மனநலம் (Mental Health)
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் ஜாதகத்தில் மன நலத்திற்கு நவகிரகங்களில் சந்திர பகவானுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.
சந்திரனுக்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை இருப்பதுபோல மனதிற்கும் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டு பக்கம் உண்டு.
ஒரு மனிதனுக்கு ஏற்படும் பயம், பீதி, கவலை, பொறாமை, எரிச்சல், தாழ்வு மனப்பான்மை மற்றும் உயர்வு மனப்பான்மை போன்றவை ஏற்பட நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இவை அனைத்தும் மனம் போடும் தப்பு தாளங்கள் ஆகும்.
இதேபோல முன்னுணர்வு (intution), தன்னம்பிக்கை
(Confidence),மன முதிர்ச்சி (Maturity) போன்றவை மனம் போடும் விந்தைகள் ஆகும்.
மன அழுத்தம் (Stress),மன முறிவு, மனப்பிறழ்வு ,multiple pesonality,Spilit pesonality போன்றவை மனதால் விளையும் நோய்களாகும்.
பைத்திய தன்மைக்கும், நிறைமதிக்கும்
(பொளர்ணமி) நெருங்கிய தொடர்பு உண்டு .
முழுமதி காலங்களில் பைத்தியக்காரரிடம் பைத்தியதன்மை அதிகரிக்கிறது.
மனோகாரகன் சந்திரன் ஆனவர் சனி மற்றும் ராகுவுடன் இணைந்து சுபத்துவம் பெறாத நிலையில் அவர் பைத்தியக்காரனாக இருப்பான்.
மனநிலை காரகன் சந்திரனுடன் சனி மற்றும் ராகு போன்ற பாவ கிரக இணைவு 8 பாகைக்குள் இருப்பின் அவரது மனதில் தேவையில்லாத பயம், பீதி, உறுதியற்ற மனநிலை உடையவராக இருப்பார்.
சந்திரன், சனி மற்றும் ராகு பகவான் எட்டு பாகைக்குள்ளாக இணைந்து செவ்வாய் பார்வை செய்தால் வேறு ஏதேனும் சுபத்துவம பெறாத நிலையில் ஜாதகரது மூளை பாதிக்கப்படும்.
குருபகவானும், சனியும் இணைந்து ஆறாமிடத்தில் காணப்பட்டாலும் மனநிலை காரகன் சந்திரன் இரு பாவர்கள் மத்தியில் அகப்பட்டுக் கொண்டாலும், சந்திரன் புதனுடன். இணைந்து ஆறாம் இடத்தில் அமையப் பெற்று பாவர்களுடைய பார்வை பெற்றாலும் அவர்களுக்கு மனநோய் ஏற்படுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் இலக்கினாதிபதியே அச்சாணியாக செயல்படுகிறார். ஒருவருடைய உறுதியான மனநிலைக்கு லக்கினாதிபதியின் வலிமையும் மற்றும் சந்திரன் வலிமையையும் மிக முக்கிய காரணமாகும்.
ஒருவரது ஜாதகத்தில் இலக்கினாதிபதியானவர் மறைவிட ஸ்தானமான எட்டாம் இடத்தில் மாந்தி மற்றும் ராகுவுடன் சேர்ந்து பஞ்சமாதிபதியும் நீசமடைந்து இருந்தால் சாதகர் பிறவியிலேயே மூளை வளர்ச்சி இல்லாமல் கை ,கால் விளங்காமல் பிறந்து இறப்பார்.
ஒருவருக்கு ஏழரைச் சனி காலத்தில் ஜென்ம சனியில் ஜென்ம நட்சத்திரத்தில் சனி பகவான் வாசம் செய்யும் காலத்தில் தேவையில்லாத பயம்,பீதி மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
. 7402570899
My website
www.astroravichandransevvai.in
அன்புடன்
சோதிடர்
சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் , கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment