லக்கினம் மற்றும் லக்கினாதிபதி காட்டும் பலன்கள்-Part-(2)
செவ்வாய்ம்பட்டி ஸ்ரீ
பத்திரகாளி அம்மன் துணை.
லக்கினத்தில் சூரியன் குரு இணைந்து இருந்தாலும் அல்லது இருவரும் ஐந்தாம் இடத்தில் நின்றாலும் அல்லது இருவரும் உச்சம் பெற்று நின்றாலும் அல்லது அவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் ஆட்சி பெற்று இருந்தாலும் தங்களுக்கு சம சப்தமாக பார்த்திருந்தாலும் சிவராஜயோகம் பெற்று புகழுடன் வாழ்வார்.
லக்னாதிபதியுடன் பாபக் கிரகமான சூரியன், செவ்வாய் ,சனி மற்றும் ராகு இணைந்து இருந்தால் பணத்திற்காக எதையும் செய்யும் எண்ணம் உடையவனாக திகழ்வான்.
லக்கினத்தில் செவ்வாய் இருந்து சனியால் பார்க்கப் பட்டால் லக்னாதிபதி பலமிழந்த சூழலிலும் வேறு ஏதேனும் வகையில் லக்கனத்திற்கு சுபத்துவம் பெறாத நிலையிலும் அந்த சாதகர் ஹோமோ செக்ஸில் ஆர்வம் மிக்கவராக இருப்பார்.
லக்கினத்தில் சூரியன், சனி இணைந்து நின்றால் அவர் சிறந்த வியாபார தந்திரங்களை கொண்டவராக திகழ்வார். சுபகிரகங்கள் பார்வை பெறாத சூழலில் தந்தை மீது அதிக பாசம் கொண்டிராதவராக இருப்பார்.
லக்கினாதிபதியும் ஜீவன ஸ்தான அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் நல்ல பதவி ,அந்தஸ்து, அரசுடன் தொடர்பு மற்றும் அரசாங்கத்தின் உயர் பதவி போன்றவை கொடுக்கும்.
இலக்கினத்தில் சனியும், ராகுவும் இணைந்து பாப கிரகமான செவ்வாய் பார்வையைப் பெற்றால் ஜாதகன் துர்குணம் படைத்தவராக கோபம் மிகுந்தவராகவும் காணப்படுவார் வாழ்க்கைத் துணையுடன் விட்டுப் பிரிந்து வாழ்வார்.
லக்கினாதிபதியும் 5ஆம் அதிபதியும் பரிவர்த்தனை பெறுவது ராஜ யோகம் கிட்டும். திருப்பணிகள் அதிகமாக செய்வார். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உண்டாகும் .
லக்கினாதிபதியும், களத்திர ஸ்தானமான ஏழாம் அதிபதியும் இணைந்து மறைவு ஸ்தானமான 6, 8, 12-ல் இருந்தால் ஜாதகருக்கு திருமணம் கால தாமதமாக நடைபெறும் அல்லது திருமணம் தடைபெறலாம்.
ஒருவரது ஜாதகத்தில் லக்கினத்தின் பரல்களை விட களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் பரல்கள் அதிகமாக இருந்தால் மனைவியின் ஆட்சிதான் அவர்கள் வீட்டில் நடைபெறும். அதேசமயம் ஏழாம் இடத்தை விட லக்கனத்தில் பரல்கள் அதிகமாக இருந்தால் ஜாதகர் சகல அதிகாரமும் கொண்டவராக குடும்பத்தை அவரை ஆட்சி செய்வார்.
களத்திர ஸ்தானமாகிய ஏழாம் இடத்தில் சந்திரன், சுக்கிரன் இணைந்து இருந்தாலும் அல்லது சனி, செவ்வாய் இணைந்து இருந்தாலும் ஜாதகருக்கு மனைவி இல்லை. ஏனைய பிற அமைப்புகளை பொருத்து பலன் மாறுபடலாம்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி உச்சம் பெறுவது நல்லது. உதாரணமாக சிம்ம லக்கினமாக இருந்து மேஷத்தில் சூரியன் உச்சம் பெறுவது ஆட்சி செய்யும் அதிகாரத்தை சாதகர் பெறுவார்.
லக்னத்தில் சுபகிரகங்கள் இருந்து லக்கினாதிபதி நன்றாக பலம் பெற்று இருந்தால் சிறு வயது முதல் வாழ்க்கை மற்றும் உடல்நலம் சிறப்பாக இருக்கும். மாறாக லக்கினத்தில் சனி, செவ்வாய் ,ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் இருந்து, லக்கினாதிபதியும் பாவ கிரகங்களுடன் சேர்ந்து பலவீனப்பட்டு இருந்தால் வாழ்க்கை மற்றும் உடல்நலம் பாதிக்கப்படும்.
லக்கினத்தில் சந்திரன் இருக்கப் பெற்றவர் அழகானவன் . ஏழாம் இடத்தில் சந்திரன் இருக்கப் பெற்றால் தனக்கு வரக்கூடிய மனைவி அழகு வதனம் படைத்தவராக இருப்பார்.
லக்கினத்தில் சுக்கிரன் மன்மதனை போன்றவர். லக்கினத்தில் செவ்வாய் அபரிதமான திறமைசாலி. சிம்ம லக்கினக்காரர்கள் கதாநாயகர்கள். மகரம் கும்ப லக்கினக்காரர்கள் கடின உழைப்பாளிகள்.
கடக லக்கினக்காரர்கள் அரசியல் தலைவர்கள், நாட்டாமைகள் மற்றும் தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ரிஷபம் ,துலாம் லக்னக்காரர்கள் கலைப் பிரியர்கள்.
மேஷம் ,விருச்சிக லக்னகாரர்கள் போராட்ட குணம் இருக்கும். யாருக்கும் பயப்படாத குணம், ராணுவம், போலீஸ் துறையைச் சார்ந்தவர்கள்.
தனுசு, மீனம் லக்கினக்காரர்கள் மிகவும் அறிவாளிகள். போதிக்கும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள். ஆசிரியர்கள், ஆலோசனை வழங்கும் மந்திரிகள் போன்றவர்கள் ஆவர்.
கன்னி லக்கினக்காரர்கள் மற்றவர்களை எளிதாக கவர்ந்து இழுத்து விடுவார்கள்.
மிதுன லக்கினக்காரர்கள் மிகவும் அழகானவர்கள். மிதுனத்தில் சுக்கிரன் நின்றாலும் மற்றும் பார்த்தாலும் தீர்க்க புகழுடன் வாழ்வார்.
சூரியன் மற்றும் குரு பகவான் இணைந்து சிம்மம் அல்லது தனுசுவில் இருக்கும் சாதகர் ராஜ யோகம் உடையவர்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் புதன் மற்றும் கேது இருந்து குருவால் பார்க்கப்பட்டால் தாய்மாமன் உதவி பரிபூரணமாக கிடைக்கும்.
லக்னத்தில் குரு பகவான் மற்றும் புதன் பகவான் திக்பலம் பெற்று திகழ்கிறார்.லக்கனத்தில் குருவையும், புதனையும் டிப் பலமாக பெற்றவர்கள் சிறந்த கல்வியாளராகவும் மற்றும் வித்தையில் சாதுர்யம் மிகுந்தவர்களாகவும் காணப்படுவர்.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
. 8402570899
My website
www.astroravichandransevvai.in
அன்புடன்
ஜோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி ,
புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment