பஞ்சமஹாயோகங்கள் பற்றிய ஓர் ஆய்வு நிலை.
கிரகங்கள் படுத்தும் பாடு -( 112 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
நவகோள்களில் சூரியன்,சந்திரன்,ராகு மற்றும் கேதுக்களை தவிர ஏனைய ஐந்து கிரகங்களான குரு,புதன்,செவ்வாய்,சுக்கிரன் மற்றும் சனி இந்த ஐந்து கிரகங்கள் ஒருவருடைய சாதகங்களில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெறுவதையே #பஞ்சமஹாயோகங்கள் என்கிறோம்.
இங்கு
1) #குருபகவான் -தரும் யோகம் #ஹம்சகயோகம் ஆகும்.
இவை தரும் காரக பலன்களாவன கல்வி,ஞானம்,வேதவிசாரனை,ஆன்மீக சொற்பொழிவு,பணம்,பதவி ,பட்டம் ,புகழ் மற்றும் குழந்தைபாக்கியம் முதலியன்.
2)#புதன்பகவான்-தரும் யோகம் #பத்ரயோகம் ஆகும்.
இவை தரும் காரகபலன்களாவன வித்தை,எழுத்து ,ஓவியம்,இசை,சோதிடம் ,பேச்சு மற்றும் மாமன் வர்க்கம் முதலியன்.
3)#செவ்வாய்பகவான்-தரும் யோகம் #ருசகயோகம் ஆகும்.
இவை தரும் காரகபலன்களாவன ,நிலம் சேருதல்,மருத்துவம்,இராணுவம்,போலீஸ்,வீரம்,வீம்பு,தலைக்கணம்,இரத்தம் மற்றும் சகோதரம் முதலியன்.
4)#சனிபகவான் -தரும் யோகம்
#சசகயோகம் ஆகும்.
இதன் காரக பலன்களாவன, இரும்பு மற்றும் கனரகவாகனங்கள்,ஆளடிமை,மின்சாரம்,அரசியல் முதலியன்.
5 ) #சுக்கிரபகவான்- தரும் யோகம் #மாளவீகாயோகம் ஆகும்.
இதன் காரகபலன்களாவன
நடனம்,நடிப்பு போன்ற கலைகள்,சிற்றின்பம்,வாகனயோகம்,அழகுணர்வு,மனைவி,அழகூட்டும் பொருட்கள் முதலியன்.
மேற்கண்ட பஞ்சமஹாயோகங்களை ஒருவருடைய சாதகங்களில் பெறும்போது அதனதன் காரக பலன்களை சாதகருக்கு சிறப்பாக வழங்கினாலும் அக்கிரகங்கள் பெறும் ஸாதானங்களின் தன்மைக்கு ஏற்றவாறே அந்த யோகங்கள் செயல்படுவது அமையும் என்பதை சோதிடர்களாகிய நாம் கவனிக்கவேண்டியது அவசியமானதாகும்.
#பணிரெண்டு லக்கனங்களுக்கு பஞ்சமஹாயோகங்கள் தரும் பலன்களின் தன்மைகளாவன்:-
#மேஷலக்கனம்.
இந்த லக்கனத்தை பொறுத்தவரை லக்கனாதிபதி மற்றும் அட்டமாதிபதியாக #ருசகயோகம் தரக்கூடிய செவ்வாய் பகவான் அமைவதால் இவை உச்சம் மற்றும் ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெறும்போது லக்கனாதிபதி என்ற வகையில் இந்த லக்கனகாரர்களுக்கு அந்த செவ்வாய் பகவான் அதன் திசைகளில் நன்மையை செய்தாலும் அவை அட்டமாதியாகவும்
இருப்பதால் அதன் திசைகளின் பாதி வருடங்கள் அட்டமாதி தரும் தொல்லைகளையும் அவை வழங்கும்.எனவே ருசகயோகம் இந்த லக்கன காரர்களுக்கு முழுவதும் வேலை செய்யாது.
மேலும் செவ்வாய்க்குரிய காரக பலன்களை சிறப்பாக வழங்கும்.
மேஷ லக்கன காரர்களுக்கு #சுக்கிரபகவனால் தரக்கூடிய #மாளவீகாயோகம் சிறப்பாக செயல்படும்.ஆனால் சுக்கிரன் ஏழாமிடத்தில் ஆட்சி பெறாமல் இருத்தல் நலம்.ஏனெனில் அவை #காரகபாவநாஸ்தியை தரக்கூடாது என்பதற்காகவேயாகும்.
மேஷ லக்கனகாரர்களுக்கு #புதன்பகவானால் தரக்கூடிய #பத்ரயோகம் சிறப்பான பலனைத்தராது.ஏன் மேஷலக்கனகாரர்களுக்கு புதன்பகவான் திசையே வராமல் இருத்தல் நலம்.இவ்வாறு உச்சம் மற்றும் ஆட்சி போன்ற பலம்பெற்ற பத்ரயோகத்திசை நடைபெறும்போது சாதகர் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கஷ்டங்களை அடைவார்.காரணம் என்னவெனில் புதன் பகவான் இந்த லக்கனகாரர்களுக்கு மூன்று மற்றும் ஆறு(ருண,ரோகம் மற்றும் சத்ருக்களால் தொல்லை தரக்கூடிய ஸ்தானம்) எனும் ஸ்தான அமைப்பை பெறுவதால் பத்ரயோகத்தால் இந்த லக்கனகாரர்களுக்கு பலனிள்ளை.
மேஷ லக்கன காரர்களுக்கு #சனிபகவான் தரும் #சசகயோகம் சிறப்பாக அதன் திசைகாலங்களில் செயல்படாது.பொதுவாக பாவகிரகங்கள் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நேர்வலுபெறக்கூடாது எனும் விதிப்படியும் , ஒரு சாதகருக்கு நடைபெறும் திசையானது லக்கனாதிபதிக்கு நட்பாக இருக்கும் பட்சத்தில் மிகுந்தயோகங்களை வழங்கும்.அதேநேரத்தில் பகையாக செயல்பட்டால் பலன்களில் சற்று பங்கம் உண்டாகும் வாய்ப்புண்டு எனும் விதிப்படியும்(செவ்வாய்க்கு ஜென்ம விரோதி சனிபகவான்) மற்றும் சரலக்கனத்திற்கு சனிபகவான் #பாதகாதிபதி என்ற விதிப்படியும் மேஷ லக்கனகாரர்களுக்கு #சசகயோகம் சிறப்பான பலனை தராது.
மேஷ லக்கன காரர்களுக்கு #குருபகவானால் தரக்குடிய #ஹம்சகயோகம் சிறப்பான பலனை தரும். மேஷலக்கன காரர்களுக்கு ஹம்சகயோகம் பெற்ற குருபகவானால் நடத்தப்படும் திசையானது முழுமையான பலனை தரும்.காரணம் லக்கனாதிபதி செவ்வாய்க்கு குருபகவான் யோகர் என்பதாலும் மற்றும் நண்பர் என்ற வகையிலும் ஹம்சகயோகம் சிறப்பாக செயல்படும்.
அடுத்த பதிவுகளில் இதர லக்கனங்களுக்கான பஞ்சமஹாயோகங்கள் எவ்வாறு செயல்படுகிறது என பார்ப்போம்.
(உங்களுடைய சாதகங்களில் பஞ்சமஹாயோகங்கள் எவ்வாறு செயல்படுகிறது என விரிவாகவும்,விளக்கமாகவும் தெரிந்து கொள்ளவும் மற்றும் முழு சாதகங்களை ஆய்வு செய்து பலன்பெற எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற விவரங்களை மெஸ்ஸேஸ் செய்து கட்டண விபரங்களை தெரிந்துகொள்ளவும்.#திருமணபொருத்தம்,#சாதகம்கணித்தல் போன்ற சேவைகளை ஆன்லைன் மூலமாகவே பெறலாம்)
தொடர்புக்கு
செல்
97 151 89 647
740 257 08 99
வாட்ஸ்அப்
97 151 89 647
masterastroravi@gmail.com
My Website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com
.........
.........
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.
No comments:
Post a Comment