Sunday, 9 September 2018

ஜோதிடமும் ஆளுமையும் -(2)

ஜோதிடமும் ஆளுமையும்-( 2 )


                                           
         

கிரகங்கள் படுத்தும் பாடு

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

         சென்ற பதிவில் உடல் மற்றும் உள்ளத்தையும் பற்றி பார்த்தோம்.

        இப்பதிவின் மூன்றாம் நிலையான ஆன்மாவினை பற்றி பார்ப்போம்.

         இந்த உடலிற்கும்,உள்ளத்திற்கும் அழிவு என்பது உண்டு.ஆனால் ஆன்மாவிற்கு அழிவு என்பது கிடையாது.

          ஒரு சட்டை கிழிந்தவுடன் வேறு ஒரு புதிய சட்டை மாற்றி கொள்வது போல் இந்த உடல் அழிந்தவுடன் வேறு உடலினை அணிந்துகொள்கிறது.

        திருமந்திரம் மூவாயிரம் எழுதிய திருமூலரின் உடலும் மூலன் என்ற ஆடு மேய்க்கும் இடையரின் உடல் ஆகும்.

          ஆடு மேய்க்கும் மூலனின் உயிர் பிரிந்துவிட அவனது உடலுக்குள் நுழைந்து விட்டு திரும்புவதற்குள்
சத்திரத்தில் இவரது உடல் தீக்கிரையாகப்பட்டது.

          வேறு வழியின்றி மூலனின் உடலுக்குள் இருந்துகொண்டே ஒரு ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் ஐயாயிரம் பாடல்கள் எழுதியதாக படிக்கும்போதோ சித்தர்களுக்கு கூடுவிட்டு கூடு பாயும் வித்தை,நீண்ட நாள் வாழும் வித்தை மற்றும் நீர் மேல் நடக்கும் வித்தை போன்றவை அறிந்திருந்தார்கள்.

ஜோதிடமும் ஆன்ம நிலையும்
********************************

ஆன்ம நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை ஆன்ம ஈடேற்றம் என்பார்கள்.

ஆன்மா முன்னேற்த்திற்கு

1) லக்கனம்

2) பூர்வ புண்ணிய ஸ்தானம்-ஐந்தாமிடம்

3) தர்ம ஸ்தானம் எனப்படும்-ஒன்பதாம் இடம்

4) கர்ம ஸ்தானம் எனப்படும்-பத்தாமிடம்

புலிப்பாணி பாடல்

"கேளப்பா ஈரைந்தில் முக்கோள் நிற்க கெதியுள்ள சன்னியாச யோகம்யோகம் ஆளப்ப அத்தலத்தில்
இருகோள் நிற்கில் அப்பனே தபசியடா யோகிஞானி
கூளப்ப ஒருகோளும் குணமாய் நிற்கில் குவலயத்தில்
புனிதனடா  ஞானியோகி வீளப்ப விண்ணுலக தேவரோடு விதமாக வீற்றிருப்பன் ரிஷிகளோடே"

பாடல் விளக்கம்
++++++++++++

       லக்கனத்திற்கு பத்தாமிடத்தில் மூன்று கோள்கள் நிற்பின் சன்னியாச யோகம்.
இரண்டு கிரகங்கள் இருந்தால் தபசியாகவும்,யோகியாகவும்,ஞானியாகவும் இருப்பான்.
ஒருகோள் இணக்கமாக நின்றால் புனிதனாக இருப்பான்.

சாதக அலங்காரம்,புலிப்பாணி தரும் இது போன்ற  பாடல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

                              

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம்சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்.

அலைபேசி : 9715189647
                          740 257 08 99

வாட்ஸ் அப்
 97 151 89 647

(தங்களது சாதக பலன் ,திருமணபொருத்தம் மற்றும் 
ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி,பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம். )

No comments: