்கூடிய சுக்கிரபகவான்தான் ஒரு மனிதனை ஆன்மீகவாதியாகவும் மாற்றுகிறது.

                 தாரதோஷத்தை தருவதில் சுக்கிரபகவானுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.கேந்திர நிலைகளான 1,4,7,10 போன்ற இடங்களில்  இடம்பெறும்போது தாரதோஷத்தை தருகிறது.

                 சிலநேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தாரங்களை தந்து மனிதனை பயனற்ற பொருளாக மாற்றிவிடுகிறது.
தாரதோஷத்தை தருவதில் சுக்கிரனுக்கு அடுத்தபடியாக குருபகவானுக்கும் பங்கு உண்டு.சுக்கிரனுக்கு எதிர் தன்மை படைத்த கிரகம்தான் குருபகவான் ஆகும்.அசுரர்களின்  ஆசிரியர் ஆனவர் சுக்கிரபகவான் ஆவார்.இவர் குருபகவானோடு சேரும்போது மனிதர் எவ்வளவு கஷ்டங்களுக்கு உள்ளாகிறான் என்பதை தெளிவாக பார்ப்போம்.

                குருவும் ,சுக்கிரனும் இயற்கையில் ஒருவருக்கொருவர் பகைமை பெற்ற அம்சத்தினால் சாதகருக்கு லக்கன பாவத்தை தவிர இவர்கள் வேரு எந்த பாவத்தில் சேர்ந்தாளும் அந்த பாவம் பாதிக்கப்படும் என்பது எனது அனுபவ உண்மையாகும்.

                    குரு சுக்கிர சேர்க்கை காதலில் தோல்வி,மன அமைதியற்ற குடும்பம்,ஒற்றுமையில்லாத மனைவி ,அன்பில்லாத குழந்தை இவைகளை கொடுப்பதன் மூலம் மனிதன் துயரத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறான்.

                  ஓருவருக்கு காதல் தோல்வி,வழக்கு மன்றத்திற்கு செல்லுதல்,சன்னியாசியாக போவதே நல்லது போன்ற மனமாற்றத்தை தருவது குரு சுக்கிரன் சேர்க்கையாகும்.
மனிதன் நிம்மதியாக வாழவேண்டுமாயின் இவ்விரு கிரகங்களும் தனித்து இருப்பதுதான் நல்லது.இந்த இரு கிரகங்கள் ஒன்றையொன்று சேராமலும் ,பார்த்துக்கொள்ளாமல் இருப்பதே நன்று ஆகும்.

தோஷ நிவாரணம் பெற :-

                  ஆண் ஜாதகத்தில் குரு-சுக்கிரன் சேர்க்கையோ அல்லது சமசப்தம பார்வையோ இருக்குமானால் அதே மாதிரியான அமைப்பை பெற்ற பெண் ஜாதகத்தினை வாழ்வில் இணைக்கும்போது எவ்வித  கஷ்டங்களும் இல்லாமல் மனமொத்து வாழ்வார்கள்.

                  ஒரு மனித வாழ்வில் தாரதோஷத்தை தருவதில் குரு-சுக்கிர சேர்க்கைக்கு மகத்தான பங்கு உண்டு.
எவ்வித அமைப்பில் இவற்றின் சேர்க்கை இருந்தால் பாதிக்கப்படும் என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இப்பதிவினை கொண்டு செல்கிறேன்.

தாரதோஷத்தை தரக்கூடிய கிரகநிலைகள்:-

1) குரு-சுக்கிரன் ஒன்றை ஓன்று பார்த்துக்கொள்ளும்போது

2) குரு-சுக்கிரன் லக்கன பாவத்தை தவிர ஏனைய பாவங்களில் சேர்ந்து இருக்கும்போது

3) சில நேரங்களில் சுக்கிரன் மட்டும் உச்சமாகவோ அல்லது நீசமாக இருக்கும்போது

4)  சுக்கிரனோடு பாவிகளான  சனி,ராகு,கேது சேர்க்கை பெறும்போது

5) கேந்திர நிலைகளில் சுக்கிரன் பலமடைந்து நிற்கும்போது

6) சுக்கிரன் களத்திர வீடான ஏழாம் இடத்தில் நிற்கும்போது

7)/ஏழுக்குடையவனோடு களத்திரகாரகன் சுக்கிரன் சேரும்போது

             மேற்கண்ட அமைப்பானது ஓருவரது சாதகத்தில் இருப்பின் தாரதோஷத்தை சாதகருக்கு தருவதற்கான வாய்ப்புகள் உண்டு.இதில் சில விதிவிலக்குகள் உண்டு.சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை அல்லது ஏழாமிட ,தாரதோஷ தொடர்புடைய பதினொறாமிட அதிபதி ஆகிய கிரகங்களின்
தன்மையை பொறுத்து பலனில் மாறுபடலாம்.

             பொதுவாக ஒருவருக்கு தாரதோஷத்தை தர ஏழாமிட அதிபதி பலமிழந்து பதினொறாமிட அதிபதி பலமடைந்தால் தாரதோஷத்திற்கு வாய்ப்புகள் உண்டு.

                குடும்பாதிபதி,லாபாதிபதி ஆகிய இருவர் களத்திர அதிபதியுடன் சேர்ந்து நிற்கும்போது தாரதோஷத்தை தருகிறது.

               இரண்டு , ஏழுக்குடையவனோடு அரவுகளான ராகு,கேது மற்றும்  சனி பேன்ற கிரகங்களின் சேர்க்கையினாலும் தாரதோஷம் தர வாய்ப்புகள் உண்டு.

நன்றி.அடுத்த பதிவில் சந்திப்போம்.

( தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து அனுப்பிவைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த  நாட்டில் இருந்தாலும் போன் வழியாகவே பெறலாம்.தங்களது " பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை எனது கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு message செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம் )

தொடர்புக்கு

  வாட்ஸ்அப் எண்
  97 151 89 647

   செல்
97 151 89 647
   740  257 08 99

                              

அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
   M.SC ,MA ,BEd.
ஆன்லைன் சோதிட ஆலோசனையாளர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi @gmail.com

My website
astroravichandransevvai. blogspot. Com
AstroRavichandran. blogspot. com
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

No comments: