பூமி வாங்கி சேர்க்கும் யோகம் மற்றும் உயிர் ஜீவ சந்துக்களை வளர்க்கும் யோகம்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"உழவர்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது" .இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் ஆகும்.
ஒருவர் சிறந்த விவசாயியாக திகழ அவர் ஜாதகத்தில் நான்காம் இடமும் அதன் அதிபதியும் மற்றும் பூமிகாரகன் செவ்வாயும் பலம் பெற்றிருக்க வேண்டும்.
ஒருவரது ஜாதகத்தில் நான்காம் அதிபதியும்,பூமிகாரகன் செவ்வாயும் உச்சம், ஆட்சி மற்றும் நட்பு போன்ற நிலைகளில் பலம் பெற்று இயற்கை சுப கிரக தொடர்பு பெற அதன் தசை ,புத்தி நடைபெறும் காலங்களில் மிகுந்த விவசாய நிலங்களை வாங்கி சேர்க்கும் யோகமும் மற்றும் விவசாயத்தால் லாபம் அடையக் கூடிய சூழலும் உருவாகும்.
ஒருவரது ஜாதகத்தில் நான்காமிடத்தில் சுப கிரகங்கள் நின்று கால்நடை காரகன் சுக்கிரன் பகவானும் பலம் பெற்று அதன் தசை, புத்தி நடக்கக்கூடிய காலங்களில் ஆடு ,மாடு மற்றும் நாய் போன்ற உயிர் ஜீவ சந்துக்களை வாங்கி வளர்க்கக் கூடிய யோகம் உண்டாகும்.
மாறாக நான்காம் இடத்தில் பாவக் கிரகங்களான சனி ,ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் நின்றாலும் , நான்காம் அதிபதியும் சனி ,ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்களுடன் சேர்ந்து அல்லது அதன் நட்சத்திரம் சாரம் பெற்று நின்றாலும்,
வாகனகாரகன் சுக்கிரனும் நீசம், அஸ்தமனம் மற்றும் பகை மற்றும் சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை அல்லது சாரம் பெற்றிருந்தாலும் ஆடு மாடு போன்ற உயிர் ஜீவ சந்துக்களை வாங்கி வளர்க்கக்கூடிய யோகம் இல்லை.
ஒருவரது ஜாதகத்தில் நான்காம் இடம் எவ்விதத்திலும் பங்கபடாமல் , நான்காம் இடம் அதிபதியும் உச்சம்,மூலதிரிகோணம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று
கால்நடை காரகன் சுக்கிரன் பகவானும்,பூமிகாரகன் செவ்வாய் பகவானும் பலமடைந்து ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று எந்த வகையிலாவது சுபத்துவ நிலைகளில் சூட்சும வலு பெற்று திகழ அதிக விவசாய நிலங்களையும்,விவசாயத்திற்கு பேருதவி புரிகிறது.
ஒருவரது ஜாதகத்தில் நான்காம் இட அதிபதி கோணநிலை., ஏறிநின்று அதன் திசை நடைபெறும் காலங்களில் மிகுந்த நிலபுலன்கள் வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.
பூமி காரகன் செவ்வாய் பலம் பெற்று நான்காமிட அதிபதியுடன் தொடர்பு கொள்ள பூமி வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.
நான்காம் இடம் மற்றும் அதன் அதிபதியுடனும்,பூமி காரகன் செவ்வாய் பகவானுடனும் தொடர்பு கொண்டுள்ள கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப அதன் திசை புத்தி காலங்களில் பூமி வாங்கி சேர்க்கும் யோகமும், உயிர் ஜீவ சந்துக்களை வாங்கி வளர்க்கக்கூடிய யோகமும் அமைகிறது.
ஒருவர் ஜாதகத்தில் நான்காம் இடம் , அதன் அதிபதி மற்றும் பூமிகாரகன் செவ்வாய் ஆகியவை பலம் பெற்றுத் திகழ்வதோடு இரும்பு காரகன் சனிபகவான் மற்றும் வாகன காரகன் சுக்கிரன் பகவான் பலம் பெற்று தொடர்புகொள்ள விவசாயத்திற்கு பயன்படக்கூடிய பம்புசெட் மற்றும் டிராக்டர்,கதிர் அடிக்கும் எந்திரம் .... போன்ற கனரக எந்திரங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்யும் புகழ்பெற்ற விவசாயியாக திகழ்வார்.
நன்றி.
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email ; masterastroravi@gmail.com
.............
No comments:
Post a Comment