Friday, 22 September 2017

சுக்கிரன் பகவான் தரும் யோக பலன்கள்- ( 3 )

    சுக்கிரபகவானால் தரும் யோக பலன்கள்-(3)

                             
                                   கிரகங்கள்படுத்தும்பாடு -( 117 )

செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியமம்மன் துணை!

               சுககிரன் பகவானோடு இணைந்த மற்றும் பார்க்கும் கிரகங்களின் தன்மையை பொறுத்தே ஒருவரது குணநலன்கள் அமைகிறது.ஒரு சிலர் சமூகத்திற்கு  தனது கீழான நிலையை தெரிந்தாலும் அதைபற்றி சிறிதுகூட வெட்கப்படாமல் பிறர் அறிய காமசுகம் பெறுவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என ஆராய்ந்து அதுபோன்ற பலரது சாதகங்களை உற்றுநோக்கியபோது அவர்களது சாதகத்தில் லக்கனாதிபதி கெட்டுவிடுவதோடு மனதுக்காரன் சந்திரனும் கெட்டு   கீழ்கண்ட அமைப்புகளும் அவரது சாதகங்களில் காணப்படலாம்.

                 சுக்கிரனுடன்,மனதுக்காரகன் சந்திரன் மற்றும் ராகு இணைவு காம உணர்வை ஒருவருக்கு தூண்டி தவறாக நடக்கதூண்டும்.

                  இதேபோல சுக்கிரனுடன் ,காம வீர்யத்தை உருவாக்கும் செவ்வாய் மற்றும் ராகு சேர்ந்துள்ள அமைப்பை பெற்றவர்கள் மானம் கெட்ட காம உணர்வை தரவல்லது.

              சுக்கிரனுடன் சனி சேர்ந்து லக்கனாதிபதியும் பலவீனப்பட காமலீலைகள் மேலோங்கி காணப்படுவர்.
                                
சுக்கிரனுடன் செவ்வாய் சேர்ந்து லக்கனாதிபதி பலவீனப்படல்.
ஒரு மனிதனுக்கு காமம் என்பது அடிப்படையான உணர்வு.உலக உயிர்களின் பிறப்பிடமே இந்த செக்ஸ் உணர்வு.பசி,தூக்கம் மற்றும் தண்ணீர்தாகம் போல காமமும் ஒரு உணர்வு.பசி வந்தால் சாப்பிடுவதுபோல ,தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பது போல காம உணர்வு வந்தால் வந்தவுடனே வெளிப்படுத்த முடியாது.ஏனெனில் இந்த தாகமானது இன்னொறு உயிரின் பிறப்பிடமாகும்.
இதற்கு சமூகத்தில் நெறிப்படுத்தப்பட்ட வழிமுறை உள்ளது அவைதான் திருமணம் எனும் பந்தமாகும்.

                             


                உனது காமத்தை முறையாக வெளிப்படுத்த,பிறக்கும் இன்னுமொரு உயிருக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ள மற்றும் சமூகத்தால் அங்கீகரிக்கபபட்ட முறைதான் இந்த திருமணம் எனும் அமைப்புமுறை.உனது காமத்தை ஒழுங்காக வெளிப்படுத்த அதன் மூலம் உறவுகள் வளரத்தான் இந்த திருமணம் எனும் நிகழ்வுக்கு இவ்வளவு சடங்குகள் மற்றும் சம்பர்தாயங்கள் ஆகும்..

             நீ வெளிப்படுத்தும் காம உணர்வை தாங்கி கொள்பவளாக, உமது உடல்நலத்தின் மூலம் அக்கறை கொண்டவளாக ,உமது எதிர்காலம் கடைசிவரை கைகோர்த்து வரும் பந்தம் மனைவி ஒருவளேயாகும்..

'"ஒருவனுக்கு ஒருத்தி "எனும் உயரிய கொள்கைகளை நமது முன்னோர்கள் வரையறுத்ததும் இதனால்தான்.

                         


ஒருவன் மனைவியிடம் மட்டும் காமசுகம் பெற;-


                       அவனது சாதகத்தில் சுக்கிரபகவான் ஆனவர் மூன்றாமிடம்,ஐந்தாமிடம்,ஏழாமிடம் மற்றும் பணிரெண்டாமிடம் ஆகியஸ்தானங்களோடு பாபர் தொடர்பற்று சுப தொடர்பு கொள்ளும்போது மட்டுமே பெறமுடிகிறது.மாறாக பாபர் தொடர்பு உடன் இடம்பெறும்போது மனைவி அல்லாத பிற வழிகளிலும் 'பல மலரில் தேன் எடுக்கும் வண்டினைப்போலாவார்".

