கிரகங்கள் படுத்தும் பாடு-187
மனித வாழ்வில் ஏற்படும் உயர்விற்க்கும்,தாழ்விற்க்கும் கிரகபலன்களே காரணம் ஆகும். இந்த பலன்களை குறைக்கவோ அல்லது தாங்கிக்கொள்கின்ற மனப்பக்குவத்தையோ அல்லது பலனில் சிறு மாற்றத்தை உண்டாக்க கூடிய சக்தி மானிடர்களுக்கு உண்டு.
அவரவர் செய்யக்கூடிய பரிகார பூஜை வழிபாடுகள்,தான தர்மங்கள்,நல்ல எண்ணம்,சொல்,செயல் இவைகளால் மாற்றி அமைக்ககூடிய வழிவகைகள் உண்டு.இதில் குறிப்பிடத்தக்கது "பரிகார பூஜைகள் ஆகும். அவற்றில் ஒரு சில பரிகார வழிபாட்டு முறைகளை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன்.
ஒருவரது ஜாதகத்தில் கடுமையான துன்பத்தையோ,விபத்தையோ அல்லது பிணி மற்றும் பீடையையோ தருவதாக இருந்தாலும் ,மற்றும்
புத்திர பாக்கிய கால தாமதமாக தரக்கூடிய புத்திர தோஷமோ அல்லது திருமணத்தடை போன்றவை ஏற்பட்டாலும்,
புத்திர பாக்கிய கால தாமதமாக தரக்கூடிய புத்திர தோஷமோ அல்லது திருமணத்தடை போன்றவை ஏற்பட்டாலும்,
சில திருமண பொருத்ததங்களில் குறைபாடு இருப்பினும் ,கணவன் மனைவி ஒற்றுமை குறைபாடு இருப்பினும்
இவ்வித பிரச்சினைகளில் இருந்து வெளிவர சோதிடர்களால் கூறப்படும் தீர்வு முறைகள் பரிகாரங்களே ஆகும்.
திருமணத்தடை ஏற்படின் மங்கல்ய தோஷம்,களஸ்திர தோஷம் போன்றவைகள் காரணமாக இருக்கலாம்.
லக்கனம் மற்றும் ராசிகளோடு ராகு,கேது சம்பந்தம், குடும்பாதிபதியுடன ராகு இணைவு மற்றும் எட்டாமிட தொடர்பும் திருமணத்தடையை ஏற்படுத்தும்
பரிகாரங்கள்
ராகு ஸ்தலங்கள் உள்ள திருநாகேஸ்வரம்,பேரையூர,
திருப்பாள்புரம் மற்றும் காளகஸ்தியையோ சென்று பாம்பில் வெள்ளி படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட்டாலே தோஷத்தின் வலிமையை குறைக்கலாம்.
துர்க்கை வழிபாடு,ஆஞ்சநேய வழிபாடு செய்வதன் மூலம் தோஷங்களை போக்கி கொள்ளலாம்.
புத்திரதோஷம்
புத்திரகாரகன் குரு நீசம் ,பகை மற்றும் மறைவு ஸ்தானங்களிலோ இருந்து
புத்திரஸ்தானத்தில் பாவி இருந்து அதன் அதிபதிகளுடன் ராகு,கேது தொடர்பு ஏற்படின் புத்திர தோஷம் ஆகும்.
பரிகாரங்கள்
இத்தோஷமுடையவர்கள் அரச மரம் சுற்றி வந்து சுமங்கலி பெண்களுக்கு பூ,பொட்டு,மஞ்சள் மற்றும் குங்குமம் போன்றவை வைத்து தானம் செய்தால் விதியுள்ள ஜென்மன் பிறப்பான்
மேலும் ராகு கேது ஸ்தலங்களுக்கு சென்று ராகு காலங்களில் வெள்ளியில் பாம்பு படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்தல் தோஷம் நீங்கும்.
சகோதர தோஷம்
ஓருவருக்கு பிறந்த குழந்தையின் குழந்தைக்கு( ஆணாக/பெண்ணாக இருப்பின் ) உடன் பிறந்த சகோதரருக்கு ஆகாது எனில் அது சகோதர தோஷம்.சில நேரங்களில் உடன் பிறந்த சகோதரர் இருக்ககூடாது எனறும் சாதகத்தில் இருப்பின்
(சகோதரஸ்தானம் எனப்படும் மூன்றாம் வீட்டில் ராகு,கேது இருப்பது,சகோதரகாரகன் எனப்படும் செவ்வாயுடன் ராகு,கேது தொடர்பு பெறுவது மற்றும் மூன்றாம் அதிபதி நீசம்,பகை,மறைவுஸ்தானங்களில் இடம்பெறுவது இத்தகைய தோஷத்தை தரும்).
பரிகாரம்
இது போன்ற குழந்தையை இறைவனுக்கு தத்து கொடுக்கும்போது அது சாமி பிள்ளையாகி விடுவதால் அக்குழந்தையால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.ஆனால் அக்குழந்தைக்கு தத்து கொடுக்கும் சாமியின் பெயரினை சூட்டி அக்குழந்தைக்கு நடத்தக்கூடிய அனைத்து சுப காரியத்திற்கும் தத்து கொடுத்த கோவிலில் சாமி கும்பிட்டு வந்த பிறகே நடத்தவேண்டும்.
