கோசார கிரக நிலைகளும்,ஜெனன கால கிரகநிலைகளும் -(2)
கிரகங்கள் படுத்தும்பாடு - ( 138 )
கிரகங்கள் வான வீதியில் உலா வரும்போது அவை அடையும் இடப்பெயர்ச்சி மூலம் தரும் பலனை கோசாரபலன் என்கிறோம்.அவ்வாறு கிரகபெயர்ச்சி மூலம் ஒவ்வொறு ராசியும் தரக்கூடிய பலனை ராசிபலனாக கணக்கில் எடுத்துக்கொண்டு தினபலன் மற்றும் மாத ராசிபலனை சோதிடர்களாகிய நாங்கள் தருகிறோம்.
இவ்விரு பலன்களையும் அவரவர் ஜெனன காலத்தில் உள்ள ராசி அடிப்படையிலான ஜெனன கால கிரகநிலைகளோடு ஒப்பிட்டு பார்த்து பலனறியவேண்டும்.
பத்திரிக்கை,சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் தரக்கூடிய தினபலன் /கிரகபெயர்ச்சிபலன்/புதுவருடபலன் போன்றவைகள் அன்றைய நிலையில் வான வீதியில் நவகிரகங்கள் உலாவரும் கிரகங்களின் ஸ்தான ,சேர்க்கை மற்றும் பார்வை அடிப்படையில் தரக்கூடிய பொதுபலன்கள் ஆகும்.அப்பலாபலன்களை அவரவர் ராசிக்கு ஏற்பவும் மற்றும் ஜெனன கால கிரகநிலைகளுக்கு ஏற்ப ஒப்பிட்டு பார்த்துதான் பலனறியவேண்டும்.
இதனை ஒரு சிறந்த சோதிட வல்லூனரை கொண்டுதான் தங்களது ராசிபலனை முடிவு செய்துகொள்ளவேண்டும்.இதைவிடுத்து ராசிபலன்களில் கூறியபடி தனக்கு நடக்கவில்லை என வருத்தப்படுவதும் இதனை கொண்டு ராசிபலனே பொய் என வாதாடுவதும் தவறு ஆகும்.
இப்பொதுபலனை அவரவர் ராசிக்கு ஏற்றார்போல பதிலீடு செய்து பார்த்து சோதிடரின் ஞான வலிமையோடு தரக்கூடிய பலன்களை சிறப்புபலன்கள் என்கிறோம்.
எனவே "பொதுபலனை அவரவர் ராசிக்கு ஏற்றார்போல ஒப்பிட்டு பார்த்துதான் பலனை முடிவு செய்துகொள்ளவேண்டும்.உதாரணமாக வருடபிறப்பு மோஷ ராசிபலன்கள் எனில் மோஷராசியில் கோடிக்கான நபர்கள் இனம்,மொழி மற்றும் நாடு கடந்தும் தட்பவெப்பநிலை மற்றும் சூரிய உதயநிலை மாறியுள்ள சூழலில் வெவ்வெறு கிரகநிலை அமைப்புகளோடு பிறந்திருப்பார்கள்.
எல்லோருக்கும் பொருந்தும்படியாக ராசிபலன் அளிப்பது கடினம்.அப்பலனை அவரவர் சூழலுக்கும் மற்றும் கிரகநிலைகளுக்கும் ஏற்றவாறும் ஒப்பிட்டு சிறப்பு பலன்களை அடைய முயல வேண்டும்.
இந்த கோசாரபலன் என்பது தனிநபருக்கு மட்டுமன்று.உலக அளவில் ஏற்படக்கூடிய பொருளாதார ஏற்ற ,இறக்கங்கள் ,அணடை மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே உருவாகும் உறவுநிலைகள் ,வானியியல் மாற்றங்கள்,புயல் ,வெள்ளம்,பூகம்பம் போன்ற பேரிடர்களை கணகிடுதல்,அரசியல் நிலவரங்கள் மற்றும் மக்கள் நிலை போன்ற பல்வேறு விவரங்களை கணிக்கவும் உதவுகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக நீர் ராசியான விருட்சக வீடும் மற்றும் பூமிகாரகனான செவ்வாய் வீட்டில் சனிபகவான் இருந்ததால் பூமியின் சில பகுதிகள் வெள்ள பாதிப்பால் மூழ்கின.அரசியலில் ஆளுமை செய்பவர்களுக்கு சிறப்பாக இல்லை.வரும் ஜனவரி மாதத்தில் தனக்காரகன் ஆன குருபகவான் வீட்டிற்கு செல்லக்கூடிய நீதிகாரகன் ஆன சனிபகவான் ஆனவர் செல்வதற்கு முன்பாக அனைவரையும் வங்கிகணக்கில் பணமே இருந்தாலும் தக்க நேரத்திற்கு உதவாமல் பரிதவிக்கவிட்டது.
