Friday, 19 June 2020

கிரகங்களும் சில தொழில்களும்

கிரகங்களும் சில தொழில்களும்

                            

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

     ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் பற்றி அறிய "ஜீவன ஸ்தானம்" என்று அழைக்கப்படும் பத்தாம் இடம் மற்றும் அதன் அதிபதியினையும் இத்துடன் பத்துக்கு பத்தாம் இடமான ஏழாம் இடத்தினையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

   பத்தாம் இட அதிபதி அம்சத்தில் எந்த வீட்டில் உள்ளார் என்பதை பொறுத்தும் சாதகருக்கு தொழில் அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

  ஒருவர் வாழ்வில் தான் மேற்கொண்ட தொழிலில் வெற்றி அடைவாரா? என்பதை கண்டறிய அவரது தனம் சேர்க்கும் யோகமான 2,9,11 ஆம் இடத்தையும் மற்றும் தொழிலில் வெற்றியினை அள்ளி தரும் ஸ்தானமான ஆறாம் இடத்தினையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

  எல்லாவற்றிற்கும் மேலாக சாதகரை வழிநடத்திச் செல்லக்கூடிய கேப்டனாகிய லக்கினாதிபதியும் வலுவடைந்து தொழில் நடத்தும் போது உரிய தசையும் மற்றும் நல்ல கோச்சார பலன்களும் அமைய வேண்டும்.

    ஒருவரது ஜாதகத்தில் சுபத்துவ நிலையில் உள்ள கிரகங்களின் திசையானது நடப்பில் உள்ள போது அக்கிரகம் தொடர்பான தொழிலினை சாதகர் மேற்கொள்ள அந்த தொழிலில் வெற்றி பெற்ற நபராக வலம் வந்து நிறைய பொருள் ஈட்டக்கூடிய யோகத்தை அடைவார்.

    தங்களது சாதக கட்டத்தில் உள்ள சுபத்துவமான கிரகங்களை கண்டறிந்து அந்த கிரகத்திற்கு உரிய துறையினை கீழ் கண்டவாறு தேர்வு செய்து மேற்கொள்ள வெற்றி மீது வெற்றி வந்து சாதகரை வந்து சேரும்.

 சில முக்கிய துறைகளும், அதில் சிறப்படைய தேவையான கிரகங்களும்.

1.கப்பல்துறை :
               சந்திரன்,சுக்கிரன் மற்றும் சனி

2-காவல்துறை :
                செவ்வாய்,புதன் மற்றும் சனி.

3-விமான துறை :
          ராகு,சனி

4-ரயில்வே துறை :
         சனி,சந்திரன்

5-வேதத்துறை :
         குரு,புதன்

6-விவசாயதுறை :
      செவ்வாய், சூரியன் மற்றும் சந்திரன்
                         
7-மருத்துவத்துறை :
          ராகு,சனி, சூரியன் மற்றும் செவ்வாய்
                      
8-மின்சார துறை :
          ராகு,செவ்வாய்

9-சினிமா துறை :
            புதன்,சுக்கிரன்

10-பத்திரிகை துறை :
              புதன்,சனி

11-வங்கி துறை :
          குரு,புதன்,சுக்கிரன்

12-ஜவுளி துறை :
              புதன்,சுக்கிரன்

13-ஹோட்டல் தறை :
               சுக்கிரன்

14-அரசியல் துறை :
             ராகு,சூரியன், செவ்வாய் மற்றும் சனி
                          

15-இராணுவம் :
          செவ்வாய்,சனி

16-கல்வி துறை :
           குரு,புதன்,கேது

17-கணிப்பொறி :
            ராகு,செவ்வாய்

18-இசை துறை :
          குரு,கேது,சுக்கிரன்

19-விளையாட்டு :
‌        சூரியன், செவ்வாய்

20-பல சரக்கு கடை :
        புதன்,சனி

21-நகை கடை : 
                 குரு ,சுக்கிரன்

22) கல்வி
          குரு மற்றும் புதன்

22) வழக்கறிஞர் மற்றும் நீதித்துறை;
    குரு மற்றும் சனி

 மேற்கண்ட கிரக அமைப்புகள் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டு நல்ல நட்சத்திர சாரம் பெற்று, வளர்பிறை சந்திரன் மற்றும் சுபர் பார்வை பெற்றும்,
ஆட்சி,உச்சம்,நட்பு போன்ற ஏதேனும் அமைப்பு பெற்று  சுபத்துவ நிலையில் அமைய மேற்கண்ட
தொழில் அமைகிறது.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647

‌.      செல்
    9715189647
       7402570899

வாழ்க வளமுடன்

                              

என்றும் அன்புடன்
சோதிடர் 
சோ.ப. ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd(ஆசிரியர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.

My website below click it

www.AstroRavichandran.blogspot.com

www.AstroRavichandransevvai.blogspot.com

No comments: