ஜெனன கால திசையும்,கோசார பலனும்"
கிரகங்கள் படுத்தும் பாடு -( 136 )
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
ஒரு நபருக்கு சாதகம் பார்த்து பலன் உரைக்கும்போது ஜெனன கால அடிப்படையிலான திசை பலன் மற்றும் கோசார பலன் என இரு வழிமுறைகளில் கவனிக்கப்பட வேண்டும்.
ஒரு நபருக்கு சாதகம் பார்த்து பலன் உரைக்கும்போது ஜெனன கால அடிப்படையிலான திசை பலன் மற்றும் கோசார பலன் என இரு வழிமுறைகளில் கவனிக்கப்பட வேண்டும்.
திசை பலன் என்பது மிகவும் முக்கியமானது ஆகும்.திசை பலனை அதிகப்படுத்துவதும் மற்றும் குறைவு படுத்துவதும் கோசார பலனுக்கும் பங்கு உண்டு.
ஒருவருக்கு நடைபெறும் திசையானது நல்ல யோகம் தரக்கூடிய திசையாக இருந்து கோசாரபலனும் நன்றாக அமைய யோகபலன் சிறப்படையும்.
ஒரு நபருக்கு நடைபெறும் திசையானது நல்ல யோகம் தரக்கூடிய திசையாக இருந்தாலும்,கோசாரபலன் சரியில்லையெனில் யோகபலனில் குறைவு உண்டாகும்.
கோசாரம் நன்றாக நல்ல பலனை தந்தாலும் அவனது திசை சரியில்லையெனில் யோகபலனில் பங்கம் உண்டாகும்.
ஒருவருக்கு திசைபலன் மற்றும் கோசாரபலன் இரண்டும் நன்றாக இருப்பின் நடைபெறும் திசையானது யோகபலனை சிறப்பாக தருகிறது.
.
ஒருவருக்கு நடைபெறும் திசையானது மறைவுஸ்தானமான ஆறு மற்றும் எட்டுக்குடைய திசையாகவோ அல்லது அவ்விடங்களில் நிற்கும் அசயர்களான ராகு ,சனி திசையாகவோ இருந்து கோசாரப்படி ஒருவருக்கு அட்டம சனி மற்றும் ஏழரைசனி போன்றவை நடை பெற்றால் சொல்ல இயலாத வேதனைகள் பலவற்றை அனுபவிப்பார்.விதிப்பயனை என்ன செய்ய ?
.
ஒருவருக்கு நடைபெறும் திசையானது மறைவுஸ்தானமான ஆறு மற்றும் எட்டுக்குடைய திசையாகவோ அல்லது அவ்விடங்களில் நிற்கும் அசயர்களான ராகு ,சனி திசையாகவோ இருந்து கோசாரப்படி ஒருவருக்கு அட்டம சனி மற்றும் ஏழரைசனி போன்றவை நடை பெற்றால் சொல்ல இயலாத வேதனைகள் பலவற்றை அனுபவிப்பார்.விதிப்பயனை என்ன செய்ய ?
இதுபோன்ற தருணங்களில் வம்பு,வழக்குகள் ,சண்டை மற்றும் சச்சரவுகள் உண்டாகும்.மேலும் உறவினர்களிடையே சிக்கல்,பொருளாதர நட்டம்,புரிந்துகொள்ளமல் பிரச்சினை ,கடன் ,பிணி மற்றும் குடும்பத்தில் ஒற்றுமை குலைவு போன்ற பலவித பிரச்சினைகளை ஒருவர் சந்திக்க நேரிடும்.
இதுபோன்ற தருணங்களில் சாதகரானவர் முடிந்தவரை பிரச்சினைகள் வரும்போது மனம் தளாராமல் இறைநாமம் செபிக்க துன்பங்களே வந்தாலும் அதனை தாங்கி கொள்ளும் மனவலிமையை இறைவன் அளிப்பார்.
மனிதராக பிறந்த ஒவ்வொறு நபரும் கிரகங்கள் நடத்தும் பாட்டை சந்தித்தே ஆகவேண்டும். கிரகங்களை நமக்கு ஏற்றார்போல மாற்றிக்கொள்ளும் வலிமை நம்மிடம் இல்லை.ஒவ்வொறுவரும் ஏதோ காரணத்திற்காக இவ்வுலகில் படைக்கப்படுகிறான்.
படைப்பின் ரகசியம் படைத்தவனுக்கே தெரியும்.படைப்பின் ரகசியத்தை அறிய உதவுவதே சோதிடம் ஆகும்.மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு மாறாத மாற்றமில்லாதவரை அடைய முயல்வதே வாழ்வின் இரகசிய்ம் ஆகும்..
சோதிடம் என்பது சமய வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையது.நான் யார்? எனக்கு இவ்வுலகில் இட்ட பணி என்ன? அதை நோககி பயணிக்க நான் செய்ய வேண்டியது என்ன ? இதுபோன்ற வினாக்களுக்கு விடைதேடும் முயற்சியில் சோதிடம் மானிடருக்கு உதவுகிறது.
இன்பமும்,துன்பமும் லொளகீக வாழ்வில் ஈடுபடும் சாதரண மனிதனுக்கு உரியது.இதனை சோதிடர் வாயிலாக முன்னரே அறிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல தன்னை தயார்படுத்திக்கொள்ள சோதிடம் உதவுகிறது.ஆன்மீக வாழ்வில் நித்திய பாதைக்கு அழைத்து செல்வதே ஜோதிடவியலின் இன்றியமையாத பணி ஆகும்.
இதற்கான வழிமுறையானது வெளியில் இல்லை.நமது அகத்தில்தான் உள்ளது.புத்த மதம் கூறும் வாசகம் இதுவே
"The way is not in the sky
The way is in the heart "
The way is in the heart "
எப்பொழுதும் மகிழ்சியாக இருக்கும் முல்லா நஸ்ரூதின் அவர்களிடம் நேரிடையாகவே "மகிழ்சியாகவே எப்பொழுதும் காணப்படுகிறீர்களே நஸ்ரூதின் இதன் ரகசியம் என்ன ? என கேட்டனர்.
இதற்கு அவர் தரும் பதில் தத்துவார்த்தமானது.இந்த பதில்மூலம் புலம்பிகொள்ளும் நம்மில் பலருக்குமான விடை கிடைக்கிறது.பதிலை திரும்ப திரும்ப படித்து மனதில் பதிய வையுங்கள்.
பதில் இதுவே
"தவிர்க்க முடியாதவற்றோடு நான் சமரசம் செய்து கொண்டுவிட்டேன்.பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இதை நான் கண்டுகொண்டேன்..வாழ்வில் என்ன நடக்க வேண்டுமோ ,அதுதான் நடக்கும்.அதனால் தவிர்க்க முடியாமல் எது வந்தாலும் ,அந்த சூழலோடு ஒத்துபோக முடிவு செய்துவிட்டேன்.இனி எனக்கு எந்த கவலையும் இல்லை.அதனால் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் " என்றார்.
எனவே சோதிடமானது பலவற்றை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.தவிர்க்க முடியாமல் எது நடந்தாலும் அதற்கான வழிமுறையை தந்து மானிடருக்கு ஆதரவு கரம் நீட்டிக்கொண்டிருக்கிறது.இருப்பதற்கு எதிராக மோதுவதுமில்லை.இல்லாத ஒன்றை தேடி போவதுமில்லை.எதிர்வாதம் புரிபவரிடம் மல்லுக்கு நிற்பதுமில்லை.சோதிடம் அமைதியை நோக்கிய பயணம் ஆகும்.இதில் மற்றவர் ஆதரவையோ அல்லது எதிர்ப்பையோ விரும்பி தேடி போவதுமில்லை.அமைதியை நோக்கியே எமது பயணமும்....
நன்றி.
(தங்களது குடும்ப அங்கத்தினர்களுக்கு சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாகவே பெறலாம்.இதற்கு தாங்கள் தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களுயும் பெறலாம் )
செல்
97 151 89 647
740 257 08 99
97 151 89 647
740 257 08 99
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
97 151 89 647
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC, MA , BEd ,
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC, MA , BEd ,
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
My Email id
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
*******************************
No comments:
Post a Comment