       ஏன் பணிரெண்டு ராசிக்கட்டங்களில் நான்கு ஸ்தானங்களோடு மட்டும் சுக்கிரன் தொடர்பை குறிப்பிட்டேன்.இதுபற்றி எனது முந்தைய பதிவான #செக்ஸ்வாழ்வும்திருமணமும் எனும் பதிவில் விரிவாக விளக்கியிருந்தாலும் மீண்டும் ஒருமுறை விளக்குகிறேன்.

                               




          மூன்றாமிடம்

                        இது செக்ஸ் வீர்யத்தை குறிக்குமிடம்.ஒருவரது விந்து வீர்யம் ,அவனது இயக்கவேகம் மற்றும் நீண்ட நேரம் களவியில் ஈடுபடல்.

           ஐந்தாமிடம்

                    காமம் பற்றிய விதவிதமான கற்பனை."கற்பனையில்லாமல் கட்டில்மேல் சேராதே"எனும் பாடல்வரிப்படி காமம் பற்றிய பலவித வழிமுறை உணர்வை தருமிடம்.

                ஏழாமிடம்


                      உடல் உறவில் உண்டாகும் நாட்டம் மற்றும் ஆசையுணர்வு
#பணிரெண்டாமிடம்
போகசுகம்,சயனசுகம் மற்றும் மெத்தைசுகம்.எந்த முறைமூலம் உடலியல் இன்பங்களை அடையலாம்.
"எந்த இடத்தில் சுகமிகு அதிகம் என கண்டுபிடிப்பேன் அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்"என்ற நிலை.

                       மேற்கண்ட இந்த நான்கு ஸ்தானங்களில் பாவகிரகங்களோடு சுக்கிரபகவான் தொடர்பு பெறும் ஒருவர்தான் சமூகம் வெறுக்கும் காம இன்பங்களை பெறுபவராக உள்ளார்.

                                  


                       இதுபோன்ற சாதக அமைப்புகள் திருமணபந்தத்தில் இணையும் தனது ஜோடிகளுடன் உள்ளது என்பதை தகுந்த சோதிடர்களின் உதவியை நாடி பொருத்தம் பார்த்து பெற்றோர்களாகிய நீங்கள் திருமணபந்தத்தில் இணைத்தால் உங்களது பிள்ளைகளுக்கு பேராபத்திலிருந்து காக்கலாம்.

                 சுக்கிரன் ஒருவரது சாதகத்தில் பலவீனப்பட்டு ராகுபகவானோடு சேரும்போது அவன் காம சுகம் தர மறுப்பவனாகவும் இருப்பான்.அதேநேரத்தில் அத்துடன் இணைந்த ராகுவின் திசைகாலத்தில் இதற்கு மாறாக செயல்படுவான்.

                    ஒருவன் காம உணர்வே அற்றவனாக இருந்தாலும் அவனோடு இணைசேரும் வாழ்க்கை துணைக்கு பிரச்சினையே தரும்.

                      இதுபோன்ற பல விவரங்களை பலரது சாதகங்களில் ஆராய்ச்சியுணர்வில் ஆராய்ந்து பார்த்தபோது அவை உண்மையாக இருக்கத்தான் அறிவியல் பயின்ற எனக்கு ஜோதிட துறைமீதே முழுநம்பிக்கை வந்தது.சோதிடம் என்பது உன்னனத தெய்வீக கலை என்றாலும் அதற்கு செலவிடும் நேரமும் அதிகம் என்பதால் அத்துறைகொண்டு பொருளீட்டலும் அவசியமாகிறது.

         வான்புகழ் கொண்ட வள்ளுவர்கூட
"பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை
அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை"என்றார்.

நன்றி!

(தங்களது சாதகங்களை இதுபோல பல வகையில் ஆராய்ந்து துல்லிய பலனை #போன்வழியாகவே பெற பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸா செய்து கட்டண விபரங்களை வாட்ஸ்அப்பில் பெறவும்)

1-சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் சாதகம் கணித்து எழுதுதல்.

தொடர்புக்கு

                          செல்
                 97 151 89 647
              740 257 08 99

                    வாட்ஸ்அப்:
                  97 151 89 647

                          
By
சோதிடர் ரவிச்சந்திரன்
        M.Sc ,MA ,BEd,
  சோதிட ஆராய்ச்சியாளர்,
Astro online  consulting centre,
Karambakkudi,pudukkottai District.

         My email
   masterastroravi@gmail. com
         astroravichandransevvai@gmail.com

My blog spot
  AstroRavichandransevvai.blogspot.com

....................................   ..................................

No comments: