துல்லியமான சாதகப் பலனைப் பெறுவது எப்படி?-உதாரண ஜாதகம் விளக்கம்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவரது ஜாதகத்தில் பன்னிரெண்டு ராசி கட்டத்தில் ஒன்பது கிரகங்கள்
எந்த நட்சத்திர சாரம் வாங்கி எத்தனையாவது பாகை மற்றும் கலையில் எவ்வித ஷட் பலம் பெற்று அமர்ந்து உள்ளது என்பதை ஆராய்ந்து நடக்கின்ற தசா புக்தி மற்றும் கோச்சார பலா பலன்களுக்கு ஏற்ப இறை அருளுடன் தற்போது எந்த விஷயத்திற்காக ஜாதகர் ஜாதகம் பார்க்க வந்திருப்பார் என்பதனை யூகித்து கண்டறியக்கூடிய திறமையை ஜோதிடர்களாகிய நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிரகம் தனித்து நிற்கும் போது, அந்த கிரகம் நிற்கின்ற வீட்டிற்கும் மற்றும் அவரவர் லக்கனத்திற்கு ஏற்பவும் ஒருவிதமான பலனையும் மற்றும் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து அல்லது பார்வை பெறும் அமைப்பில் நிற்கின்ற பொழுது ஒருவிதமான பலனையும் மற்றும் நிற்கின்ற வீடு , அதன் அதிபதி மற்றும் அவை பெற்ற சார நாதன் வலிமை ஆகியவற்றை பொறுத்து பலன் தருகின்ற அமைப்பை பெறுகிறது.
ஒரு கிரகமானது தனது ஆதிபத்திய பலன்களை அதன் தசை நடக்கும் போது மட்டுமே தரக்கூடிய தகுதியை பெறுகிறது.ஆனால் அதன் காரக பலன்களை வாழ்நாள் முழுவதும் தருகிறது.
ஒரு கிரகம் தனித்து நின்றாலும், பாவர்களுடன் சேர்ந்து இருந்தாலும் மற்றும் மறைவிடங்களில் நின்றாலும் இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறை சந்திரன் , தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் தொடர்பினை பெரும் பொழுது அவை சுபத்துவ நிலையை அடைந்து நல்ல பலனைத் தர ஆரம்பிக்கிறது.
சில ஜாதகங்களை மேம்போக்காக பார்க்கின்ற பொழுது அவ யோகம் நிறைந்த ஜாதகமாக தெரிந்தாலும் நன்றாக உற்று நோக்கி ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது ஏதோ ஒருவிதமான சுபத்துநிலையில் பலமடைந்து அந்த கிரகத்திற்கு உரிய காரக மற்றும் ஆதிபத்தியம் பலன்களை சிறப்பாக தந்துவிடுகிறது.
ஒரு சில ஜாதகங்களைப் பார்க்கும் பொழுது முக்கிய ஸ்தானங்களில்
பாவ கிரகங்கள் இணைந்து நின்று அந்த பாவத்தையும் மற்றும் அதற்குரிய காரக பலனையும் பாவத்துவமாக்கி கெடுப்பது போல தோன்றினாலும் ஒற்றை குரு பார்வை அல்லது சுப கிரக தொடர்பானது அந்த பாவத்தையும் மற்றும் கிரகத்தையும் சுபத்துவம் ஆக்கி நல்ல பலனைத் தர வைத்துவிடுகிறது.
என்னிடம் சாதம் பார்க்க வந்த ஒரு நபருடைய ஜாதகத்தில் துலா லக்னம் மூன்றாம் இடத்தில் சனி பகவான் ஐந்தாமிடத்தில் செவ்வாய் இராகு பகவான் எட்டு பாகைக்குள் நெருக்கமாக இணைந்து பாவத்துவ நிலையை அடைந்த நிலையில் உள்ளார்.
லக்கனத்திற்கு ஐந்தாம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.புத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ராகு இணைந்து பாவத்துவ நிலையை அடைந்து தனுசில் உள்ள சனி பகவான் மூன்றாம் பார்வையாக ஐந்தாம் இடத்தைப் பார்த்து மிகுந்த பாவத்து நிலையை அடைந்து உள்ளார்.இந்த நிலையை மட்டுமே பார்த்து புத்திர தோஷம் என பலன் அளித்தால் நாம் கூறும் பலன் தவறாகப் போய்விடும்..இவர் திருமணமானவுடன் காலதாமதம் ஆகாமல் இரண்டு ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார்.
எப்படி இவை சாத்தியம் என ஆராய்ந்து பார்த்தால் இவரது ஜாதகத்தில் புத்திர காரகன் குரு பகவான் லக்னத்துக்கு ஏழாம் இடமான மேஷத்தில் நட்பு நிலையில் அமர்ந்து ஒன்பதாம் பார்வையாக மூன்றாம் இடத்தில் உள்ள புத்திர ஸ்தானாதிபதியான சனியை பார்த்துள்ளார். இதனால் சனி சுபத்துவம் அடைந்து தன்னுடைய கெட்ட பார்வை நீங்கி அதாவது தீய சக்தி வடிகட்டப்பட்ட சனியின் பார்வை ஐந்தாம் இடத்தில் விழுந்து உள்ளது.
ஐந்தாமிடத்தில் செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகம் இருந்தாலும் ஐந்தாம் அதிபதியும் மற்றும் புத்திர ஸ்தானாதிபதியான சனியை, புத்திரகாரகன் குருவால் பார்க்கப்பட்ட நிலையில் புத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டாலும் , ஜாதகத்தில் புத்திர ஸ்தானதிபதியும் மற்றும் புத்திர காரகன் குரு பகவானும் பாதிக்கப்படாத நிலையில் 80 மதிப்பெண் பெற்று உள்ள நிலையில் மேற்கண்ட புத்திர தடை நீங்கி உள்ளது.
என்னுடன் ஜாதகம் பார்க்க வந்த மற்றொரு உதாரண ஜாதகத்தை எடுத்துக் கொண்டு விளக்குவோம்.
இவரது ஜாதகத்தில் மேம்போக்காக பார்க்கும்போது திருமணம் செய்வதற்கு உகந்த ஸ்தானமான இலக்கணம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் , களத்திர ஸ்தானமான ஏழாம் இடம்,, மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய ஸ்தானங்களும் மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் பாவ கிரகங்கள் உடைய தொடர்பினை அதிலும் குறிப்பாக சனி, செவ்வாய் ,ராகு மற்றும் கேது தொடர்பு பெற்றிருந்து திருமண ஸ்தானம் பாதிக்கப்பட்டு இருப்பது போல் தோன்றினாலும் ஒற்றை குருபார்வை அனைத்தையும் சுபத்துவம் நிலையை அடைய வைத்து விட்டது.
இவரது ராசி கட்டத்தில் மேஷ லக்கினம் மற்றும் துலாம் ராசி மற்றும் சுவாதி நட்சத்திரம்
கிரக நிலைகள்
இரண்டாம் இடத்தில் கேது , ஏழாம் இடத்தில் குரு சந்திரன், எட்டாம் இடத்தில் ராகு, பத்தாம் இடத்தில் புதன் மற்றும் லாப ஸ்தானமான 11ம் இடத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சனி ஆகிய நான்கு கிரகங்கள் சேர்ந்து அமர்ந்துள்ள நிலை.
இவரது ஜாதகத்தில் லக்கனப்படி பார்த்தால் கும்பத்தில் உள்ள சனி மூன்றாம் பார்வையாக லக்கினத்தை பார்க்கிறது. அதேபோல கும்பத்தில் உள்ள செவ்வாய் நான்காம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேது பகவானை பார்க்கிறது. லக்கினத்திற்கு ஏழாம் இடம் அதிபதி மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் பகவான் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்கள் இடையே நெருக்கமான தொடர்பை பெற்றுள்ளது. எட்டாம் இடத்தில் ராகு பகவான் அமைந்துள்ளது.
ராசி அடிப்படையில் பார்த்தால்
ராசி நாதன் சுக்கிரன் ஆனவர்
சனி பகவான் மற்றும் செவ்வாயுடன் இணைந்து பாவத்துவம் அடைந்து உள்ளது. இரண்டில் ராகு அமர்ந்து இரண்டாம் இடத்தை செவ்வாய் உடன் இணைந்து பாவத்துவமான சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் பார்த்து குடும்ப ஸ்தானத்தை பாவத்துவமாக்கி மேலும்
குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் சனியுடன் நெருங்கிய தொடர்பு , மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்து உள்ள நிலை.
களத்திர காரகனான சுக்கிரனும்
பாவ கிரகங்களான சனி , செவ்வாய் ஆகிய இரண்டு பாவ கிரகங்களுடன் நெருக்கமாக இணைந்து பாவத்துவ நிலையை அடைந்துள்ளது.
திருமணம் தொடர்பான கேள்விக்கு
ராசி மற்றும் லக்கினம் ஆகிய இரண்டு வகைகளிலும் குருபகவானை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மிகுந்த பாவத்துவத்தை அடைந்துள்ளதால் இவருக்கு இளவயதில் திருமணம் நடக்க வாய்ப்பில்லை. திருமணம் 35 வயதுக்கு மேல் காலதாமதம் ஆகலாம் என பதில் அளித்து விடலாம் .ஆனால் இவரது ஜாதகத்தில் குரு பகவானுடைய ஒற்றை பார்வை அனைத்தையும் சுபத்துவ படுத்தி இளவயதிலேயே திருமணத்தையும் மற்றும் புத்திர பாக்கியத்தையும் தந்துள்ளது.
மேஷ லக்கினத்திற்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ள சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களும் தனது மூன்றாம் மற்றும் நான்காம் பார்வையால் லக்கனம் மற்றும் குடும்பத்தை பார்த்தாலும்,
குருபகவான் இலக்கணத்தையும், இந்த பாவ கிரகங்களான செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களையும் பார்த்ததினால் சுக்கிரனும் சுபத்துவம் ஆகி அந்த பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் குரு பார்வையால் இலக்கணம் மற்றும் இரண்டாம் இடமும் சுபத்துவம் ஆகிவிட்டது.
ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராகு அமர்ந்து செவ்வாய் உடன் நெருக்கமாக அமர்ந்த சனி பகவானால் பார்க்கப்பட்டாலும் குருவால் பார்க்கப்பட்டால் சனி என்பதால் அதன் தீய சக்தி வடிகட்டப்பட்டு பார்க்கப்படும் என்பதால் எவ்வித கெடுதலும் இல்லை.குடும்ப மற்றும் களத்திர ஸ்தானாதிபதியும் மற்றும் களத்திர காரகனுமான சுக்கிர பகவானை குரு பகவான் பார்த்தாலும் சுபத்துவம் அடைந்து விட்டது.
மேற்கண்ட வகையிலான ராசி மற்றும் லக்கனம் ஆகிய இரண்டு வகையிலான பாவத்துவமானது ஒற்றை குரு பார்வையால் நீங்கி சுபத்துவம் அடைந்து இளவயதில் திருமணத்தை கொடுத்துவிட்டது.
எந்த ஒரு ஜாதகத்தையும் மேம்போக்காக பார்க்காமல் அலசி ஆராய்ந்து பார்க்கும் பொழுது தான் அதன் பலாபலன் மாறுவதை காணலாம். இதில் கிரகங்கள் பெற்றுள்ள பாகை (degree) அடிப்படையிலும் ஆய்வு பார்வயினை நாம் திருப்பினால் துல்லியமான பலனை பெறலாம்.
நன்றி.
வாட்ஸ் அப் & செல்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்M.SC,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My gmail : masterastroravi@gmail.com
No comments:
Post a Comment