Thursday, 10 June 2021

சோதிடம் பயில்வோம்- (1 ))

ஜோதிடம் பயில்வோம்


                       


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒருவரது ஜாதகத்தை 12 ராசிகளாக பிரித்து ஒரு ராசிக்கு 9 பாதம் அடங்கிய 27 நட்சத்திரம் ஒதுக்கப்படுகிறது.

          மேஷ ராசி

அசுவதி, பரணி கார்த்திகை முதல் பாதம் ,


                ரிஷப ராசி


கார்த்திகை ,ரோகிணி மிருகசீரிடம் முதல் இரண்டு பாதங்கள்,


             மிதுன ராசி


மிருகசீரிடம் பின் இரண்டு பாதங்கள், திருவாதிரை புனர்பூசம் முதல் மூன்று பாதங்கள் -


               கடக ராசி

 புனர்பூசம் நான்காம் பாதம்,  பூசம், ஆயில்யம்  முழுவதும்.

            சிம்மம் ராசி

மகம், பூரம் ,

உத்திரம் முதல் பாதம் முடிய ,

           கன்னி ராசி

 உத்திரம் பின் மூன்று பாதங்கள், அஸ்தம் சித்திரை  முதல் இரண்டு பாதங்கள் முடிய,   

              துலாம் ராசி 


           சித்திரை பின் இரண்டு பாதங்கள், சுவாதி விசாகம்  முதல் முன்று பாதங்கள் முடிய ,


        விருச்சிகம் ராசி

 விசாகம் நான்காம் பாதம்,

அனுஷம் ,கேட்டை  முழுவதும்,

           தனுசு ராசி

மூலம், பூராடம் உத்திராடம் முதல் பாதம்

              மகரம் ராசி

உத்திராடம் பின் மூன்று பாதங்கள், திருவோணம்

  அவிட்டம் முதல் இரண்டு பாதங்கள் முடிய ,


         கும்பம் ராசி

அவிட்டம் பின் இரண்டு பாதங்கள், சதயம், பூரட்டாதி முதல் மூன்று பாதங்கள்

      மீனம் ராசி


 பூரட்டாதி நான்காம் பாதம் , உத்திரட்டாதி மற்றும் ரேவதி 



  ஒரு ராசி 30 பாகை வீதம் பன்னிரெண்டு ராசிகளும் 369 பாகைகள் கொண்டது.

ஒரு நட்சத்திரம் நான்கு பாதங்கள் கொண்டது.ஒரு முழு நட்சத்திரமானது 

13 பாகை 20 கலை கொண்டது.

 ஒரு நட்சத்திர பாதம்

 3 பாகை 20 கலைகள் கொண்டது.


ஆட்சி வீடுகள்


 செவ்வாய் பகவான் மேஷத்தையும்,

விருச்சிகத்தை ஆட்சி வீடாகும்,


சுக்கிரன் பகவான்  ரிஷபம் மற்றும் துலாம் ராசியை ஆட்சி வீடாகவும்,


 புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னியை ஆட்சி வீடாகவும்,


 சந்திரன் கடக வீட்டையும்,


 சூரியன் சிம்ம வீட்டையும் ஆட்சி வீடாகவும்,


 குரு பகவான் தனுசு மற்றும் மீனத்தை ஆட்சி வீடாகவும் ,


சனி பகவான் மகரம் மற்றும் கும்பத்தின் ஆட்சி வீடாகவும் கொண்டுள்ளது.


உச்சம் மற்றும் நீச வீடுகள்


 சூரியன் பகவான் மேஷத்தில் உச்சம் ஆகவும், அதற்கு ஏழாம் வீடான துலாத்தில் நீசம் ஆகவும் அமைகிறது.


 அதேபோல சந்திரன் ரிஷபத்தில் உச்சம் விருச்சிகத்தில் நீச்சம் ஆகவும் உள்ளது.


 செவ்வாய் மகரத்தில் உச்சம் கடகத்தில் நீசம் ஆகவும் உள்ளது.


 குரு பகவான் கடகத்தில் உச்சமும் மற்றும் மகரத்தில் நீசமும் உள்ளது.


 சனி பகவான் துலாத்தில் உச்சம் ஆகவும், மேஷத்தில் நீசம் ஆகவும் உள்ளது .


புதன் பகவான் கன்னியில் உச்சமாகவும் மற்றும் மீனத்தில் நீசம் ஆகவும் உள்ளது.


 ராகு மற்றும் கேது பகவானுக்கு விருச்சிகம் உச்ச வீடாகும் ரிஷபம் நீச வீடாகவும் கருதப்படுகிறது இதில் சில மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.


திக் பலம்


  லக்கனத்தில் குரு பகவானும் மற்றும் புதன் பகவான், நான்காமிடத்தில் சந்திரன் மற்றும் சுக்கிர பகவானும், ஏழாமிடத்தில் சனி பகவானும், பத்தாம் இடத்தில் சூரியனும் மற்றும் செவ்வாயும் திக் பலம் பெறுகின்றன. இந்தத் திக் பலம் பெற்ற கிரகங்கள் தங்களது ஏழாம் வீட்டில் நிஷ் பலம் பெறுகிறது.நிஷ் பலம் பெற்ற கிரகங்கள் தனது பலத்தை இழந்து நிற்கிறது.


இயற்கை சுப கிரகங்கள்


    குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் முதலிய கிரகங்கள் ஆகும்.இக்கிரகங்கள் தான் பார்த்த இடத்தில் சுபத்தப்படுத்துவதோடு , பார்க்கப்படும் ஒரு கிரகத்தின் வலிமையை உயர்த்துகிறது.


இயற்கை பாவ கிரகங்கள்


 சனி, செவ்வாய், ராகு கேது போன்றவை பாவ கிரகங்கள் ஆகும்.இக்கிரகங்கள் தான் பார்த்த இடத்தை பாவத்துபடுத்துவதோடு பார்க்கப்படும் கிரகத்தின் வலிமையை குறைக்கிறது.


தசா அமைப்புகள்


  ஒருவரின் பரம ஆயுள் 120 ஆண்டுகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஒன்பது சமமற்ற பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.


சூரிய திசை 6 வருடம்,


 சந்திர தசை 10 வருடம்


 செவ்வாய் திசை 7 வருடம்


 ராகு தசை 18 வருடம்


 குரு தசை 16 வருடம் 


சனி திசை 19 வருடம்


 புதன் திசை 17 வருடம்


 கேது திசை 7 வருடம்


 சுக்கிர திசை 20 வருடம்.


  தசா நாதன்


சூரியதசை


 கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு முதலில் சூரிய திசை வரும்.


சந்திரதிசை 


ரோகிணி ,அஸ்தம் திருவோணம் போன்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் சந்திர தசை உங்களுக்கு வரும்.


செவ்வாய் தசை


 மிருகசீரிடம், சித்திரை அவிட்டம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதலில் செவ்வாய் தசை உங்களுக்கு வரும்.


 ராகு தசை 


திருவாதிரை, சுவாதி சதயம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதலில் ராகுதசை உங்களுக்கு வரும்.


குரு தசை


புனர்பூசம், விசாகம் பூரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதலில் குருதசை உங்களுக்கு வரும்.


 சனிதசை


 பூசம், அனுஷம் உத்திரட்டாதி  போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதலில் சனிதசை உங்களுக்கு வரும்.


புதன்தசை


 ஆயில்யம் ,கேட்டை ரேவதி  போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதலில் புதன் தசை உங்களுக்கு வரும்.


கேது தசை 

அசுவதி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதலில் கேது தசை உங்களுக்கு வரும்.


 சுக்கிர தசை


 பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதலில் உங்களுக்கு சுக்கிர திசை வரும்.


தொடர்ந்து அடுத்த பதிவில் பார்ப்போம்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப்

   9715189647


     செல்

  9715189647

‌.  7402570899


My website

  www.astroravichanransevvai.in


                           


அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

    M.Sc,M.A,BEd

 (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,

கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: