Thursday, 10 June 2021

ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சாதக அமைப்பு.

 ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஜாதக அமைப்பு.


                          


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவரது ஜாதகத்தில் நோய் நொடியை அறிய உதவும் ஸ்தானம் "சத்ரு ஸ்தானம்"என்று அழைக்கப்படும் "ஆறாமிடம்" ஆகும்.


  ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது நோய்நொடி, பிணி பீடை கடன் ,வம்பு ,சண்டை மற்றும் வழக்கு போன்றவற்றை அறிய உதவும் ஸ்தானம் ஆகும்.


  ஒருவர் ஜாதகத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக பெற அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று கேந்திர மற்றும் கோணங்களில் நின்று ஆறாம் இட அதிபதி பலம் குன்றி காணப்படும்.


  பொதுவாக லக்கனம் மற்றும் ராசிக்கு ஆறாம் இடம் மற்றும் அதிபதி வலுப்பெறக்கூடாது.

அவ்வாறு வலுப்பெற்று நிற்பின் லக்கனாதியும் பலமடைந்து நின்றால் ஆறாமிட அதிபதி தசை காலங்களில் என்ன நோய் வந்தாலும் அந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் அந்த நோயின் தாக்கத்தைக் தாங்கி நின்று அந்த காலகட்டம் கடந்த பிறகு மீண்டும் புத்துயிர் பெறுவார்கள்.


  எவர் ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் இழந்து, ஆறாம் வீட்டு அதிபதி பலம் பெற்று அதன் தசா புக்தி நடக்கக் கூடிய காலங்களில் ஜாதகர் மிகுந்த நோயின் பாதிப்புக்கு உள்ளாகி விடுவார்.


  லக்கனாதிபதி உச்சம்,முல திரிகோணம், ஆட்சி மற்றும் திக் பலம் போன்ற நிலைகளில் பலமடைந்து கேந்திர மற்றும் கோணதிபதிகள் தொடர்பு பெற்று ,இயற்கைச் சுபக்கிரகமான குரு, வளர்பிறை சந்திரன் , தனித்த புதன்  மற்றும் சுக்கிரன் ஆகியவை போன்ற கிரகங்களின் தொடர்பினை பெற்று , கேந்திர கோணங்களில் அமர்ந்து உள்ள நிலையில் நோய் எதிர்ப்புச் சக்தி (immunity power) இயற்கையாக ஜாதகரிடம் நிரம்பி காணப்படும்.இது போன்ற அமைப்பினை ஜாதகத்தில் பெற்றவர்கள் Covid-19 போன்ற பெருந்தொற்றிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் நோய் எதிர்ப்புச் சக்தியை நிரம்ப பெற்றிருப்பார்கள்.


   ஒருவருக்கு என்னதான் நோய் வந்தாலும் அதை தாங்கக்கூடிய பெரும் சக்தி லக்னாதிபதியை பொறுத்தே அமைகிறது. லக்கனாதிபதி  வலுப்பெற்று  இருந்தால்அந்த நோய்பிணி காலத்திற்கு உகந்த கிரக அமைப்பு வரும்பொழுது நோய் வந்தாலும் அதை தாங்கிக்கொள்ளும் உடல் வலிமை  ஜாதகருக்கு இருக்கும். லக்னாதிபதி பலம் இழந்து நின்றால் (அதாவது நீசபங்கம் பெறாமல் நீசம் அடைந்த நிலை, சுபத்துவம்  பெறாமல் மறைவிடங்களில் நிற்கும் நிலை அல்லது பாவகிரகங்கள் உடன் இலக்கினாதிபதி சேர்ந்த நிலை ) சத்ரு ஸ்தானம் தொடர்புடைய தசா புத்தி காலங்களில் நோய் வரும்பொழுது அதை தாங்கிக்கொள்ளும் உடல் வலிமை இல்லாமல் மிகவும் பலவீனமாகி விடுவார்.



நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப்

   9715189647

      செல்

  9715189647

‌.  7402570899


My website

   www.astroravichandransevvai.in


                           



 அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,

கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: