உங்களுடைய சாதகம் யோகமான சாதகமா? என எப்படி தெரிந்து கொள்வது.?
கிரகங்கள்படுத்தும்பாடு
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
*****************************
எல்லோருக்கும் நம்முடைய ஜாதகம் யோகமுடையதா? என தெரிந்து கொள்வதில் அளவுக்கதிகமான ஆசை இருக்கும்.
ஏதாவது சிறு யோகம் இருந்தாலும் அதை வைத்தே நம்ம வாழ்க்கையை ஓட்டிடலாம என நினைப்பவர்கள் பலர் உண்டு. என்னிடம் சாதகம் பார்க்க வருபவரில் பலர் எப்படியாவது நான் முன்னேறிவிடும் அளவிற்கு யோகம் உண்டா சார்?என கேட்பவர்களே அதிகம் ஆகும். எனவே இவர்கள் பயன்படும் விதமாக ஒரு பதிவு போடவேண்டும் என எனது நீணட நாள் ஆர்வத்தால் எழுந்த பதிவு.
ஒரு சாதகமா என ஆராய்ந்தறிய பின்வரும் விதிகளை கவனிக்கப்பட வேண்டும்.
1) ஒருவருடைய ஜாதகத்தில் கேந்திராதிபதிகள் கோணம் அல்லது மறைவு ஸ்தானங்களில் இடம் பெற வேண்டும்.மேலும் அவர்களுடைய தசை நடக்கவேண்டும்.
2) பாவிகள் கேந்திரத்தல் இடம்பெறல் நல்லது.மேலும் கேந்திர(1,4,7,10) கோணாதிபதிகளுடன் (1.5.9)பரிவர்தனை நல்லது.
3) கோணதிபதிகள் தமக்குள் பரிவர்தனை பெறுதல் நலம்.
4) 5 மற்றும் 2- க்கு அதிபதியும் வலுவான 9-வது திரிகோணம் அல்லதுது பத்தாவது கேந்திரம் பெற்று இவற்றுள் இடம்பெற்றும் கிரக தசைகளில் இராச யோகத்தை கொடுக்கும்.
5) இராகு 4,5,10,11 வீடுகளில் இருந்தால் அதன் தசா புத்திகளில் யோகங்களை தரும்
6) சந்திரனும் ,சுக்கிரனும் மூன்றாம் வீட்டில் இருப்பின் சுக்கிர.தசை யோகத்தை தரும்.
7) குரு 9 -க்கு உடைய கிரகமாகி 8- ம் வீட்டில் இருப்பின் பாக்கியவான்.
8 ) 2,5,11 இவற்களுடைய அதிபதிகள் பரிவர்தனை அல்லது பரஸ்பர பார்வை பெற்று இருப்பின்
9) 10 மற்றும் 11 க்குடைய அதிபதி பரிவர்த்தனை,2,9 பரிவர்த்தனை மற்றும் பரஸ்பர பார்வை
10) தர்ம-கர்மாதிபதி யோகம் பெறல்( 9,10 க்கைடைய அதிபதிகள் பரிவர்தனை ,சம சப்தம பார்வை)
11) 9,10 க்குடைய கோள்கள் தத்தம் வீட்டில் ஆட்சி பெறல்.அல்லது ஏழாம் வீட்டிலோ,லக்கனத்திலோ இடம் பெறல்
12) 5,7,10 -ஆம் அதிபதிகள் கேந்திர கோணங்களில் இடம்பெறல் புகழ்,அதிகாரம்,செல்வம் கிடைக்கும்
13) 9 மற்றும் 11 -ஆம் வீட்டின் அதிபதிகள் பரிவர்தனை மற்றும் பரஸ்பர பார்வை யோகத்தை தரும்
14) பாவிகள் 3,6,11-ல் இருப்பின் யோகர்
15) லக்கினாதிபதி 9,4 க்குடைய கோள்கள் 10-ம் வீட்டில் இருப்பின் அல்லது லக்கினாதிபதி 7,10 ம் வீட்டில் கோள் ஒன்று சேர்ந்து இருப்பின் தங்களது தசை காலங்களில் யோகங்களை கொடுக்கும்
16) மீன லக்கனம் லக்கனத்தில் சந்திரன்,சிம்மத்தில் சூரியன்,கும்பத்தில் சனி,மகரத்தில் செவ்வாய் அரசனுக்கு சமமான யோகம்
17) மகர லக்கனம் லக்கனமாகி லக்கனத்தில் செவ்வாயும்,கடத்தில் சந்திரனும் பெற்றவர்கள்
18) லக்கனாதிபதி ஐந்திலும் 2-க்குடையவன் 11-ல் இருந்தால் சுய உழைப்பில் முன்னேறுவான்.
19) பிறர் வழியாக சொத்து சேரல்;-
a ) 2,4 சேர்க்கை தாய் மூலமும்
b) 2,5 சேர்க்கை புத்திரர் மூலமும்
c) சுக்கிரன் 4 லும், 4- ம் அதிபதி 7- லும் இருந்தால் மனைவி மூலமும்,
d) 6-ம் அதிபதி மற்றும் 6-ம் ஸ்தானாதிபதி செவ்,சனி உடன் லக்க்னாதிபதி சேர்க்கை எதிரி மூலமும் சொத்து சேரும் யோகம்.
20) சுப கிரகங்கள் மற்றும் பஞ்ச மகாயோகம் பெறல்.
குரு ஆட்சி உச்சம்-ஹம்சக யோகம்
புதன் ஆட்சி உச்சம்- பத்ர யோகம்
செவ் ஆட்சி உச்சம்-ருசக யோகம்
சுக்கிரன் ஆட்சி உச்சம்-மாளவீக யோகம்
சனி ஆட்சி உச்சம் -சசக யோகம்
21) 4,2 ஆம் அதிபதியுடன் கூடி 9-ம் இடத்தில் இருக்க 10- ம் அதிபதி பலவனாய் 2-ல் இருக்க லாபாதிபதி மற்றும் லக்கனாதிபதி உச்சம் பெற கோடீஸ்வர யோகம்.
தொடரும்.......
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd,
சோதிடர் & ஆசிரியர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் ;97 151 89 647
செல்; 740 257 08 99
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
(சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
My email
masterastroravi@gmail.com
My blogspot
AstroRavichandran. blogspot. com
AstroRavichandransevvai.blogspot. com
No comments:
Post a Comment