அளவுக்கு மேல் பணம் சேர்த்து வைப்பவர்களை தங்களது கருப்பு பணத்தை எவ்வாறு மாற்றலாம் என பரிதவிக்க வைத்துவிட்டது.
இன்னும் ஜனவரி 26 க்கு பிறகு அளவுக்கு மீறிய பணம் வைத்திருப்பவர்கள் பலர் பிடிபடபோகிறார்கள்.மக்கள் கையில் பணம் இல்லாத பரிவர்தனை நடைபெறபோகிறது.யார் கையிலும் பணம் இல்லாமலே மின்னனு பணபரிவர்தனை நடைபெறபோகிறது.யாரும் மறைமுகமாக சேர்த்து வைக்காமல் முறையாக அரசுக்கு வரி கட்டி அரசுக்கு நிதி வருமானம் உயரபோகிறது.நவீன கணிப்பொறி அரங்கில் அளப்பரிய மாற்றங்களும் மற்றும் இணைய வசதியை எல்லோறும் பயன்படுத்தக்கூடிய கட்டாயமான சூழலும் உருவாகபோகிறது.
மார்கழி 15 க்கு பிறகு (வாக்கியபடி ) சுக்கிர பகவான் பெயர்ச்சியடைந்து கும்பவீட்டில் செவ்வாய் +கேது உடன் சனி வீட்டில் நடைபெறும் இணைவு பதுக்கல் பணமான கறுப்பு பணம் பிடிபட வைக்கும்.
இதுபோன்ற நாட்டில் நடைபெறக்கூடிய பிரச்சினைகளையும் அலசி ஆராயலாம்.
இவ்வாறாக சனிபகவான் ஒரு சுற்று முடிக்க முப்பது ஆண்டுகள் ஆகிறது.இதேபால பிற கிரகங்களையும் பார்ப்போம்.
குருபகவான் ஒரு ராசிக்கு ஒரு வருடம் வீதமாக ஒரு சுற்றுக்கு பணிரெண்டு வருடங்களை எடுத்துகொள்கிறார்.
ராகு மற்றும் கேதுபகவான்கள் ஒரு ராசிக்கு 11/2 ஆண்டுகள் வீதமும்,சூரியன்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்கள் ஒரு மாதம் ஒரு ராசி வீதமும் ,செவ்வாய்பகவான் ஒரு ராசிக்கு 11/2 மாதம் விதமும் மற்றும் சந்திரபகவான் ஒரு ராசிக்கு 21/4 நாள் ஒரு சுற்றுக்கு 27 நாட்களும் எடுத்துக்கொண்டு சுற்றிவருகிறது.
எல்லா கிரகங்களும் கடிகார திசையில் (clock-wise ) ல் சுற்றி வர ராகு மற்றும் கேது பகவான்கள் மட்டும் கடிகார எதிர்திசையில் ( anticlock wise ) சுற்றி வருகிறது.எனவே இவற்றிற்கு வக்ரகதி கிடையாது.
எல்லா கிரகங்களும் கடிகார திசையில் (clock-wise ) ல் சுற்றி வர ராகு மற்றும் கேது பகவான்கள் மட்டும் கடிகார எதிர்திசையில் ( anticlock wise ) சுற்றி வருகிறது.எனவே இவற்றிற்கு வக்ரகதி கிடையாது.
நன்றி.
( தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன்வழியாகவே கட்டண முறையில் பெற தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களைஸ்ரீகீழ்கண்ட எனது வாட்ஸ்அப் மெஸ்ஸேஸ் மூலமாகவோ அல்லது இமெயில் முலமாகவோ தகவல்களை தெரிவித்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் )
செல்
740 257 08 99
97 151 89 647
740 257 08 99
97 151 89 647
வாட்ஸ்அப்
97 151 89 647
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
By
AstroRavichandran
M.SC,MA ,BEd,
Omsakthi Asto online consulting centre
Tamilnadu,India.
AstroRavichandran
M.SC,MA ,BEd,
Omsakthi Asto online consulting centre
Tamilnadu,India.
No comments:
Post a Comment