தார தோஷம்
சிலரது ஜாதகங்களில் ஏழாம் அதிபதி பலம் இழந்து லக்கனாதிபதி மற்றும் பதினொராம் அதிபதி வலுப்பெற்றிருந்தாலும்
களஸ்திரகாரகன் சுக்கிரன் கேந்திரங்களிலே இருந்தாலும்,சனி ஏழாமிடத்தில் இருந்து ஏழாம் அதிபதி வலுவிழந்த சாதகங்களிலும்
லக்கன ராசிகளுடன் ராகு கேது தொடர்புபெற்று ஏழாம் அதிபதி பலமிழந்து 11- ம் இட அதிபதி வலுப்பெற்ற சாதகங்களிலும் தார தோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
பரிகாரங்கள்
இதுபோன்ற அமைப்புடையவர்கள் நமது கலாச்சாரப்படி ஒருவனுககு ஒருத்தி என்ற உயர்கொள்கையை கொண்ட நாம் பரிகாரங்கள் மூலம் தார தோஷத்தை தவிர்த்துவிடலாம்.
திருமணத்தைப்போன்றோ சுப விஷயங்கள் செய்து ஒரு வாழை மரத்திற்கு தாலி கட்டி வெட்டி விடுவதன் மூலம் தார தோஷத்தை தவிர்த்து பிறகு ஒரு பெண்ணிற்கு தாலி கட்டலாம்.
வாழை மரம் வெட்டுவது ஒரு மரத்தை வெட்டுவதற்குரிய பாவம் என்பதால் ஒரு பெண் பதுமை செய்து அதற்கு முறைப்படி தாலி கட்டி பிறகு அதை நீரில் கரைத்துவிடலாம்.
இதேபோல் பெண்ணின் ஜாதகதத்தில் இருப்பின் ஒரு பெண்ணைக்கொண்டு தாலி கட்டி பிறகு அதை நீக்கிவிடல்.
எல்லாவற்றிக்கு மேலாக கோவில்களில் திருமணம் நடத்தி அவ்வாறு திருமணத்தன்று கட்டப்படும் மாங்கல்யத்தை அம்பாளுக்கு சாத்தி பிறகு தாலி பெருக்கிபோடும்போது வேறு ஒரு மாங்கல்யம் போட்டுக்கொள்ளாலாம்.
தத்துக்கொடுத்தல்
பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் தாய் ஸ்தானமாகிய 4-ம் இடமும்,சந்திரனும் பாதிக்கப்பட்டு இருந்தால் தாய்க்கு ஆகாது.
இதேபோல் தந்தை ஸ்தானமாகிய 9-ம் இடமும் ,சூரியனும் பாதிக்கப்பட்டிருந்தால் தந்தைக்கு ஆகாது.
எனவே மேற்கண்ட அமைப்பை பெற்றுள்ள குழந்தையை சாமிக்கு தத்து கொடுப்பதன் மூலம் அவை சாமி பிள்ளை ஆகிவிடுதல் அத்தோஷம் பெற்றோர்களை தாக்காது.
திருமண யோகம் அற்ற சாதகங்களாக இருப்பின்
சிலரது சாதகங்களில் ஏழாமிடத்தில் சுக்கிரன் இருந்து காரகபாவ நாஸ்தி ஏற்படினும்
லக்கன ராசியுடனும் மற்றும் களஸ்திரகாரகன் சுக்கிரனுடன் பாவிகளுக்கு இடையே அகப்பட்டு குடும்பாதியும் கெட்டு இருப்பின் சாதகருக்கு திருமணம் கால தாமதம் ஆகும்.இவர்கள் தஞ்சாவூர் அருகில் உள்ள கண்டியூரிலோ அல்லது பிரம்மா கோவிலுக்கு சென்று பிரம்ம தோஷம் தீர்த்துக்கொள்ளவும்.
கட்டாயம் தேவையானவை
எந்த தோஷம் நீக்கும் போதும் முழுமனதோடு இறைவனை நினைத்து நம்பிக்கையுடன் செய்தால் நாம் அவற்றிலிருந்து விடுபடலாம்.
எந்த ஒரு செயலும் பூர்வ புண்ணிய விதிப்படிதான் நடக்கும் என்றாலும் பரிகாரங்களினால் அவற்றிலிருந்து ஒரளவு விடுபடலாம்.
இன்னும் பாதிக்கப்பட்ட கிரகங்களுக்கு மந்திர ஜெபங்கள் செய்வதன் மூலமும் விடுபடலாம்
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் ; 97 151 89 647
Cell; 740 257 08 99
Cell; 740 257 08 99
Whatsup no
97 151 89 647
97 151 89 647
(Online Astro consult conduct my Cell and Whatsup.
தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)
தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)
My email
masterastroravi@gmail.com
No comments:
Post a Comment