பால் பொருத்தம் - ஓர் பார்வை
 |
சோதிடர் ரவிச்சந்திரன்-பால் பொருத்தம்-ஓர் பார்வை |
கிரகங்கள் படுத்தும் பாடு- ( 165 )
செவ்வாய்ப்பட்டி
அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!
ஒரு திருமனத்தின் வெற்றியே அவர்கள் திருமணம் ஆன ஒரு சில வருடங்களிலே புத்திர பாக்கியம் உருவாவதை பொறுத்துதான் அமைகிறது.
ஒரு பெண் எப்பொழுது பெண் ஆகிறாள் ? எனில் அவள் பிறக்கின்ற,பூப்பெய்கின்ற மற்றும் திருமணம் ஆகின்ற நாட்களையெல்லாம் விட அவள் தாய்மை தன்மையை அடையும்போதுதான் சமூகம் போற்றும் பெண் ஆகிறாள்.
ஆதலால் தனது பிள்ளைகளுக்கு பொருத்தம் பார்க்கும்போது பால் பொருத்தம் உள்ளதா ? என தீர்க்கமாக சோதிடர்களின் உதவியோடு நன்கு ஆராய்ச்சி செய்து விவாகம் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பால் பொருத்தம் என்பதை விருட்ஷம் பொருத்தம் எனவும் அழைக்கப்படுகிறது.
தம்பதிகளின் நட்சத்திரத்திற்கு வரக்கூடிய மரம் ஆனது பால் உள்ள மரமாக இருப்பின் புத்திரபாக்கியம் தடையில்லாமல் உருவாகும் என்பது சோதிட விதி ஆகும் இது உத்தமம் ஆகும்.
தம்பதிகள் இருவரது நட்சத்திரத்திற்கு உரிய மரத்தில் யாராவது ஒருவருக்கு பால் உள்ள மரமாக இருப்பின் புத்திர தடை உருவாகாது.இவை மத்திபமான பொருத்தம் ஆகும்.
பால் பொருத்தம் இல்லாத தம்பதிகளை இணைக்கலாமா ? என நீங்கள் கேள்வி கேட்பது என் காதில் விழுகிறது.தம்பதிகள் இருவருக்கும் சாதக கட்ட அடிப்படையில் ஆய்வு செய்து பார்க்கப்படும்போது புத்திரதோஷம் இல்லை எனில் தாராளமாக விவாகம் செய்யலாம்.
சாதக அடிப்படையில் கட்டத்தில் புத்திரதோஷம் இருப்பதை எவ்வாறு கண்டறிவது.?
1) புத்திரஸ்தானம எனப்படும் ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்களான ராகு,கேது மற்றும் சனி பகவான் நிற்கிறதா ? என கவனிக்கப்படவேண்டும்.
2) புத்திரஸ்தானாதிபதி அரவுகளான ராகு,கேது சாரம் பெற்றிருக்கிறதா ? அல்லது புத்திரஸ்தானாதிபதி அரவுகளான ராகு,கேதுவுடன் சேர்க்கை பெற்றுள்ளதா ? எனவும் கவனிக்கப்படவேண்டும்.
3) புத்திர ஸ்தானத்தில் ஆறு,எட்டுக்குடைய கிரகங்கள் நிற்கிறதா ? அல்லது ஆறு,எட்டு மறைவிடங்களில் புத்திரஸ்தானாதிபதி நிற்கிறதா? எனவும் கவனிக்கப்படவேண்டும்.
4) புத்திர காரகன் குருபகவான் நீசம்,மறைவிடங்களில் நின்றாலோ, அல்லது குருபகவான் அரவுகளான ராகு, கேது சாரம் பெற்றிருந்தாலோ அல்லது குருபகவான் உடன் ராகு, கேது சேர்க்கை பெற்றிருந்தாலும் புத்திர தோஷம் ஆகும்.
மேற்கண்ட வகையிலான தோஷம் தம்பதிகள் இருவருக்கும் இருந்தால் பால் பொருத்தமே இருந்தாலும் விவாகம் செய்யக்கூடாது. ஏனைய தோஷங்களுக்கு தோஷத்திற்கு தோஷம் பொருத்தம் போட்டாலும் புத்திர தோஷத்திற்கு மட்டும் தம்பதிகள் இருவருக்கும் புத்திர தோஷம் இருந்தால் பொருத்தம் போடக்கூடாது.
பால் பொருத்தமே இல்லை எனினும் தம்பதிகள் இருவருக்கும் சாதக கட்டத்தில் புத்திர தோஷம் இல்லை எனில் தாராளமாக விவாகம் செய்யலாம் என்பது அடியேனின் தாழ்வான கருத்து ஆகும்.
புத்திரதோஷம் பரிகாரம்
புத்திர ஸ்தானத்தோடு ராகு பகவான் தொடர்பு பெறின் புத்திரதோஷம் ஆகும்.தீர்ப்பதற்கு போகர் சீடர் புலிப்பானிதாசன் தனது "புலிப்பானி - 300 பாடலில் 154 வது பாடலில் தரும் பரிகாரத்தை செய்ய தோஷம் விலகி புத்திர சந்தனாத்தை தரும்.
பாடல்
" பாரப்பா யின்னமொன்று பகரக்கேளு
பஞ்சமத்தில் கருநாக மமைந்தவாறும்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திரதோஷம்
தீர்ப்பதற்கு வகைவிவரம் சொல்வேன்மைந்தா
கூரப்பா கோதையுமே அரசுசுத்தி
குற்றாமில்லா கன்னியர்க்கு உத்தமஸ்தானம்செய்து
வீரப்பா விலகுமடா தோஷம் தோஷம்
விதியுள்ள ஜென்மனவன் செனிப்பான்பாரே "
பாடல் விளக்கம்
பஞ்சமஸ்தானமான ஐந்தாம் இடத்தில் கரும்பாம்பு எனப்படும் ராகு பகவான் இருப்பின் புத்திரதோஷம். தீர்ப்பதற்கு விவரம் என்னவெனில் இத்தோஷம் பெற்றவரின் மனைவி அரசமரத்தை சுற்றி வந்து சுமங்கலி பெண்களுக்கு உத்தமஸ்தானம் செய்து வணங்க புத்திரதோஷம் விலகும்.
பாடலில் கூறப்பட்ட உத்தமஸ்தானம் என்பது சுமங்கலி பெண்களுக்கு உரிய மஞ்சள்,தாலிகயிறு,பூ,பொட்டு மற்றும் வஸ்திரம் முதலியவை தாம்பலத்தில் வைத்து கொடுத்து நன்கு வாழ்ந்து செழித்த சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்து வணங்க புத்திரதோஷம் நீங்கும்.
புத்திரதோஷம் இருந்து கர்ம பலனால் சரியாக கணிக்கப்படாமல் மணமான தம்பதிகள் தோஷம் தவிர்க்கப்பட பாம்பில் நாக படம் அடித்து நாகநாத சுவாமி உள்ள திருப்பாள்புரம்,பேரையூர் ,
திருநாகேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி போன்ற ஸ்தலங்கள் சென்று அந்த வெள்ளி நாக படத்தினை சாத்தி சரியான ஆசார அனுஸ்டத்துடன் பூஜை புணர்ஸ்கரம் செய்து இறுதியாக பாலாபிஷேகம் செய்து வர நாகதோஷம் விலகி புத்திர பாக்கியம் உருவாகும் .
நன்றி நன்றி நன்றி
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)
தொடர்புக்கு
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
செல்
97 151 89 647
740 257 08 99
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc ,MA ,BEd
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email
masterastroravi@gmail. Com
My website
AstroRavichandransevvai.blogspot.com
..............................................................................
No comments:
Post a Comment